திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1186 மதனேவிய கணை (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1186 madhanEviyakaNai (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன தனதானன ...... தனதான ......... பாடல் ......... மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும் வடிவாயுடல் நடமாடுக ...... முடியாதேன் மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற மகிழ்ஞானக அநுபூதியி ...... னருள்மேவிப் பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ பரிபூரண கிருபாகர ...... முடன்ஞான பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட பலகோடிவெண் மதிபோலவெ ...... வருவாயே சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு சசிசூரியர் சுடராமென ...... வொருகோடிச் சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக சதிநாடக மருள்வேணிய ...... னருள்பாலா விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி வெகுமாலுற தனமேலணை ...... முருகோனே வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக வெயில்வீசிய அழகாதமிழ் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மதன் ஏவிய கணையால் இரு வினையால் ... மன்மதன் செலுத்திய மலர் அம்புகளால் பட்டும், நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளால் பட்டும், புவி கடல் சாரமும் வடிவாய் உடல் ... மண், நீர் முதலிய பஞ்ச பூதங்களின் இயக்கங்களில் பட்டும் வடிவமான இந்த உடலுடன், நடமாடுக முடியாதேன் ... இந்த உலகில் நடமாட முடியாதவனாகிய நான் மன மாயையோடு இரு காழ் வினை அற ... மனத்திலுள்ள மாயையும், நல்வினை தீவினை என்ற இரு முற்றிய வினைகளும் ஒழிய, மூதுடை மலம் வேர் அற ... பழமையாக வரும் ஆணவம் என்ற மலம் வேரோடு அற்று வீழ, மகிழ் ஞானக அநுபூதியின் அருள் மேவி ... மகிழத்தக்க, உள்ளத்தில் விளங்கும், அனுபவ ஞானம் ஆகிய அருளை அடைந்து, பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக ... உன் திருவடியை அடைந்த அடியார்களுடன் நானும் சேர்ந்து விளையாட, அடியேன் மு(ன்)னெ பரிபூரண கிருபாகரம் உடன் ... அடியேன் எதிரில் நிறைந்த கருணையுடன் ஞானப்பரி மேல் அழகுடன் ஏறி ... ஞானம் என்னும் குதிரையாகிய மயில் மீது அழகுடன் ஏறி, வி(ண்)ணவர் பூ மழை அடி மேல் விட ... தேவர்கள் பூமாரியை உன் திருவடிகளின் மேல் பொழிய பல கோடி வெண் மதி போலவெ வருவாயே ... பல கோடிக்கணக்கான வெண்ணிலவின் ஒளி வீச நீ வருவாயாக. சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா ... நூறு கோடி வெண்ணிற மாதர்கள் கடல் அலைகளைப் போல் சாமரங்கள் வீச, முழு சசி சூரியர் சுடராம் என ... பூரண சந்திரனும், சூரியனும் தீப ஒளியாய்ச் சுடர் வீச, ஒரு கோடி சடை மா முடி முநிவோர் சரண் என ... ஒரு கோடிக்கணக்கான, சடைமுடி தாங்கிய முநிவர்கள் சரணம் என்று வணங்க, வேதியர் மறை ஓதுக ... வேதியர்கள் வேதங்களை ஓதிட, சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா ... தாளத்துடன் கூடிய நடனத்தை ஆடிய ஜடாமுடி தாங்கும் (நடராஜராம்) சிவபெருமான் அருளிய குழந்தையே, விதி ஆனவன் இளையாள் எனது உ(ள்)ளம் மேவிய வ(ள்)ளி நாயகி ... உயிர்களுக்கு எல்லாம் ஆயுளை விதிக்கும் பிரமனின் தங்கை*, என் உள்ளத்தில் வீற்றிருக்கும் வள்ளிநாயகி வெகு மால் உற தனம் மேல் அணை முருகோனே ... மிக்க ஆசைப்படும்படி அவளின் மார்பினை அணைந்த முருகனே, வெளி ஆசையோடு அடை பூவணர் மருகா ... ஆகாயம், திசைகள் எல்லாம் நிறைந்துள்ள, காயாம்பூ போன்ற நீலவண்ணத்து திருமாலின் மருகனே, மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா ... ரத்தினம், செம்மை முதிர்ந்த பொன் ஆகியவற்றின் ஒளி கலந்து வீசுகின்ற அழகனே, தமிழ் பெருமாளே. ... தமிழர்களின் பெருமாளே. |
* பிரமன் திருமாலின் மைந்தன். வள்ளி திருமாலின் புத்திரியாகிய சுந்தரவல்லியின் மறு பிறப்பு. எனவே வள்ளி பிரமனின் தங்கை. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.460 pg 3.461 pg 3.462 pg 3.463 pg 3.464 pg 3.465 WIKI_urai Song number: 1185 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1186 - madhanEviya kaNai (common) madhanEviya kaNaiyAl iruvinaiyAl buvi kadal sAramum vadivAy udal natamAduga ...... mudiyAdhEn mana mAyaiyod irukAzh vinai aRa mUdhudai malam vEraRa magizh nyAnaga anubUthiyin ...... aruLmEvip padhamEvumun adiyArudan viLaiyAduga adiyEn mune paripUraNa kirupAkaram ...... udan nyAna parimEl azhagudanERi viNavar pU mazhai adimElvida palakOdi veN madhi pOlave ...... varuvAyE sathakOdi veNmadavAr kadalena sAmarai asaiyA muzhu sasi sUriyar sudarAmena ...... orukOdi sadaimA mudi munivOr saraNena vEdhiyar maRai Odhuga jathi nAtakam aruL vENiyan ...... aruLbAlA vidhiyAnavan iLaiyAL enadhuLa mEviya vaLi nAyaki vegumAl uRa thanamEl aNai ...... murugOnE veLi Asaiyod adai pUvaNar marugA maNi mudhir Adaga veyil veesiya azhagA thamizh ...... perumALE. ......... Meaning ......... madhanEviya kaNaiyAl iruvinaiyAl: Because of the flowery arrows wielded by Manmathan (God of Love), because of the influence of my good and bad deeds, buvi kadal sAramum vadivAy udal: and because of the interaction of the five elements such as the earth and water, this body of mine took shape. natamAduga mudiyAdhEn: With this body I am unable to move about in this world. mana mAyaiyod irukAzh vinai aRa: For the destruction of delusions in my mind and to do away with the effects of the deeds, both good and bad, mUdhudai malam vEraRa: and to uproot the slag of arrogance, magizh nyAnaga anubUthiyin aruLmEvi: I must obtain the grace of experiencing True Knowledge to be cherished and perceived in my heart; padhamEvumun adiyArudan viLaiyAduga: to enable me to mingle and play with the group of Your devotees who have already obtained the blessings of Your feet, adiyEn mune paripUraNa kirupAkaram udan: You must appear before me with total compassion, nyAna parimEl azhagudanERi: elegantly mounting Your Peacock, which symbolises true knowledge and serves You as a horse, viNavar pU mazhai adimElvida: with the celestials showering flowers on Your hallowed feet, palakOdi veN madhi pOlave varuvAyE: to bless me with Your vision, radiating the glow of a million moons! sathakOdi veNmadavAr kadalena sAmarai asaiyA: A billion young women, with dazzling white complexion, were waving the sAmarams (hand fans) like sea waves; muzhu sasi sUriyar sudarAmena: the full moon and the sun were providing brilliant illumination; orukOdi sadaimA mudi munivOr saraNena: about ten million great sages with tresses were worshipping in complete surrender; vEdhiyar maRai Odhuga: many priests were chanting the sacred VEdAs; jathi nAtakam aruL vENiyan aruLbAlA: as Lord SivA with tresses (as NadarAjar) danced His cosmic dance in accordance with the meter; You are the child of that SivA! vidhiyAnavan iLaiyAL enadhuLa mEviya vaLi nAyaki: She is the younger sister* of BrahmA whose duty is to determine the fate of all lives; She is gloriously seated in my heart; She is Goddess VaLLi; vegumAl uRa thanamEl aNai murugOnE: With immense love You embrace the bosom of that VaLLi, Oh MurugA! veLi Asaiyod adai pUvaNar marugA: He pervades the entire sky and the universe; He has the complexion of the blue lily; He is Lord Vishnu, and You are His nephew! maNi mudhir Adaga veyil veesiya azhagA: Oh Handsome One, Your body exudes the combined glow of ruby and reddish gold! thamizh perumALE.: You are the Lord of the Tamils, Oh Great One! |
* BrahmA is the son of Vishnu; VaLLi, in her previous birth, was Sundaravalli, the daughter of Vishnu; thus VaLLi is the younger sister of BrahmA. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |