திருப்புகழ் 1177 புகரில் சேவல  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1177 pugarilsEvala  (common)
Thiruppugazh - 1177 pugarilsEvala - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தந்தன தந்தன
     தனன தானன தந்தன தந்தன
          தனன தானன தந்தன தந்தன ...... தனதான

......... பாடல் .........

புகரில் சேவல தந்துர சங்க்ரம
     நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி
          பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா

புனித பூசுர ருஞ்சுர ரும்பணி
     புயச பூதர என்றிரு கண்புனல்
          பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி

அகில பூதவு டம்புமு டம்பினில்
     மருவு மாருயி ருங்கர ணங்களு
          மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே

அகில வாதிக ளுஞ்சம யங்களும்
     அடைய ஆமென அன்றென நின்றதை
          யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே

மகர கேதன முந்திகழ் செந்தமிழ்
     மலய மாருத மும்பல வெம்பரி
          மளசி லீமுக மும்பல மஞ்சரி ...... வெறியாடும்

மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர
     மதுர கார்முக மும்பொர வந்தெழு
          மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால

முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு
     முதுப கீரதி யும்புனை யுஞ்சடை
          முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி

முகர நூபுர பங்கய சங்கரி
     கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள்
          முருக னேசுர குஞ்சரி ரஞ்சித ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புகரில் சேவல ... குற்றமற்ற சேவற்கொடியை உடையவனே,

தந்துர சங்க்ரம நிருதர் கோப ... உயர்ந்த பற்களுடையவர்களும்,
போரை விரும்பும் தன்மையும் உடைய அசுரர்கள் மீது கோபிக்கின்றவனே,

க்ரவுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக ... நீண்ட மலையாகிய
கிரெளஞ்சமலையைப் பிளந்த வீர மூர்த்தியே,

குன்றவர் பெண்கொடி மணவாளா ... வேடர் குலக்கொழுந்தாகிய
வள்ளியின் கணவனே,

புனித பூசுரருஞ் சுரரும்பணி ... தூய்மையான அந்தணரும்,
தேவர்களும் வணங்கும்,

புயச பூதர என்று ... மலைபோன்ற தோள்களை உடையவனே
எனத் துதித்து,

இரு கண்புனல் பொழிய ... இரு கண்களிலிருந்தும் ஆனந்தக்
கண்ணீர் சொரியவும்,

மீமிசை யன்பு துளும்பிய மனனாகி ... மேன்மேலும் அன்பு
பெருகிய மனத்தனாகி

அகில பூதவுடம்பும் ... எல்லா பூதங்களும் சேர்ந்த உடம்பும்,

உடம்பினில் மருவு மாருயிரும் ... உடம்பில் பொருந்திய அரிய
உயிரும்,

கரணங்களும் ... மனம், புத்தி முதலிய கரணங்களும்

அவிழ யானுமிழந்த இடந்தனில் ... கட்டு நீங்கவும், யான் என்ற
நினைப்பும் விலகியபோது

உணர்வாலே ... சிவ போதம் என்ற ஓர் உணர்வினாலே

அகில வாதிகளுஞ்சம யங்களும் ... மாறுபட்ட எல்லா வாதிகளும்*,
சமயங்களும்

அடைய ... ஒதுங்கிப் போய்விடவும்,

ஆமென அன்றென நின்றதை ... உள்ளது என்றும், இல்லது
என்றும் நின்ற உண்மைப் பொருளை

அறிவி லேனறி யும்படி ... அறிவில்லாத சிறிய அடியேன்
அறியும்படியாக

இன்றருள் புரிவாயே ... இன்றைய தினம் உபதேசித்து அருள்
புரிவாயாக.

மகர கேதன முந்திகழ் ... மகர மீனக் கொடியைக் கொண்டு
விளங்குவதும்,

செந்தமிழ் மலய மாருதமும் ... செம்மையான தமிழ் முழங்குவதுமான
சந்தன மலையாம் பொதிகையில் பிறந்த தென்றல் காற்றும்,

பல வெம்பரிமள சிலீமுகமும் ... நானாவிதமான ஆசையைத்
தூண்டும் மணமுள்ள மலர் அம்புகளும்,

பல மஞ்சரி வெறியாடும் ... பலவிதமான மலர்க் கொத்துக்களில்
உள்ள மணத்தில் விளையாடும்

மதுக ராரம் விகுஞ்சணியும் ... வண்டுகளின் வரிசையாகிய
நாணுடன், மேலான மலர் அலங்காரமும்,

கர மதுர கார்முகமும் ... கரத்திலே ஏந்திய இனிய கரும்பு வில்லும்
கொண்டு

பொர வந்தெழு மதன ராஜனை ... காதல் போர் செய்ய எழுந்து வந்த
மன்மத ராஜனை

வெந்துவிழும்படி முனி ... வெந்து சாம்பலாகும்படியாகக் கோபித்த

பால முகிழ்விலோசனர் ... நெற்றியில் குவிந்த கண்ணை உடையவரும்,

அஞ்சிறு திங்களு முதுபகீரதியும் ... அழகிய இளம்பிறைச்
சந்திரனையும், பழமையான கங்கா நதியையும்

புனையுஞ்சடைமுடியர் ... தரித்த ஜடாமுடியை உடையவருமாகிய
சிவபெருமானும்,

வேதமு நின்று ... வேதமும் நின்று தொழும்படியாக விளங்கி

மணங்கமழ் அபிராமி ... ஞான மணம் திகழும் அபிராமி அம்மையும்,

முகர நூபுர பங்கய சங்கரி ... சங்குகளால் செய்த கொலுசுகளை
அணிந்த திருவடித் தாமரையை உடைய சங்கரியும்,

கிரிகு மாரித்ரி யம்பகி ... ஹிமவானின் புத்திரியும், மூன்று
கண்களை உடையவளுமான பார்வதியும்

தந்தருள் முருகனே ... பெற்றருளிய முருகனே,

சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே. ... தேவயானை விரும்புகின்ற
பெருமாளே.


* வாதம் செய்கின்ற வாதிகள் பின்வருமாறு:

  தேக ஆத்மவாதி - உடம்புதான் ஆத்மா என வாதிப்பவன்,
  கரண ஆத்மவாதி - மனமும் புத்தியும்தான் ஆத்மா என வாதிப்பவன்,
  இந்திரிய ஆத்மவாதி - இந்திரியங்களே ஆத்மா என வாதிப்பவன்,
  ஏகாத்மவாதி - ஆத்மாவைத் தவிர வேறில்லை என வாதிப்பவன்,
  பிம்பப் ப்ரதிபிம்பவாதி - பிரமத்தின் நிழல்தான் உலகம் என வாதிப்பவன்,
  பரிணாமவாதி - பால் தயிராவது போல பிரமமே உலகானது என வாதிப்பவன்,
  விவர்த்தனவாதி - பிரமத்திலிருந்து தான் உலகம் வந்தது என வாதிப்பவன்,
  கணபங்கவாதி - கணந்தோறும் வேறுவேறு ஆத்மா உடம்பில் வருகிறது
      என வாதிப்பவன்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.434  pg 3.435  pg 3.436  pg 3.437 
 WIKI_urai Song number: 1176 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1177 - pugaril sEvala (common)

pugaril sEvala thandhura sangrama
     nirudhar kOpa kravuncha nedungiri
          porudha sEvaka kundravar peNkodi ...... maNavALa

punidha bUsurarun surarum paNi
     buyaja bUdhara endriru kaN punal
          pozhiya mee misai anbu thuLumbiya ...... mananAgi

akila bUdha udambum udambinil
     maruvu mAr uyirung karaNangalum
          avizha yAnum izhandha idanthanil ...... uNarvAlE

akila vAdhigalun samayangaLum
     adaiya Amena andrena nindradhai
          aRivilEn aRiyumpadi indraruL ...... purivAyE

makara kEdhanamun thigazh senthamizh
     malaya mAruthamum pala vempari
          maLa sileemukamum pala manjari ...... veRiyAdum

madhuka rAramvi kunjaNiyun kara
     madhura kArmukamum pora vandhezhu
          madhana rAjanai vendhu vizhumpadi ...... munipAla

mugizh vilOchana ransiRu thingaLu
     mudhu bageerathiyum punaiyun sadai
          mudiyar vEdhamu nindru maNang kamazh ...... abirAmi

mukara nUpura pangaya sankari
     giri kumAri thriyambaki thandharuL
          muruganE sura kunjari ranjitha ...... perumALE.

......... Meaning .........

pugaril sEvala: You hold the blemishless staff of the Rooster!

thandhura sangrama nirudhar kOpa: You show Your rage at the war-mongering asuras (demons) with prominent teeth!

kravuncha nedungiri porudha sEvaka: You smashed the long range of Mount Krouncha!

kundravar peNkodi maNavALa: You are the consort of VaLLi, the damsel of the KuRavAs!

punidha bUsurarun surarum paNi buyaja bUdhara endru: Praising Your mountainous shoulders, Holy Brahmins and DEvAs prostrate at Your feet

iru kaN punal pozhiya: with my two eyes shedding tears of ecstacy,

mee misai anbu thuLumbiya mananAgi: with ever-growing love filled to the brim of my heart,

akila bUdha udambum udambinil maruvu mAr uyirum: with my body made of all elements and containing the precious life,

karaNangalum avizha: all my intellect, mind and other entities getting released,

yAnum izhandha idanthanil uNarvAlE: and with my ego being demolished, at that very moment, I should realise You!

akila vAdhigalun samayangaLum: Different schools* of thought and religions

adaiya Amena andrena nindradhai: will have to recede as You stand alone as the "being" and the "naught"!

aRivilEn aRiyumpadi indraruL purivAyE: You have to grant the grace for enabling this ignorant one to realise You today!

makara kEdhanamun thigazh: He has the staff with the flag of Fish;

senthamizh malaya mAruthamum: He rides through the gentle breeze from the South emanating from the Pothigai Hill belonging to the beautiful Tamil Land;

pala vemparimaLa sileemukamum: His flowery arrows arouse several aromatic scents;

pala manjari veRiyAdum madhuka rAramvi kunjaNiyun: His string in the bow is formed by rows of beetles that roam around many flowers;

kara madhura kArmukamum pora vandhezhu: He comes to war holding in His hand a bow of sugarcane;

madhana rAjanai vendhu vizhumpadi muni: and He is King Manmathan (Love God) who was burnt down

pAla mugizh vilOchanar: by SivA with a focused fiery eye in His forehead!

ansiRu thingaLu mudhu bageerathiyum punaiyun sadai mudiyar: In His tresses, He wears the little crescent moon and the ancient river BhAgeerathi (Ganga);

vEdhamu nindru maNang kamazh abirAmi: (along with SivA) She stands as the enchanting Goddess, worshipped by all VEdAs (scriptures)

mukara nUpura pangaya sankari: She wears in Her lotus feet anklets made of shells; She is Sankari;

giri kumAri thriyambaki: She is the daughter of Mount HimavAn; She has three eyes;

thandharuL muruganE: and She, PArvathi, delivered You, Oh MurugA,

sura kunjari ranjitha perumALE.: You are the consort of DEvayAnai, Oh Great One!


* There are eight schools of thought as follows:

     DhEha AthmavAthi: Those who argue that the body is the only soul;
     KaraNa AthmavAthi: Those who argue that the perceptory senses are the soul;
     Indhiriya AthmavAthi: Those who argue that the sense organs are the soul;
     EkAtmavAthi: Those who argue that there is nothing else but the soul;
     Bimba prathibimbavAthi: Those who argue that the soul is the reflection of God;
     PariNamavAthi: Those who argue that the soul is latent in God;
     VivardhanavAthi: Those who argue that the universe came from God;
     GaNapangavAthi: Those who argue that the body assumes several souls each moment.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1177 pugaril sEvala - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]