திருப்புகழ் 1176 பால்மொழி படித்து  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1176 pAlmozhipadiththu  (common)
Thiruppugazh - 1176 pAlmozhipadiththu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
     தானன தனத்தத் தாத்த ...... தனதான

......... பாடல் .........

பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி
     பாயலி லிருத்திக் காட்டி ...... யநுராகம்

பாகிதழ் கொடுத்துக் காட்டி நூல்களை விரித்துக் காட்டி
     பார்வைகள் புரட்டிக் காட்டி ...... யுறவாகி

மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி
     மேல்விழு நலத்தைக் காட்டு ...... மடவார்பால்

மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு
     மேன்மையை யெனக்குக் காட்டி ...... யருள்வாயே

காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி
     காரணம் விளைத்துக் காட்டி ...... யொருகாலங்

கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி
     காமனை யெரித்துக் காட்டி ...... தருபாலா

மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில்
     வாலிப மிளைத்துக் காட்டி ...... அயர்வாகி

மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு
     வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பால் மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி
பாயலில் இருத்திக் காட்டி
... பால் போன்ற இனிய பேச்சுக்களைப்
பேசி, உடுத்துள்ள ஆடையைத் தளர்த்திக் காட்டி, படுக்கையில் உடன்
அமர்த்திவைத்துக் காட்டி,

அநுராகம் பாகு இதழ் கொடுத்துக் காட்டி நூல்களை
விரித்துக் காட்டி
... வெல்லம் போன்ற இனிய வாயிதழ் ஊறலைத்
தந்து, காம நூல்களை விவரமாக எடுத்துக் காட்டி,

பார்வைகள் புரட்டிக் காட்டி உறவாகி மேல் நகம் அழுத்திக்
காட்டி தோதக விதத்தைக் காட்டி மேல் விழு(ம்) நலத்தைக்
காட்டு(ம்) மடவார் பால்
... கண் பார்வையை சுழற்றிக் காட்டி நட்புப்
பூண்டு, உடலின் மேல் நகத்தை அழுத்தி நகக்குறி இட்டு, வஞ்சகச்
செயல்களைக் காட்டி, மேலே விழுந்து தழுவும் சுகங்களைக் காட்டும்
விலைமாதர்களிடத்தே

மேவிடு(ம்) மயக்கைத் தீர்த்து சீர் பத நினைப்பைக் கூட்டு(ம்)
மேன்மையை எனக்குக் காட்டி அருள்வாயே
... சென்று அடையும்
காம மயக்கத்தை ஒழித்து, சீரான உனது திருவடி நினைப்பைக் கூட்டி
வைக்கும் மேன்மையான எண்ணத்தை எனக்கு அருள் புரிவாயாக.

காலனை உதைத்துக் காட்டி ஆவியை வதைத்துக் காட்டி
காரணம் விளைத்துக் காட்டி
... யமனைக் காலால் உதைத்துக்
காட்டியும், அவனுடைய உயிரை (திருக்கடையூரில்) வதம் செய்து
காட்டியும், அவ்வாறு வதைத்ததன் காரணத்தை* விளக்கிக் காட்டியும்,

ஒரு காலம் கானினில் நடித்துக் காட்டி ஆலமும் மிடற்றில்
காட்டி காமனை எரித்துக் காட்டி தரு பாலா
... அந்திப்
பொழுதில் சுடு காட்டில் நடனம் செய்து காட்டியும், ஆலகால
விஷத்தை கண்டத்தில் நிறுத்திக் காட்டியும், மன்மதனை (நெற்றிக்)
கண்ணால் எரித்துக் காட்டியும் செய்த சிவபெருமான் அருளிய மகனே,

மால் உற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்தில் காட்டில்
வாலிபம் இளைத்துக் காட்டி அயர்வு ஆகி
... (வள்ளி) காதல்
உறும்படி உனது திரு மேனியின் ஒளியைக் காட்டி, வேடர்கள் தினைப்
புனக் காட்டில் காளைப் பருவத்தின் சோர்வைக் காட்டி தளர்ச்சியுற்று,

மான் மகள் தனத்தைச் சூட்டி ஏன் என அழைத்துக் கேட்டு
வாழ்வு உறு சமத்தைக் காட்டு(ம்) பெருமாளே.
... மான் பெற்ற
மகளாகிய வள்ளியின் மார்பினில் தலைவைத்துச் சாய்ந்து, அவளைத்
தழுவி, (நீ) ஏன் (இச்சிறு குடிலில் இருக்க வேண்டுமென்று) கூறி,
தன்னுடன் (திருத்தணிகைக்கு) வரும்படி அழைத்து (அவள்
இணங்கியதைக்) கேட்டு, அவளோடு இனிய வாழ்வு பெற்று, தனது
சாமர்த்தியத்தைக் காட்டிய பெருமாளே.


* திருக்கடையூரில் சிவபூஜை செய்துகொண்டிருந்த மார்க்கண்டருடைய
உயிரைப் பறிக்க யமன் பாசக்கயிறை வீசினான். அதனால் வெகுண்டு யமனைக்
காலால் உதைத்து சிவபிரான் வதம் செய்தார் - மார்க்கண்ட புராணம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.432  pg 3.433  pg 3.434  pg 3.435 
 WIKI_urai Song number: 1175 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1176 - pAlmozhi padiththu (common)

pAlmozhi padiththuk kAtti Adaiyai nekizhththuk kAtti
     pAyali liruththik kAtti ...... yanurAkam

pAkithazh koduththuk kAtti nUlkaLai viriththuk kAtti
     pArvaikaL purattik kAtti ...... yuRavAki

mElnaka mazhuththik kAtti thOthaka vithaththaik kAtti
     mElvizhu nalaththaik kAttu ...... madavArpAl

mEvidu mayakkaith theerththu seerpatha ninaippaik kUttu
     mEnmaiyai yenakkuk kAtti ...... yaruLvAyE

kAlanai yuthaiththuk kAtti yAviyai vathaiththuk kAtti
     kAraNam viLaiththuk kAtti ...... yorukAlam

kAninil nadiththuk kAtti yAlamu midatRiR kAtti
     kAmanai yeriththuk kAtti ...... tharupAlA

mAluRa niRaththaik kAtti vEduvar punaththiR kAttil
     vAlipa miLaiththukkAtti ...... ayarvAki

mAnmakaL thanaththaic cUtti Enena azhaiththuk kEttu
     vAzhvuRu samaththaik kAttu ...... perumALE.

......... Meaning .........

pAl mozhi padiththuk kAtti Adaiyai nekizhththuk kAtti pAyalil iruththik kAtti: Their speech is sweet like milk; they deliberately expose their body by loosening their clothes; they make their suitors sit on their bed;

anurAkam pAku ithazh koduththuk kAtti nUlkaLai viriththuk kAtti: they offer their jaggery-like sweet saliva and describe at length the text books on erotica;

pArvaikaL purattik kAtti uRavAki mEl nakam azhuththik kAtti thOthaka vithaththaik kAtti mEl vizhu(m) nalaththaik kAttu(m) madavAr pAl: they roll their eyes and strike a friendship; they etch nail-marks all over the body; these whores resort to treacherous acts and fall all over their suitors, hugging them provocatively, and offering sensual pleasure;

mEvidu(m) mayakkaith theerththu seer patha ninaippaik kUttu(m) mEnmaiyai enakkuk kAtti aruLvAyE: kindly get rid of my delusory obsession for these women and grant me the noble thought of attaining Your hallowed and tidy feet!

kAlanai uthaiththuk kAtti Aviyai vathaiththuk kAtti kAraNam viLaiththuk kAtti: He kicked Yaman (God of Death) with His foot; He took the life of that Yaman (in ThirukkadaiyUr) and explained the reason* for such killing;

oru kAlam kAninil nadiththuk kAtti Alamum midatRil kAtti kAmanai eriththuk kAtti tharu pAlA: on an evening, around the dusk time, He danced on the cremation ground; He imbibed the AlakAla venom and held it in His gullet; He once burnt down Manmathan (God of Love) to ashes with His fiery eye; He is Lord SivA, and You are His son, Oh Lord!

mAl uRa niRaththaik kAtti vEduvar punaththil kAttil vAlipam iLaiththuk kAtti ayarvu Aki: You revealed the lustre of Your hallowed body to VaLLi who fell in love with You; in the millet fields of the forest that belonged to the hunters You grew weary despite Your youthful demeanor

mAn makaL thanaththais cUtti En ena azhaiththuk kEttu vAzhvu uRu samaththaik kAttu(m) perumALE.: and rested Your head on the bosom of VaLLi, the daughter of a deer; embracing her, You asked her why she should continue to live in that little hut; when You invited her to accompany You (to ThiruththaNigai), she readily agreed, and You lived together happily; You have been so cleverly persuasive, Oh Great One!


* When MArkkaNdar was performing Siva PUjA, Yaman sought to take MArkkaNdar's life by throwing the rope of bondage; Lord SivA was enraged, kicked Yaman with His foot and killed him in ThirukkadaiyUr - MArkkaNda PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1176 pAlmozhi padiththu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]