திருப்புகழ் 1160 சேலை அடர்த்து ஆலம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1160 sElaiadarththuAlam  (common)
Thiruppugazh - 1160 sElaiadarththuAlam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
     தானதனத் தானதனத் ...... தனதான

......... பாடல் .........

சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித்
     தூறுசிவப் பேறுவிழிக் ...... கணையாலே

தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத்
     தேறலெனக் கூறுமொழிச் ...... செயலாலே

ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத்
     தாலுமிதத் தாலும்வளைப் ...... பிடுவோர்மேல்

ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற்
     றாளிணையைச் சேரஎனக் ...... கருள்வாயே

காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக்
     காயஎரித் தேவிதியிற் ...... றலையூடே

காசினியிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத்
     தேறிவகித் தூருதிரைக் ...... கடல்மீதில்

ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற்
     றாடியிடத் தேயுமைபெற் ...... றருள்வாழ்வே

ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட்
     டாதுலருக் காறுமுகப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையைச் சீறு விதித்து ...
சேல் மீனை வெட்கப்படச் செய்து, விஷம் மிகக் கொண்டதாய், மானைக்
கோபித்து அவமானப்படுத்தி,

ஊறு சிவப்பு ஏறு விழிக் கணையாலே ... செந்நிறம் ஊறி
மேற்காட்டும் கண் என்னும் அம்பு கொண்டும்,

தேன் இரதத்தே முழுகிப் பாகு நிகர்த்து ஆர் அமுதத் தேறல்
எனக் கூறும் மொழிச் செயலாலே
... தேன் சுவையில் தோய்ந்து,
வெல்லப் பாகுக்கு ஒப்பாகி, நிறையமுத பானம் என்று சொல்லத்
தக்கதான மொழிகளின் திறத்தாலும்,

ஆல் இலையைப் போலும் வயிற்றால் அளகத்தால்
அதரத்தாலும் இதத்தாலும் வளைப்பிடுவோர் மேல்
... ஆலிலை
போன்ற வயிற்றாலும், கூந்தலாலும், வாயிதழாலும் இன்பம் தந்து
(ஆண்களின் மனத்தை) வளைத்து இழுப்பவர்களான விலைமாதர் மீதுள்ள

ஆசையினைத் தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள்
இணையைச் சேர எனக்கு அருள்வாயே
... காமப் பற்றைத் தூர
எறிந்து, புகழ் பெற்று அன்புக்கு இடமான (உனது) நல்ல
திருவடியிணைகளைச் சேருவதற்கு எனக்கு அருள் செய்வாயாக.

காலனை மெய்ப் பாதம் எடுத்தே உதையிட்டே மதனைக் காய
எரித்தே
... யமனை உண்மைக்கு இருப்பிடமான தனது திருவடியைத்
தூக்கி உதைத்தும், மன்மதனைச் சுட்டு எரித்தும்,

விதியின் தலை ஊடே காசினியில் காண இரப்பு ஓர் மதியைச்
சூடி
... பிரமனுடைய கபாலம் கொண்டு பூமியில் உள்ளோர் காணும்படி
யாசித்தும், ஒப்பற்ற நிலவைச் சடையில் தரித்தும்,

எருத்து ஏறி வகித்து ஊரு திரைக் கடல் மீதில் ஆலம் மிடற்று
ஆனை உரித்துத் தோலை உடுத்து
... ரிஷபத்தில் ஏறி அமர்ந்தும்,
அசைந்து வரும் அலை வீசும் கடல் மீது எழுந்த ஆலகால விஷத்தைக்
கண்டத்தில் தரித்தும், (எதிர்த்து வந்த) யானையைக் கொன்று அதன்
தோலை உரித்து உடுத்தும்,

ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள்
வாழ்வே
... சுடு காட்டை அடைந்து அங்கே நடனம் புரிபவருமான
சிவபெருமானது இடப் பாகத்தில் உறையும் உமா தேவி பெற்றருளிய
செல்வமே,

ஆழியினைச் சூரனை வெற்பு ஏழினை உற்றே அயில் விட்ட
ஆதுலருக்கு ஆறு முகப் பெருமாளே.
... கடலையும், சூரனையும்,
ஏழு மலைகளையும், இவைகளின் மீது பட்டு அவை அழிந்து போகும்படி
வேலாயுதத்தைச் செலுத்திய, ஏழைகளுக்கு உகந்த, ஆறுமுகப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.394  pg 3.395  pg 3.396  pg 3.397 
 WIKI_urai Song number: 1162 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1160 - sElai adarththu Alam (common)

sElaiyadarth thAlamikuth thEyuzhaiyaic ceeRuvithith
     thURusivap pERuvizhik ...... kaNaiyAlE

thEnirathath thEmuzhukip pAkunikarth thAramuthath
     thERalenak kURumozhic ...... ceyalAlE

Alilaiyaip pOlumvayit RAlaLakath thAlatharath
     thAlumithath thAlumvaLaip ...... piduvOrmEl

Asaiyinaith thUraviduth thEpukazhvut REpriyanat
     RALiNaiyaic cEraenak ...... karuLvAyE

kAlanaimeyp pAthameduth thEyuthaiyit tEmathanaik
     kAyaerith thEvithiyit ...... RalaiyUdE

kAsiniyiR kANairap pOrmathiyaic cUdiyeruth
     thERivakith thUruthiraik ...... kadalmeethil

Alamidat RAnaiyurith thOlaiyuduth theemamathut
     RAdiyidath thEyumaipet ...... RaruLvAzhvE

Azhiyinaic cUranaiveR pEzhinaiyut REyayilvit
     tAthularuk kARumukap ...... perumALE.

......... Meaning .........

sElai adarththu Alam mikuththE uzhaiyais seeRu vithiththu: They put the sEl fish to shame; they contain a lot of poison and frown upon the deer causing humiliation;

URu sivappu ERu vizhik kaNaiyAlE: they are the reddish eyes (of the whores) which are used like arrows;

thEn irathaththE muzhukip pAku nikarththu Ar amuthath thERal enak kURum mozhic ceyalAlE: the quality of their speech is like honey-dipped, comparable to molten jaggery and can be said to equal the heavenly nectar;

Al ilaiyaip pOlum vayitRAl aLakaththAl atharaththAlum ithaththAlum vaLaippiduvOr mEl: and with their belly like the banyan leaf, their hair and sweet lips, they offer so much pleasure that the minds of the men-folk are bent and drawn towards those whores;

Asaiyinaith thUra viduththE pukazhvuRRE priya nal thAL iNaiyais sEra enakku aruLvAyE: kindly make me cast away the passionate desire for them by blessing me to attain fame by reaching Your hallowed and adorable feet!

kAlanai meyp pAtham eduththE uthaiyittE mathanaik kAya eriththE: He kicked away the God of Death (Yaman) by raising His foot which is the seat of truth; He burnt down Manmathan (God of Love);

vithiyin thalai UdE kAsiniyil kANa irappu Or mathiyaic cUdi: He took the skull of BrahmA as a bowl and went around begging while the whole world watched; He wore the matchless crescent moon on His matted hair;

eruththu ERi vakiththu Uru thiraik kadal meethil Alam midatRu Anai uriththuth thOlai uduththu: He mounted the bull, Nanthi; He held in His neck the AlakAla poison that came out from the wavy sea; He killed the menacing elephant, peeled off its hide and wore it;

eemam athu utRu Adi idaththE umai petRu aruL vAzhvE: He goes to the cremation ground and dances there; He is Lord SivA, on the left side of whose body UmAdEvi is concorporate; You are the treasure delivered by Her!

Azhiyinaic cUranai veRpu Ezhinai utRE ayil vitta Athularukku ARu mukap perumALE.: The seas, the demon SUran and the seven mountains were all hit and destroyed when You wielded the spear! You are the six-faced Lord, a favourite of Your destitute devotees, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1160 sElai adarththu Alam - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]