திருப்புகழ் 1171 பகல்மட்க  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1171 pagalmatka  (common)
Thiruppugazh - 1171 pagalmatka - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதத்தத் தத்தத் தனதன
     தனதத்தத் தத்தத் தனதன
          தனதத்தத் தத்தத் தனதன ...... தனதான

......... பாடல் .........

பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு
     நவரத்நப் பத்தித் தொடைநக
          நுதிபட்டிட் டற்றுச் சிதறிட ...... இதழூறல்

பருகித்தித் திக்கப் படுமொழி
     பதறக்கைப் பத்மத் தொளிவளை
          வதறிச்சத் திக்கப் புளகித ...... தனபாரம்

அகலத்திற் றைக்கப் பரிமள
     அமளிக்குட் சிக்கிச் சிறுகென
          இறுகக்கைப் பற்றித் தழுவிய ...... அநுராக

அவசத்திற் சித்தத் தறிவையு
     மிகவைத்துப் பொற்றித் தெரிவையர்
          வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு ...... துணர்வேனோ

இகல்வெற்றிச் சத்திக் கிரணமு
     முரணிர்த்தப் பச்சைப் புரவியு
          மிரவிக்கைக் குக்டத் துவசமு ...... மறமாதும்

இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு
     கவிமெத்தச் செப்பிப் பழுதற
          எழுதிக்கற் பித்துத் திரிபவர் ...... பெருவாழ்வே

புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு
     கலகச்செற் றச்சட் சமயிகள்
          புகலற்குப் பற்றற் கரியதொ ...... ருபதேசப்

பொருளைப்புட் பித்துக் குருபர
     னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி
          புனையப்பர்க் கொப்பித் தருளிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பகல் மட்கச் செக்கர்ப் ப்ரபை விடு நவ ரத்னப் பத்தித்
தொடை நக நுதி பட்டிட்டு அற்றுச் சிதறிட
... சூரியனுடைய
ஒளியும் மழுங்கும்படி சிவந்த ஒளியை வீசுகின்ற நவ ரத்தினங்களால்
ஆகிய ஒழுங்கு வரிசை கொண்ட மாலை, நகத்தின் நுனி பட்டதனால்
அறுபட்டு சிதறுண்ண,

இதழ் ஊறல் பருகித் தித்திக்கப் படு மொழி பதறக் கைப்
பத்மத்து ஒளி வளை வதறிச் சத்திக்க
... வாயிதழ் ஊறலை உண்டு
இனிமையாகப் பேசும் மொழிகள் பதைபதைப்புடன் வெளிவர, தாமரை
போன்ற கையில் உள்ள பிரகாசமான வளைகள் கலகலத்து ஒலி செய்ய,

புளகித தன பாரம் அகலத்தில் தைக்கப் பரிமள அமளிக்குள்
சிக்கிச் சிறுகு என இறுகக் கைப்பற்றித் தழுவிய அநுராக
அவசத்தில்
... புளகம் கொண்ட தன பாரம் மார்பில் அழுந்த, மணம்
வீசும் படுக்கையில் அகப்பட்டு நிலை தாழுமாறு அழுத்தமாகக்
கையால் அணைத்துத் தழுவிய காமப் பற்றால் வரும் மயக்கத்தில்,

சித்தத்து அறிவையும் மிக வைத்துப் பொற்றித் தெரிவையர்
வசம் விட்டு அர்ச்சிக்கைக்கு ஒரு பொழுது உணர்வேனோ
...
விலைமாதர்களின் வசப்படுதலை விட்டுவிட்டு, உள்ளத்தில் உள்ள
அறிவை மிகவும் வைத்துப் போற்றி உன்னை அர்ச்சனை செய்து
வணங்க ஒரு பொழுதேனும் உணர மாட்டேனோ?

இகல் வெற்றிச் சத்திக் கிரணமும் முரண் நிர்த்தப் பச்சைப்
புரவியும் இரவிக் கைக் குக்(கு)டத் துவசமும் மற மாதும்
...
வலிமையையும் வெற்றியையும் கொண்ட, ஒளி வீசும் வேலாயுதத்தையும்,
வலிமை உடையதும், ஆடல் செய்வதுமான பச்சை நிறம் கொண்ட
குதிரையாகிய மயிலையும், சூரியனுடைய கிரணங்களைக் கூவி
வரவழைக்கும் சேவல் கொடியையும், வேடர் மகளாகிய வள்ளியையும்,

இடை வைத்துச் சித்ரத் தமிழ் கொடு கவி மெத்தச் செப்பிப்
பழுது அற எழுதிக் கற்பித்துத் திரிபவர் பெரு வாழ்வே
...
பாட்டின் இடையே பொருந்த வைத்து அழகிய தமிழால் பாடல்களை
நிறையப் பாடியும், குற்றம் இல்லாமல் எழுதியும் கற்பித்தும் திரியும்
பாவலர்களின் பெரிய செல்வமே,

புகலில் தர்க்கிட்டுப் ப்ரமை உறு கலகச் செற்றச் சட் சமயிகள்
புகலற்குப் பற்றற்கு அரியது ஒர் உபதேசப் பொருளைப்
புட்பித்துக் குருபரன் என
... விருப்பத்துடன் தர்க்கம் செய்து மயக்கம்
கொண்டதும் கலகத்தை விளைவிப்பதும் பகைமை ஊட்டுவதுமான ஆறு
சமயத்தினரும் சொல்லுதற்கும் அடைவதற்கும் முடியாததான ஒப்பற்ற
உபதேசப் பொருளை திருவாய் மலர்ந்து குரு மூர்த்தி என விளங்கி,

முக்கண் செக்கர்ச் சடை மதி புனை அப்பர்க்கு ஒப்பித்து
அருளிய பெருமாளே.
... முன்று கண்களை உடையவரும், சிவந்த
சடை மீது சந்திரனை அணிந்தவருமாகிய தந்தையான சிவபெருமானுக்கு
எடுத்துரைத்து அருளிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.420  pg 3.421  pg 3.422  pg 3.423 
 WIKI_urai Song number: 1170 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1171 - pagalmatka (common)

pakalmatkac chekkarp prapaividu
     navarathnap paththith thodainaka
          nuthipattit tatRuc chithaRida ...... ithazhURal

parukiththith thikkap padumozhi
     pathaRakkaip pathmath thoLivaLai
          vathaRicchath thikkap puLakitha ...... thanapAram

akalaththit Raikkap parimaLa
     amaLikkut cikkic chiRukena
          iRukakkaip patRith thazhuviya ...... anurAka

avasaththiR chiththath thaRivaiyu
     mikavaiththup potRith therivaiyar
          vasamvittarc chikkaik korupozhu ...... thuNarvEnO

ikalvetRic chaththik kiraNamu
     muraNirththap pacchaip puraviyu
          miravikkaik kukdath thuvasamu ...... maRamAthum

idaivaiththuc chithrath thamizhkodu
     kavimeththac cheppip pazhuthaRa
          ezhuthikkaR piththuth thiripavar ...... peruvAzhvE

pukalitRark kittup pramaiyuRu
     kalakacchet Racchat chamayikaL
          pukalaRkup patRaR kariyatho ...... rupathEsap

poruLaipput piththuk gurupara
     nenamukkat chekkarc chadaimathi
          punaiyappark koppith tharuLiya ...... perumALE.

......... Meaning .........

pakal matkac chekkarp prapai vidu nava rathnap paththith thodai naka nuthi pattittu atruch chithaRida: The string of a neat row of nine precious gems, radiating reddish rays of light that blind even the sunlight, gets severed by the tip of their nails, and the gems are scattered around;

ithazh URal parukith thiththikkap padu mozhi pathaRak kaip pathmaththu oLi vaLai vathaRic chaththikka: the sweet words from their mouth that has imbibed the saliva emanate with a flutter; the bright bangles adorning their lotus-like arms make a clinking sound;

puLakitha thana pAram akalaththil thaikkap parimaLa amaLikkuL sikkic chiRuku ena iRukak kaippatRith thazhuviya anurAka avasaththil: their exhilarated bosom heavily impinge on the chest; caught on their fragrant bed and feeling a sense of disgrace, I hug them tightly with my arms and fall into a delusion of passion;

chiththaththu aRivaiyum mika vaiththup potRith therivaiyar vasam vittu arcchikkaikku oru pozhuthu uNarvEnO: why can I not give up being a victim of these whores, and instead, carefully nurture my inner intellect so as to worship You offering flowers and realise You at least once, Oh Lord?

ikal vetRic chaththik kiraNamum muraN nirththap pacchaip puraviyum iravik kaik kuk(ku)dath thuvasamum maRa mAthum: Your dazzling Spear that is strong and triumphant, the dancing horse-like green Peacock, the Rooster on Your flag that invites the rays of the Sun by crowing aloud, and VaLLi, the damsel of the hunters, -

idai vaiththuc chithrath thamizh kodu kavi meththac cheppip pazhuthu aRa ezhuthik kaRpiththuth thiripavar peru vAzhvE: all these form the subject matter of the beautiful Tamil songs sung profusely and composed flawlessly by those poets who roam about teaching them to others; You are the biggest treasure of those poets, Oh Lord!

pukalil tharkkittup pramai uRu kalakac chetRas sat chamayikaL pukalaRkup patRaRku ariyathu or upathEsap poruLaip pudpiththuk guruparan ena: You preached from Your hallowed mouth the matchless Principle that could never be uttered or realised by the zealots of six religions who enter enthusiastically into delusory arguments, pick up quarrels and harbour enmity, Oh Great Master,

mukkaN sekkarc chadai mathi punai apparkku oppiththu aruLiya perumALE.: and that was explained by You graciously to the Lord with three eyes, who wears the crescent moon on His red and matted hair and who is Your Father, Lord SivA, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1171 pagalmatka - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]