திருப்புகழ் 1185 மதன தனு நிகர்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1185 madhanadhanunigar  (common)
Thiruppugazh - 1185 madhanadhanunigar - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதன தனத்தா தன
     தனன தனதன தனத்தா தன
          தனன தனதன தனத்தா தன ...... தனதான

......... பாடல் .........

மதன தனுநிக ரிடைக்கே மன
     முருக வருபிடி நடைக்கே யிரு
          வனச பரிபுர மலர்க்கே மது ...... கரம்வாழும்

வகுள ம்ருகமத மழைக்கே மணி
     மகர மணிவன குழைக்கே மட
          மகளிர் முகுளித முலைக்கே கட ...... லமுதூறும்

அதர மதுரித மொழிக்கே குழை
     யளவு மளவிய விழிக்கே தள
          வனைய தொருசிறு நகைக்கே பனி ...... மதிபோலும்

அழகு திகழ்தரு நுதற்கே யந
     வரத மவயவ மனைத்தூ டினு
          மவச முறுமயல் தவிர்த்தாள் வது ...... மொருநாளே

உததி புதைபட அடைத்தா தவன்
     நிகரி லிரதமும் விடுக்கா நகர்
          ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி ...... துயர்தீர

உபய வொருபது வரைத்தோள் களு
     நிசிச ரர்கள்பதி தசக்ரீ வமு
          முருள ஒருகணை தெரித்தா னும ...... வுனஞான

திதமி லவுணர்த மிருப்பா கிய
     புரமு மெரியெழ முதற்பூ தர
          திலத குலகிரி வளைத்தா னும ...... கிழவானோர்

திருவ நகர்குடி புகச்சீ கர
     மகர சலமுறை யிடச்சூ ரொடு
          சிகர கிரிபொடி படச்சா டிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே
இரு வனச பரிபுர மலர்க்கே
... மன்மதனுடைய உடலுக்கு ஒப்பான
(உருவம் இல்லாத) இடுப்பின் மீதும், மனம் உருகும்படியாக வருகின்ற
பெண் யானையின் நடையின் மீதும், இரண்டு தாமரை மலர் போன்ற,
சிலம்பு அணிந்த மலரடிகள் மீதும்,

மதுகரம் வாழும் வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி
அ(ன்)ன குழைக்கே மட மகளிர் முகுளித முலைக்கே
...
வண்டுகள் வாழ்கின்றதும் மகிழம் பூவும் கஸ்தூரியும் அணிந்துள்ளதுமான,
மேகம் போன்ற நீண்ட கூந்தலின் மீதும், ரத்தினங்கள் பதித்த மகர மீன்
போன்ற குண்டல அணியின் மீதும், இள மகளிர்களின் மலர் மொட்டுப்
போலக் குவிந்துள்ள மார்பகத்தின் மீதும்,

கடல் அமுது ஊறும் அதரம் மதுர இத மொழிக்கே குழை
அளவும் அளவிய விழிக்கே தளவு அனையது ஒரு சிறு
நகைக்கே
... பாற்கடல் அமுது போல் இனித்து ஊறும் வாயிதழ் ஊறலின்
மீதும், இனிய பேச்சின் மீதும், குண்டலங்கள் வரைக்கும் நீண்டுள்ள
கண்களின் மீதும், முல்லை மலர் போன்ற ஒப்பற்ற புன்னகையின் மீதும்,

பனி மதி போலும் அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம்
அவயவம் அனைத்தூடினும் அவசம் உறும் மயல் தவிர்த்து
ஆள்வதும் ஒரு நாளே
... குளிர்ந்த பிறைச் சந்திரன் போன்று அழகு
விளங்கும் நெற்றியின் மீதும், எப்போதும் இவ்வாறு எல்லா
அவயவங்களின் மீதும் மயக்கம் கொள்ளும் காமப் பித்தை ஒழித்து,
என்னை நீ ஆட்கொள்ளுவதும் ஆகிய ஒரு நாள் கிட்டுமோ?

உததி புதைபட அடைத்து ஆதவன் நிகர் இல் இரதமும்
விடுக்கா நகர் ஒரு நொடியில் வெயில் எழச் சாநகி துயர் தீர
...
கடல் புதைபடும்படி அடைத்து, சூரியனுடைய ஒப்பற்ற தேரும் வரக்
கூடாதென்று தடுக்கப்பட்டிருந்த நகரமாகிய இலங்கையில், ஒரு நொடிப்
பொழுதில் சூரியன் ஒளி வரும்படிச் செய்து, சீதையின் துயரம் தீரும்படி,

உபய ஒரு பது வரைத் தோள்களு(ம்) நிசிசரர்கள் பதி தச
க்ரீவமும் உருள ஒரு கணை தெரித்தானு(ம்)
... இருபது
மலை போன்ற தோள்களும், அரக்கர்களுடைய தலைவனாகிய
ராவணனுடைய பத்து கழுத்தும் உருண்டு மாண்டு விழ ஒப்பற்ற
அம்பை விட்டவனாகிய (ராமனாகிய) திருமாலும்,

மவுன ஞான திதம் இல் அவுணர் தம் இருப்பாகிய புரமும் எரி
எழ முதல் பூதர திலத(ம்) குலகிரி வளைத்தானும் மகிழ
...
மவுன ஞான, நிலை இல்லாத அவுணர்களுடைய* இருப்பிடமாயிருந்த
திரிபுரங்களும் எரிபட்டு அழியும்படி, மலைகளுள் முதன்மை வாய்ந்ததும்,
நெற்றித் திலகம் போல சிறப்பான மேரு மலையை (வில்லாக) வளைத்த
சிவபெருமானும் மகிழ்ச்சி கொள்ளும்படியும்,

வானோர் திருவ நகர் குடி புக சீகர(ம்) மகர(ம்) சலம் முறை
இடச் சூரொடு சிகர கிரி பொடிபடச் சாடிய பெருமாளே.
...
தேவர்கள் செல்வம் நிறைந்த பொன்னுலகுக்கு குடி போகும்படியும்,
அலைகளும், மகர மீன்களும் கொண்ட கடல் முறையிட்டு
ஓலமிடும்படியும், சூரனுடன், உச்சிகளை உடைய எழு கிரிகளும்
பொடிபட்டு அழிய வேல் கொண்டு மோதிய பெருமாளே.


* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை
வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர்
மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச்
செய்தனர். ஆனால் மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி
இறக்காமல் தப்பினர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.458  pg 3.459  pg 3.460  pg 3.461 
 WIKI_urai Song number: 1184 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1185 - madhana dhanu nigar (common)

mathana thanunika ridaikkE mana
     muruka varupidi nadaikkE yiru
          vanasa paripura malarkkE mathu ...... karamvAzhum

vakuLa mrukamatha mazhaikkE maNi
     makara maNivana kuzhaikkE mada
          makaLir mukuLitha mulaikkE kada ...... lamuthURum

athara mathuritha mozhikkE kuzhai
     yaLavu maLaviya vizhikkE thaLa
          vanaiya thorusiRu nakaikkE pani ...... mathipOlum

azhaku thikazhtharu nuthaRkE yana
     varatha mavayava manaiththU dinu
          mavasa muRumayal thavirththAL vathu ...... morunALE

uthathi puthaipada adaiththA thavan
     nikari lirathamum vidukkA nakar
          oruno diyilveyi lezhacchA naki ...... thuyartheera

upaya vorupathu varaiththOL kaLu
     nisisa rarkaLpathi thasakree vamu
          muruLa orukaNai theriththA numa ...... vunanjAna

thithami lavuNartha miruppA kiya
     puramu meriyezha muthaRpU thara
          thilatha kulakiri vaLaiththA numa ...... kizhavAnOr

thiruva nakarkudi pukacchee kara
     makara chalamuRai yidaccU rodu
          sikara kiripodi padacchA diya ...... perumALE.

......... Meaning .........

mathana thanu nikar idaikkE manam uruka varu pidi nadaikkE iru vanasa paripura malarkkE: On the barely visible waistline that is like the imperceptible body of Manmathan (God of Love), on the heart-melting gait like that of the she-elephant, on the lotus-like pair of feet wearing the anklets,

mathukaram vAzhum vakuLa mrukamatha mazhaikkE maNi makaram aNi a(n)na kuzhaikkE mada makaLir mukuLitha mulaikkE: on the dark cloud-like long hair wearing makizham flower and musk, around which beetles swarm, on the gem-embedded swinging ear-studs that look like the makara fish, on the bud-like rounded bosom of the young women,

kadal amuthu URum atharam mathura itha mozhikkE kuzhai aLavum aLaviya vizhikkE thaLavu anaiyathu oru siRu nakaikkE: on the gushing saliva that fills their mouth that is sweet like the nectar in the milky ocean, on their sweet speech, on their eyes that leap right up to the swinging ear-studs, on their matchless smile that looks like the jasmine,

pani mathi pOlum azhaku thikazh tharu nuthaRkE anavaratham avayavam anaiththUdinum avasam uRum mayal thavirththu ALvathum oru nALE: on their beautiful forehead that looks like the cool crescent moon and on every organ and limb of these women, I have been, at all times, charmed with obsessive passion; will there be a day when You will remove that madness of mine and take me over, Oh Lord?

uthathi puthaipada adaiththu Athavan nikar il irathamum vidukkA nakar oru nodiyil veyil ezhac chAnaki thuyar theera: The sea was arrested and buried under and the unique chariot of the sun was banned from entering the city of LankA; in that town, making the rays of the bright sunshine re-enter in a second and putting an end to the suffering of JAnaki,

upaya oru pathu varaith thOLkaLu(m) nisisararkaL pathi thasa kreevamum uruLa oru kaNai theriththAnu(m): He (RAmA) wielded His unique arrow knocking down the twenty mountain-like shoulders and severing the ten necks of RAvaNan, the leader of the demons; He is Lord VishNu;

mavuna njAna thitham il avuNar tham iruppAkiya puramum eri ezha muthal pUthara thilatha(m) kulakiri vaLaiththAnum makizha: Thiripuram*, the dwelling place of the demons who lacked serenity, knowledge and stability, was burnt down and destroyed when He bent as a bow the great Mount MEru, which is the primal mountain of all mountains and the most distinct one like the mark on the forehead; that Lord SivA (along with Lord VishNu) became exhilarated;

vAnOr thiruva nakar kudi puka seekara(m) makara(m) salam muRai idac cUrodu sikara kiri podipadas sAdiya perumALE.: the celestials were resettled in their golden land; the seas filled with waves and the makara fish roared in appeal; and the demon SUran and his seven mountains with all their peaks were smashed to pieces when You attacked with Your spear, Oh Great One!


* The demons in Thiripuram were unconquerable unless they gave up their daily worship of Lord SivA. Realising this, Lord VishNu went to Thiripuram in the disguise of a Buddhist monk accompanied by NArathar as His disciple. They enchanted the demons in Thiripuram to such an extent that they neglected their daily worship of SivA. That was the moment when Lord SivA burnt Thiripuram down; only three demons who continued their worship of SivA were spared.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1185 madhana dhanu nigar - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]