திருப்புகழ் 1172 பத்தித் தரள  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1172 paththiththaraLa  (common)
Thiruppugazh - 1172 paththiththaraLa - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தத்தன தத்தத் தனதன
     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

......... பாடல் .........

பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி
     பட்டப்புள கச்செப் பிளமுலை
          பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ...... ருயர்தாளப்

பத்மத்திய ரற்புக் கடுகடு
     கட்சத்தியர் மெத்தத் திரவிய
          பட்சத்திய ரிக்குச் சிலையுரு ...... விலிசேருஞ்

சித்தத்தரு ணர்க்குக் கனியத
     ரப்புத்தமு தத்தைத் தருமவர்
          சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை ...... நுதலார்தந்

தெட்டிற்படு கட்டக் கனவிய
     பட்சத்தரு ளற்றுற் றுனதடி
          சிக்கிட்டிடை புக்கிட் டலைவது ...... தவிராதோ

மத்தப்பிர மத்தக் கயமுக
     னைக்குத்திமி தித்துக் கழுதுகள்
          மட்டிட்டஇ ரத்தக் குருதியில் ...... விளையாட

மற்றைப்பதி னெட்டுக் கணவகை
     சத்திக்கந டிக்கப் பலபல
          வர்க்கத்தலை தத்தப் பொருபடை ...... யுடையோனே

முத்திப்பர மத்தைக் கருதிய
     சித்தத்தினில் முற்றத் தவமுனி
          முற்பட்டுழை பெற்றுத் தருகுற ...... மகள்மேல்மால்

முற்றித்திரி வெற்றிக் குருபர
     முற்பட்டமு ரட்டுப் புலவனை
          முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பத்தித் தரளக் கொத்து ஒளிர் வரி பட்டப் புளகச் செப்பு இள
முலை பட்டு இட்டு
... வரிசையாய் அமைந்த முத்துமாலைகளின்
கூட்டம் ஒளி வீசுவதும், ரேகைகள் விளங்குவதும், புளகாங்கிதம்
கொண்டதும், செப்புக் குடம் போன்றதுமான இளம் மார்பகங்களின் மீது
பட்டு ஆடையை அணிந்து,

எதிர் கட்டுப் பரதவர் உயர் தாளப் பத்மத்தியர் அற்புக் கடுகடு
கண் சத்தியர்
... முற்புறத்தில் கச்சை முடிந்து, பரத நாட்டியத்தில்
வல்லவர்களுடைய சிறந்த தாளத்துக்கு இணையான தாமரை மொட்டுப்
போன்ற மார்பை உடையவர்கள். (ஒரு சமயத்தில்) அன்பையும்
(இன்னொரு சமயம்) சினக் குறிப்பையும் காட்டும் வேல் போன்ற
கண்களை உடையவர்கள்.

மெத்தத் திரவிய பட்சத்தியர் இக்குச் சிலை உருவு இலி சேரும்
சித்தத் தருணர்க்குக் கனி அதரப் புத்தமுதத்தைத் தரும்
...
மிகவும் பொருள் மீது ஆசை வைத்துள்ளவர்கள். கரும்பு வில்லை உடைய,
உருவம் இல்லாத மன்மதனுடைய காம சேஷ்டைகள் சேர்ந்துள்ள
உள்ளத்தை உடைய இளம் வாலிபர்களுக்கு கொவ்வைப் பழம் போன்ற
வாயிதழ் அமுதத்தைத் தருபவர்கள்.

அவர் சித்ரக் கிரணப் பொட்டு இடு பிறை நுதலார் தம்
தெட்டில் படு கட்டக் கனவிய பட்சத்து அருள் அற்று
...
அவர்கள் அழகிய ஒளி வீசும் பொட்டை இட்டுள்ள பிறைச் சந்திரன்
போன்ற நெற்றியை உடைய விலைமாதர்கள். அவர்களின் வஞ்சனை
வலையில் படுகின்ற, கஷ்டமான, மிகுந்த ஆசை என்னும் மகிழ்ச்சி நீங்கி,

உற்று உனது அடி சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது
தவிராதோ
... உனது திருவடியில் சரணடைந்து மனதை நிறுத்தினால்,
உலகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இடையிலே புகுந்து அலைச்சல்
உறுவது தொலையாதோ?

மத்தப் பிரமத்தக் கய முகனைக் குத்தி மிதித்துக் கழுதுகள்
மட்டிட்ட இரத்தக் குருதியில் விளையாட
... செருக்கையும் மதி
மயக்கத்தையும் உடைய யானை முகம் கொண்ட தாரகாசுரனது உடலைக்
குத்தியும், மிதித்தும், பேய்கள் அளவில்லாத ரத்தச் சிவப்பில் விளையாடவும்,

மற்றைப் பதினெட்டுக் கண வகை சத்திக்க நடிக்கப் பல பல
வர்க்கத் தலை தத்தப் பொரு படை உடையோனே
... மற்றும்
பதினெட்டு கண வகைகளும் ஒலி செய்து நடனமாட, பல வகையான
ஜீவ ராசிகளின் தலைகள் சிதறுண்டு விழும்படியாக சண்டை செய்த
வேலாயுதத்தை உடையவனே,

முத்திப் பரமத்தைக் கருதிய சித்தத்தினில் முற்றத் தவ முனி
முற்பட்டு உழை பெற்றுத் தரு குற மகள் மேல் மால் முற்றித்
திரி வெற்றிக் குருபர
... முக்தி என்னும் மேலான பொருளைப் பெற
நினைத்த உள்ளத்தோடு, முதிர்ந்த தவ நிலையில் இருந்த சிவ முனிவரின்
(உருவில் வந்த திருமாலின்) முன்னிலையில் நின்று லக்ஷ்மியாகிய பெண்
மான் பெற்றுத் தந்த குற மகளாகிய வள்ளியின்* மேல் ஆசை நிரம்பக்
கொண்டு, (வள்ளி இருந்த தினைப் புனத்தில்) திரிந்த வெற்றி வீரனாகிய
குரு மூர்த்தியே,

முற்பட்ட முரட்டுப் புலவனை முட்டைப் பெயர் செப்பிக் கவி
பெறு பெருமாளே.
... எதிர்ப்பட்ட பிடிவாதம் பிடித்த பொய்யாமொழி**
என்னும் புலவனை முட்டை என்ற பெயர் என்று சொல்லி, அந்தப்
புலவனைத் தம் மீது பாடவைத்த பெருமாளே.


* சிவ முனிவர் தவ நிலையில் இருக்க, திருமகள் மானுருவுடன் எதிரில்
செல்ல, அந்த மான் ஒரு பெண் குழவியை ஈன்றது. இக்குழந்தை வேடர்களால்
வளர்க்கப்பட்டு வள்ளிக் கிழங்கு தோண்டிய குழியில் இருந்ததால் வள்ளி
எனப் பெயரிடப்பட்டது.


** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க,
அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக
வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.424  pg 3.425  pg 3.426  pg 3.427 
 WIKI_urai Song number: 1171 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1172 - paththith tharaLa (common)

paththiththara Lakkoth thoLirvari
     pattappuLa kacchep piLamulai
          pattittethir kattup parathava ...... ruyarthALap

pathmaththiya raRpuk kadukadu
     katchaththiyar meththath thiraviya
          patchaththiya rikkuc chilaiyuru ...... vilisErum

chiththaththaru Narkkuk kaniyatha
     rappuththamu thaththaith tharumavar
          chithrakkira Nappot tidupiRai ...... nuthalArthan

thettiRpadu kattak kanaviya
     patchaththaru LatRut Runathadi
          chikkittidai pukkit talaivathu ...... thavirAthO

maththappira maththak kayamuka
     naikkuththimi thiththuk kazhuthukaL
          mattittai raththak kuruthiyil ...... viLaiyAda

matRaippathi nettuk kaNavakai
     saththikkana dikkap palapala
          varkkaththalai thaththap porupadai ...... yudaiyOnE

muththippara maththaik karuthiya
     siththaththinil mutRath thavamuni
          muRpattuzhai petRuth tharukuRa ...... makaLmElmAl

mutRiththiri vetRik gurupara
     muRpattamu rattup pulavanai
          muttaippeyar seppik kavipeRu ...... perumALE.

......... Meaning .........

paththith tharaLak koththu oLir vari pattap puLakac cheppu iLa mulai pattu ittu: The strings of pearls set in a row brightly radiate on the exhilarated and youthful breasts, looking like copper pots with stripes; covering them is a silk cloth,

ethir kattup parathavar uyar thALap pathmaththiyar aRpuk kadukadu kaN saththiyar: the front portion of which is tied into a knot; their breasts looking like the lotus buds are comparable to the twin cymbals used by expert choreographers of classical dance (Bharatha nAttiyam); their spear-like eyes display love (at one time) and anger (at another time);

meththath thiraviya patchaththiyar ikkuc chilai uruvu ili sErum siththath tharuNarkkuk kani atharap puththamuthaththaith tharum: these women are very avaricious; to the young men, with their heart filled with mischief caused by the invisible God of Love, Manmathan, who holds a sugarcane as a bow, they also proffer the saliva, like the fresh nectar, oozing from their lips that are red like the kovvai fruit;

avar chithrak kiraNap pottu idu piRai nuthalAr tham thettil padu kattak kanaviya patchaththu aruL atRu: they are the whores wearing a beautiful and bright dot on their crescent-moon-like forehead; removing my obsessive passion that makes me fall into their treacherous and difficult trap,

utRu unathu adi chikkittu idai pukkittu alaivathu thavirAthO: if only I could set my mind on surrendering at Your hallowed feet, will I not be able to avoid being caught amidst the net of worldly affairs and roaming aimlessly?

maththap piramaththak kaya mukanaik kuththi mithiththuk kazhuthukaL mattitta iraththak kuruthiyil viLaiyAda: The body of the demon ThArakAsuran, who had an elephant-head, and was full of arrogance and mental stupor, was pierced and trampled upon; the devils had a heyday bathing in the redness of the gushing blood;

matRaip pathinettuk kaNa vakai saththikka nadikkap pala pala varkkath thalai thaththap poru padai udaiyOnE: the other eighteen varieties of fiends danced around making a loud noise; and the heads of many varieties of living creatures were shattered and strewn about when You fought with Your spear, Oh Lord!

muththip paramaththaik karuthiya siththaththinil mutRath thava muni muRpattu uzhai petRuth tharu kuRa makaL mEl mAl mutRith thiri vetRik gurupara: When (Lord VishNu in the disguise of) a Saivite sage went into deep penance contemplating on experiencing the supreme bliss of liberation, Goddess Lakshmi, coming in the form of a deer, appeared before him and delivered a female child, VaLLi*, the damsel of the KuRavAs; You were in intense love with that VaLLi and roamed about in the millet-field where she lived, Oh valorous One and Great Master!

muRpatta murattup pulavanai muttaip peyar seppik kavi peRu perumALE.: When You were confronted by the obstinate poet PoyyAmozhi**, You gave him the term "egg" and eventually made him sing songs in Your praise, Oh Great One!


* When the Saivaite sage went into deep meditation, Goddess Lakshmi appeared in front of him in the form of a deer; She delivered a female child which was discovered by the hunters in a pit of VaLLi roots; the girl was therefore named VaLLi.


** PoyyAmozhi was a poet bent upon praising SivA only and was totally against Murugan. In an interesting episode, Murugan came in the disguise of a hunter with a bow, challenged the poet and eventually won him over.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1172 paththith tharaLa - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]