திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1159 செம் கனல் புகை (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1159 semkanalpugai (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன ...... தனதான ......... பாடல் ......... செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள் தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ...... அமராடிச் சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரி யத்தினி லோடாசில திண்டி றற்றவ வாள்வீரரொ ...... டிகலாநின் றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன மந்தி பட்டிருள் மூடாவகை ...... யவிரோத அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந லன்பு வைத்தரு ளாமோர்கழ ...... லருளாதோ கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி கும்பி டத்தகு பாகீரதி ...... மதிமீது கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர குண்ட லத்தர்பி னாகாயுத ...... ருடனேயச் சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர் தங்க ளைச்சிறை மீளாயென ...... அசுரேசன் தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் ... சிவந்த தீயில் புகை எழும்படியாக ஓம குண்டங்கள் அமைத்து யாகங்களைச் செய்த சோமயாஜிகளும்* கூட தெண்டு எனத் துணை தாள் மேல் விழ அமர் ஆடி ... சரணாகதி என்று (தங்கள்) இரு திருவடிகளில் விழும்படி போர் செய்ய வல்லதும், சிந்தனைப் படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா ... மனதில் அழுந்திய மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை, காமம், குரோதம், உலோபம் எனப்படும் எட்டு வகைப்பட்ட துர்க்குணங்களும் பொறிகளின் சபலங்களும் தாக்கித் தம்மை ஆட்டாத சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று ... சில வலிய வன்மையை உடைய தவ ஒளியைக் கொண்ட வீரர்களுடன் மாறுபட்டு அவர்களை வென்று நின்று (அவர்களுடைய) அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் ... உடலை வெட்டும்படியான கூரிய கண்களை உடைய (விலை) மாதர் மீது முற்றும் காம மயக்கம் கொண்டவனாய், மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத அந்த நிற் குண ஞான உதய சுந்தரச் சுடர் ஆராய ... மனம் அழிந்து போய் அஞ்ஞானம் என்ற இருள் வந்து மூடாத வகையில், பகையின்மை எனப்படும் அந்தக் குணம் கடந்த ஞானோதய அழகு ஒளியை நான் ஆராய்வதற்கு, நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ ... நல்ல அன்பை என் மீது வைத்து திருவருளுக்கு இடமான ஒப்பற்ற உனது திருவடியை எனக்கு தந்தருளக் கூடாதோ? கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி ... வாசனை கொண்ட குரா மலர் மாலை, குளிர்ந்த கொன்றை, துளசி, ஆத்தி கும்பிடத் தகு பாகீரதி மதி மீது கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி ... வணங்கத் தகுந்த கங்கைநதி, சந்திரனிடத்தே கொண்டுள்ள அழகிய கலை, (இவைகள் விளங்கும்) ஜடாமுடியில் ஈகைக் கொடிப்பூ, எருக்க மலர் அணிந்துள்ளவர், காகோதரம் குண்டல அத்தர் பினாக ஆயுதருடனே ... பாம்பைக் குண்டலமாக அணிந்தவர், பினாகம் என்னும் வில்லை ஆயுதமாக ஏந்தியவர் (ஆகிய சிவபெருமானும்), ஏயச் சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களைச் சிறை மீளாய் என ... நன்கு பொருந்திய சங்கு, சக்கரம், கதை இவைகளைக் கையில் ஏந்திய திருமாலும், எங்களுடைய செல்வமே, தேவர்களைச் சிறையினின்றும் மீட்டருள்க என்று வேண்ட அசுரேசன் தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக ... அசுரர்கள் தலைவனான சூரன் பற்றுக் கோடின்றி வேதனைப்பட, வேதத்துக்கு இருப்பிடமான பிரமன் பயந்து நிற்க, கிரெளஞ்ச மலை பிளப்புண்டு சிதறி விழ, வீர ஆகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே. ... வீரத்துக்கு இருப்பிடமாய் வேகமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. |
* சோம யாகம் = தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை. இதைச் செய்தவர்கள் சோமயாஜிகள். சோமயாஜிகளும், தவ வீரர்களும் கூடப் பெண்களால் மதி மயங்குவர் என்பது கருத்து. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.392 pg 3.393 pg 3.394 pg 3.395 WIKI_urai Song number: 1161 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1159 - sem kanal pugai (common) senka naRpukai yOmAthikaL kuNda mittezhu sOmAsikaL theNde naththuNai thALmElvizha ...... amarAdi sintha naippadi mOkAthiyi linthri yaththini lOdAsila thiNdi RatRava vALveeraro ...... dikalAnin Rangam vettiya kUrvALvizhi mangai yarkkaRa mAlAymana manthi pattiruL mUdAvakai ...... yavirOtha antha niRkuNa njAnOthaya suntha racchuda rArAyana lanpu vaiththaru LAmOrkazha ...... laruLAthO konga duththaku rAmAlikai thaNka dukkaithu zhAythAthaki kumpi daththaku pAkeerathi ...... mathimeethu koNda sithraka lAcUdikai yiNde rukkaNi kAkOthara kuNda laththarpi nAkAyutha ...... rudanEya sangu sakraka thApANiyu menga Lukkoru vAzhvEsurar thanga LaicchiRai meeLAyena ...... asurEsan thanja matRida vEthAkara nanja veRpuka veerAkara saNda vikrama vElEviya ...... perumALE. ......... Meaning ......... sem kanal pukai OmAthikaL kuNdam ittu ezhu sOmAsikaL: Even the sOmayAjees*, who have performed sacrifices by setting up (hOmA) pits where smoke rises amid flames of fire, theNdu enath thuNai thAL mEl vizha amar Adi: fall flat at their two lotus feet in surrender; so powerful are their cantankerous eyes; sinthanaip padi mOkAthiyil inthriyaththinil OdA sila thiN thiRal thava vAL veerarodu ikalA ninRu: even those warriors who are immune to temptations of the sensory organs and the eight kinds of vices, namely, lust, frenzy, avarice, stubbornness, jealosy, passion, anger and miserliness and who have certain strong characteristics radiating their prowess of sacrifice are conquered by these whores; angam vettiya kUr vAL vizhi mangaiyarkku aRa mAlAy: these women have sharp eyes capable of severing the bodies (of their victims); I became absolutely obsessed with passion, yearning for such whores; manam anthi pattu iruL mUdA vakai avirOtha antha niR kuNa njAna uthaya suntharac chudar ArAya: in order that my mind is not destroyed, being shrouded by the darkness called ignorance, and to enable me to research into the beautiful bright light of non-hostility that is the dawning knowledge, nal anpu vaiththu aruL Am Or kazhal aruLAthO: will You not kindly grant me pure love and present me with Your matchless hallowed feet, the seat of grace? kongu aduththa kurA mAlikai thaN kadukkai thuzhAy thAthaki kumpidath thaku pAkeerathi mathi meethu koNda sithra kalA cUdikai iNdu erukku aNi: He wears on His matted hair fragrant kurA garland, cool kondRai (Indian laburnum) flower, thuLasi and Aththi (mountain ebony) leaves, venerable river Gangai, the moon with beautiful phases and flowers from the creeper eekai and the plant erukkai; kAkOtharam kuNdala aththar pinAka AyutharudanE: He wears the serpent as the dangling ear-stud and holds in His hand the bow, PinAkam, as His weapon; when that Lord SivA, along with Eya sangu sakra kathA pANiyum engaLukku oru vAzhvE surar thangaLais siRai meeLAy ena: Lord VishNu, who holds in His hands the conch-shell, the disc and the mace, fervently appealed to beseeching "Oh Our Treasure! kindly set free the celestials from their prison", asurEsan thanjam atRida vEthAkaran anja veRpu uka: You rendered the leader of the demons, SUran, miserable without any support; Lord BrahmA seated on the VEdAs was terrified; and the Mount Krouncha was shattered to pieces; veera Akara saNda vikrama vEl Eviya perumALE.: when You wielded Your speedy and strong weapon, the Spear, which is the symbol of valour, Oh Great One! |
* sOma yAkam is the sacrifice performed with nectar of the moon to appease the celestials. Those who perform this sacrifice are called sOmayAjees. The idea here is that even the sOmayAjees and other warriors who are credited with several sacrifices are vulnerable to the passion for women. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |