திருப்புகழ் 1155 கோழையாய் ஆணவம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1155 kOzhaiyAiANavam  (common)
Thiruppugazh - 1155 kOzhaiyAiANavam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனா தனன தத்த, தானனா தனன தத்த
     தானனா தனன தத்த ...... தனதான

......... பாடல் .........

கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்
     கோதுசே ரிழிகு லத்தர் ...... குலமேன்மை

கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர
     கோவுநா னெனஇ சைப்பர் ...... மிடியூடே

ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்
     ஆசுசேர் கலியு கத்தி ...... னெறியீதே

ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு
     ளாகையா லவைய டக்க ...... வுரையீதே

ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர
     ஈசன்மேல் வெயிலெ றிக்க ...... மதிவேணி

ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்
     ஏறியே யினிதி ருக்க ...... வருவோனே

வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து
     வேதனா ரையும் விடுத்து ...... முடிசூடி

வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த
     வீறுசேர் சிலை யெடுத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் ... பயந்தவராய்
இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப் பேச்சைப் பேசுவார்கள் சிலர்.

அற்பர் கோது சேர் இழி குலத்தர் குல மேன்மை கூறியே நடு
இருப்பர்
... கீழ் மக்களாகவும் குற்றம் உள்ள இழி குலத்தவராகவும்
இருப்பினும், சிலர் தங்கள் குலத்தின் பெருமையே பேசி சபை நடுவே
வீற்றிருப்பர்.

சோறு இடார் தரும புத்ர கோவு(ம்) நான் என இசைப்பர் ...
(பசித்தவருக்குச்) சோறு இடாத பேர்வழிகள் தரும புத்ர அரசனே
நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசுவர்.

மிடி ஊடே ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் ...
தரித்திர நிலையில் ஆழ்ந்து கிடப்பவர் செல்வம் மிக்க குபேரன் நான்
என்று தம்மைத் தாமே புகழ்வர்.

ஆசு சேர் கலி யுகத்தின் நெறி ஈதே ... குற்றம் நிறைந்த
கலி யுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது.

ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அ(ல்)ல அதற்குள்
ஆகையால் அவை அடக்க உரை ஈதே
... ஆய வேண்டிய நூல்
அறிவு இல்லாத நானும் இந்த வழிக்கு வேறுபட்டவன் அல்லன். அந்த
வழியில் ஆதலால் வெறும் அவை அடக்கப் பேச்சுப்போல் நான்
சொன்ன உரையாகும் இது.

ஏழை வானவர் அழைக்க ஆனை வாசவன் உருத்ர ஈசன் மேல்
வெயில் எறிக்க
... கஷ்ட நிலையில் இருந்த தேவர்கள் அழைக்க,
ஐராவதம் என்னும் யானையை உடைய இந்திரன், ருத்ர தேவன்
இவர்கள் மீது (சூரனுடைய) வெயில்போன்ற கொடுமை தாக்க,

மதி வேணி ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை
வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே
...
சந்திரன் அணிந்த சடையை உடைய சிவபெருமான் தங்களுடைய
துன்பத்தை (உன் துணை கொண்டு) நீக்கிய பின், கயிலை மலையில்
ஏறி இன்புற்றிருக்க வந்த பெருமானே,

வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து ...
ஐராவதத்தின் மீது வீற்றிருக்கும் வஜ்ராயுதத்தை ஏந்திய தலைவனாகிய
இந்திரனைச் சிறையினின்று விடுத்து,

வேதனாரையும் விடுத்து முடி சூடி ... பிரமனையும் சிறையிலிருந்து
விடுத்து, இந்திரனுக்கு வானுலக அரசாட்சியைத் தந்து,

வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த ... வீரமுள்ள
சூரனின் தலையில் ஏறி கழுகுகள் கொத்தும்படியாக

வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே. ... பெருமை வாய்ந்த
வில்லை எடுத்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.382  pg 3.383  pg 3.384  pg 3.385 
 WIKI_urai Song number: 1157-1 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1155 - kOzhaiyAi ANavam (common)

kOzhaiyA Navami kuththa veeramE pukalvar aRpar
     kOthusE rizhiku laththar ...... kulamEnmai

kURiyE naduvi ruppar sORidAr tharuma puthra
     kOvunA nenai saippar ...... midiyUdE

AzhuvAr nithiyu daikku pEranA menai saippar
     AsusEr kaliyu kaththi ...... neRiyeethE

AyunU laRivu ketta nAnumvE Rala athaRku
     LAkaiyA lavaiya dakka ...... vuraiyeethE

EzhaivA navara zhaikka AnaivA savanu ruthra
     eesanmEl veyile Rikka ...... mathivENi

eesanAr thamathi dukka mARiyE kayilai veRpil
     ERiyE yinithi rukka ...... varuvOnE

vEzhamee thuRaiyum vajra thEvarkO siRaivi duththu
     vEthanA raiyum viduththu ...... mudicUdi

veeracU ravan mudikku LERiyE kazhuku koththa
     veeRusEr silai yeduththa ...... perumALE.

......... Meaning .........

kOzhaiyAy ANavam mikuththa veeramE pukalvar: Some people, even though they are cowards, speak egotistically about their valour;

aRpar kOthu sEr izhi kulaththar kula mEnmai kURiyE nadu iruppar: some lowly people of despicable origin always boast about their lineage and take centre-seats on the stage;

sORu idAr tharuma puthra kOvu(m) nAn ena isaippar: those who never feed the hungry people claim to be the great charitable King Dharmaputhra;

midi UdE AzhuvAr nithi udai kupEranAm ena isaippar: people who are drowning in poverty call themselves KubEran (the Lord of Wealth);

Asu sEr kali yukaththin neRi eethE: and this is the way of life in this blemished age of Kaliyugam.

Ayu nUl aRivu ketta nAnum vERu a(l)la athaRkuL AkaiyAl avai adakka urai eethE: I do not possess the knowledge to undertake a research into texts of ethics nor am I an exception among the aforesaid people. My statement, therefore, is nothing but a formal one of modesty.

Ezhai vAnavar azhaikka Anai vAsavan uruthra eesan mEl veyil eRikka: As the oppressed celestials beseeched for help and IndrA (with His elephant AirAvadham), and Lord Rudra were scorched by the evil deeds of the demon SUran,

mathi vENi eesanAr thamathu idukkam mARiyE kayilai veRpil ERiyE inithu irukka varuvOnE: Lord SivA, wearing the crescent moon on His matted hair, removed their misery (through You); then, You came to Mount KailAsh to relax with relish!

vEzham meethu uRaiyum vajra thEvar kO siRai viduththu: You released from the prison King IndrA, who wields the weapon vajra and who rides the elephant, AirAvadham;

vEthanAraiyum viduththu mudi cUdi: You also released BrahmA from His prison and crowned IndrA as the King of the celestial land!

veera cUr avan mudikkuL ERiyE kazhuku koththa veeRu sEr silai eduththa perumALE.: You shot arrows from Your famous bow to knock down the head of the powerful demon SUran which vultures mounted and began plucking the flesh, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1155 kOzhaiyAi ANavam - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]