திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1158 சுற்றத்தவர்களும் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1158 sutRaththavargaLum (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தத் தனதன தத்தன தனதன தத்தத் தனதன தத்தன தனதன தத்தத் தனதன தத்தன தனதன ...... தனதானத் ......... பாடல் ......... சுற்றத் தவர்களு மக்களு மிதமுள சொற்குற் றரிவையும் விட்டது சலமிது சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு ...... மெனமாழ்கித் துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல் சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடு தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ...... பிணமூடச் சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல் சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது தப்பிற் றவறுறு மத்திப நடையென ...... உரையாடிச் சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி தத்தச் சடம்விடு மப்பொழு திருசர ...... ணருள்வாயே சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல் சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில் செற்கட் சிவகதி யுத்தமி களிதர ...... முதுபேய்கள் திக்குச் செககெண தித்தரி திகுதிகு செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென ...... நடமாடுங் கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள் குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய் கொச்சைக் கணபதி முக்கண னிளையவ ...... களமீதே குப்புற் றுடனெழு சச்சரி முழவியல் கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர் கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் ... உறவினர்களும், மக்களும், இன்பம் தருவதான சொல்லுக்கு உரிய மனைவியும், விட்டது சலம் இது சுத்தச் சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி ... (நோயாளியின் அருகில் ஈரம் இருக்கக் கண்டு) அது நோயாளி விட்ட சிறுநீர், இது நல்ல நீர் (என்றெல்லாம் பேசி), கொஞ்ச நேரத்தில் இந்நோய் படுக்க வைக்கும் என்று மயங்கி மனம் வருந்தி, துக்கத்தொடு கொடிது ஒட்டியெ அழுது ... துயரத்துடனும், கஷ்டத்துடனும் அணுகியிருந்து அழுது, அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு தொக்குத் தொகு தொகு தொக் என இடு பறை ... தீயால் சுட்டெரிக்க, நெருப்புச் சட்டியில் சுடுதற்கு வேண்டிய தீயுடன் (செல்ல) தொக்குத் தொகு தொகு தொக்கு என்று அடிபடும் பறை தொடங்கி ஒலி செய்ய, பிணம் மூட சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் ... பிணத்தை துணியால் மூடுவதற்கு கொஞ்சம் ஏற்புடையதான நேரம் எது என்ற ஆராய்ச்சிப் பேச்சும் பிறக்கும். உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது தப்பில் தவறு உறும் மத்திப நடை என உரையாடி ... உடல் நன்றாகக் கெட்டுப் போக, உயிர் கொஞ்ச நேரத்துக்குள் (உயிருக்கும் உடலுக்கும் உள்ள) கட்டு தவறிப் போனால் பிழை உண்டாகும், இப்போது நாடி மட்டமான நிலையில் உள்ளது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க, சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி தத்த ... கூச்சலிட்டு வருத்தத்துடன் தலையின் மேல் கையை வைத்து, (நாடி) தவறுகின்றது, இச்சமயம் இவ்வுயிர் பிழைத்தல் எப்படி முடியும் என்கின்ற பேச்சு பரவ, சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே ... உடலை உயிர் விடும் போது, உனது இரண்டு திருவடிகளையும் தந்து அருளுக. சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ரப் ப்ரபை புனை பொற்பினள் இள மயில் செல் கண் சிவ கதி உத்தமி களி தர ... சிறு வீடு கட்டி விளையாடும் மலை (இமவான்) மகள், கொத்தான மலர்கள் வைத்துள்ள சுருண்ட கூந்தலை உடையவள், விசித்திரமான ஒளி வாய்ந்த அழகை உடையவள், இள மயில் போன்றவள், மழை போலும் குளிர்ந்த கண்ணை உடையவள், முக்தியைத் தரும் உத்தமி ஆகிய பார்வதி கண்டு களிக்க, முது பேய்கள் திக்குச் செககெண தித்தரி திகுதிகு செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென நடமாடும் ... பழமையான பேய்க் கூட்டங்கள் 'திக்குச் செககெண தித்தரி திகுதிகு செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத டெட்டெட் டுடுடுடு தத்தரி தரி' என சூழ்ந்து நடனமாட, கொற்றப் புலி அதள் சுற்றிய அரன் அருள் ... வீரமுள்ள புலியின் தோலை ஆடையாகச் சுற்றியுள்ள சிவபிரான் அருளிய குட்டிக் கரி முகன் இக்கு அவல் அமுது செய் கொச்சைக் கணபதி முக்க(ண்)ணன் இளையவ ... குழந்தை யானை முகன், கரும்பு அவல் இவைகளை உண்ணும் எளிய தோற்றத்தை உடைய கணபதி, மூன்று கண்களை உடையவன் (ஆகிய விநாயகனுக்கு) தம்பியே, கள(ம்) மீதே குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்டச் சுரர் பதி மெய்த்திட ... போர்க் களத்தில் மேற்கிளம்பி ஒலிக்கும் வாத்திய வகை, முரசு முதலியவை தகுதியுடன் முழங்க, தேவர்கள் அரசனான இந்திரன் நிலை பெற்று உண்மையாய் வாழ, நிசிசரர் கொத்துக் கிளை உடல் பட்டு உக அமர் செய்த பெருமாளே. ... அசுரர்கள் கூட்டமும் சுற்றமும் உடல் அழிபட்டுச் சிதற, சண்டை செய்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.390 pg 3.391 pg 3.392 pg 3.393 WIKI_urai Song number: 1160 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1158 - sutRaththavargaLum (common) sutRath thavarkaLu makkaLu mithamuLa soRkut Rarivaiyum vittathu salamithu suththac chalamini satRithu kidaipadu ...... menamAzhkith thukkath thodukodi thottiye yazhuthazhal suttak kudamodu sutteri kanalodu thokkuth thokuthoku thokkena idupaRai ...... piNamUda satRop puLathoru sacchaiyu mezhumudal sattap padavuyir satRudan visiyathu thappit RavaRuRu maththipa nadaiyena ...... uraiyAdi saththip podukaram vaiththidar thalaimisai thappit Rithupizhai yeppadi yenumozhi thaththac chadamvidu mappozhu thirusara ...... NaruLvAyE sitRiR kirimakaL koththalar purikuzhal sithrap prapaipunai poRpina LiLamayil seRkat sivakathi yuththami kaLithara ...... muthupEykaL thikkuc chekakeNa thiththari thikuthiku secchec cheNakrutha dottari seNakrutha dettet dudududu thaththari thariyena ...... nadamAdum kotRap puliyathaL sutRiya aranaruL kuttik karimuka nikkava lamuthusey kocchaik kaNapathi mukkaNa niLaiyava ...... kaLameethE kupput Rudanezhu sacchari muzhaviyal kottac churarpathi meyththida nisisarar koththuk kiLaiyudal pattuka amarseytha ...... perumALE. ......... Meaning ......... sutRaththavarkaLum makkaLum itham uLa soRku utRa arivaiyum: The relatives, children and the wife with soothing words vittathu salam ithu suththac chalam ini satRu ithu kidaipadum ena mAzhki: are all dismayed (looking at the wetness near the patient) wondering whether it is his urine or plain water; (talking among themselves) they conclude that the disease is about to make the patient bedridden; thukkaththodu kodithu ottiye azhuthu azhal sutta: weeping with grief and feeling miserable, they approach the body; kudamodu suttu eri kanalodu thokkuth thoku thoku thok ena idu paRai: in preparation for consigning the body to fire, they walk with a pot of fire against the background noise of drums sounding like "thokku thoku thoku thokku"; piNam mUda satRu oppuLathu oru sacchaiyum ezhum: discussion ensues as to which is the appropriate time to cover the corpse with a cloth; udal sattappada uyir satRu udan visiyathu thappil thavaRu uRum maththipa nadai ena uraiyAdi: as the body has totally deteriorated, talk prevails as follows - "Any moment, the bondage between the body and the soul is to break and when the rhythm stops, life will escape; and the pulse has now reached the lowest level"; saththippodu karam vaiththu idar thalai misai thappitRu ithu pizhai eppadi enum mozhi thaththa: amidst a lot of commotion, people, with their hands held on their heads in sorrow, spread around the word that with the pulse failing, there is no way the life can be saved; sadam vidum appozhuthu iru saraN aruLvAyE: at that very moment when my life departs from the body, kindly grant me Your two hallowed feet! sitRu il kiri makaL koththu alar puri kuzhal sithrap prapai punai poRpinaL iLa mayil sel kaN siva kathi uththami kaLi thara: She is MOunt HimavAn's daughter playing about, building little houses in sand; She has curly hair on which bunches of flowers are bedecked; She radiates awesome beauty; She is like the young peacock; Her eyes are cool like the rain; She is the virtuous Goddess who grants liberation; and that DEvi PArvathi happily admired You; muthu pEykaLthikkuc chekakeNa thiththari thikuthiku secchec cheNakrutha dottari seNakrutha detted dudududu thaththari thariyena nadamAdum: a group of the old guards, SivA's devils, danced to the meter "thikkuc chekakeNa thiththari thikuthiku secchec cheNakrutha dottari seNakrutha detted dudududu thaththari thari"; kotRap puli athaL sutRiya aran aruL kuttik kari mukan: He has the little baby-elephant's face, graciously created by Lord SivA who has draped the brave tiger's skin around His body; ikku aval amuthu sey kocchaik kaNapathi mukka(N)Nan iLaiyava: He devours sugarcane and puffed rice; He has the most simplistic form; He is the three-eyed Lord GaNapathi; and You are His younger brother, Oh Lord! kaLa(m) meethE kupputRudan ezhu sacchari muzhavu iyal kottac churar pathi meyththida: As several drums and percussion instruments are beaten in the battlefield, raising sound in an appropriate manner, and in order that IndrA, the King of the Celestials, leads a steady life truthfully, nisisarar koththuk kiLai udal pattu uka amar seytha perumALE.: You fought the war shattering the bodies of the demons and their clan to pieces, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |