திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1146 ஓது வித்தவர் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1146 Odhuviththavar (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தத்தன தானன தானன தான தத்தன தானன தானன தான தத்தன தானன தானன ...... தனதான ......... பாடல் ......... ஓது வித்தவர் கூலிகொ டாதவர் மாத வர்க்கதி பாதக மானவர் ஊச லிற்கன லாயெரி காளையர் ...... மறையோர்கள் ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள் ஆர்த னக்குமு தாசின தாரிகள் ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக் கேது மித்தனை தானமி டாதவர் பூத லத்தினி லோரம தானவர் ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள் ஏக சித்ததி யானமி லாதவர் மோக முற்றிடு போகித மூறினர் ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே தாத தத்தத தாதத தாதத தூது துத்துது தூதுது தூதுது சாச சச்சச சாசச சாசச ...... சசசாச தாட டட்டட டாடட டாடட டூடு டுட்டுடு டூடுடு டூடுடு தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு சேயெ னப்பல ராடிட மாகலை ஆயு முத்தமர் கூறிடும் வாசக சேகு சித்திர மாக நிணாடிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஓது வித்தவர் கூலி கொடாதவர் ... கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காதவர்கள், மாதவர்க்கு அதி பாதகம் ஆனவர் ... சிறந்த தவசிகளுக்கு மிக்க இடையூறுகளை விளைவித்தவர்கள், ஊசலில் கனலாய் எரி காளையர் ... காமத்தின் வசத்தால் நெருப்புப் போல் கொதித்து வேதனை உறும் காளைப் பருவத்தினர், மறையோர்கள் ஊர் தனக்கு இடரே செயும் ஏழைகள் ... வேதம் ஓதுபவர்கள் இருக்கும் ஊர்களுக்கு துன்பம் விளைவிக்கின்ற அறிவிலிகள், ஆர் தனக்கும் உதாசின தாரிகள் ... யாவரிடத்தும் அலட்சியமாக நடந்து கொள்ளுபவர்கள், ஓடி உத்தமர் ஊதியம் நாடினர் ... வேகமாக வந்து, நல்லவர்களிடத்து (ஏமாற்றி) இலாபம் அடைய விரும்புவர்கள், இரவோருக்கு ஏதும் இத்தனை தானம் இடாதவர் ... இரந்து கேட்போருக்கு கொஞ்சம் கூட தானம் செய்யாதவர்கள், பூதலத்தினில் ஓரம தானவர் ... உலகில் ஒருதலைப்பட (பாரபட்சமாகப்) பேசுபவர்கள், ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை இகழ்வோர்கள் ... சிவபெருமானையும், திருமாலையும் வழிபடுவர்களை தாழ்மையாகப் பேசுபவர்கள், ஏக சித்த தியானம் இலாதவர் ... ஒரு முகப்பட்ட மனதுடன் தியானம் செய்யாதவர்கள், மோகம் உற்றிடு போகிதம் ஊறினர் ... மிகுந்த காமத்துடன் இன்ப நிலையில் மூழ்கி இருப்பவர்கள், ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே ... இழி குணம் படைத்தவர்கள், இவ்வளவு பேர்களும் ஏழு நரகங்களில் வீழ்ந்து அலைச்சல் உறுவார்கள். தாத தத்தத தாதத தாதத தூது துத்துது தூதுது தூதுது சாச சச்சச சாசச சாசச ...... சசசாச தாட டட்டட டாடட டாடட டூடு டுட்டுடு டூடுடு டூடுடு தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு சே எனப் பலர் ஆடிட ... (இதே தாள ஒலிகளுடன்) பல மக்கள் கூத்தாட, மா கலை ஆயும் உத்தமர் கூறிடும் வாசக ... சிறந்த கலைகளை ஆய்ந்துள்ள நற்குணம் உடையவர்கள் புகழ்ந்து போற்றிடும் தேவாரப் பாக்களைச் (சம்பந்தராக வந்து) அருளியவனே, சேகு சித்திரமாக நின்று ஆடிய பெருமாளே. ... சிவந்த நிறத்துடன் அழகாக நின்று கூத்து** ஆடிய பெருமாளே. |
* ஏழு நரகங்கள் பின்வருமாறு: கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்). |
** முருகவேள் சூரனை வென்றவுடன் ஆடிய கூத்து, துடிக் கூத்து. அசுரர் படைகளை எல்லாம் வென்றபின் ஆடிய கூத்து, குடைக் கூத்து. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.352 pg 3.353 pg 3.354 pg 3.355 pg 3.356 pg 3.357 WIKI_urai Song number: 1149 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1146 - Odhu viththavar (common) Odhu viththavar kUliko dAthavar mAtha varkkathi pAthaka mAnavar Usa liRkana lAyeri kALaiyar ...... maRaiyOrkaL Urtha nakkida rEseyu mEzhaikaL Artha nakkumu thAsina thArikaL Odi yuththama rUthiya nAdina ...... riravOruk kEthu miththanai thAnami dAthavar pUtha laththini lOrama thAnavar eesar vishNuvai sEvaisey vOrthamai ...... yikazhvOrkaL Eka siththathi yAnami lAthavar mOka mutRidu pOkitha mURinar eena riththanai pErkaLu mEzhnara ...... kuzhalvArE thAtha thaththatha thAthatha thAthatha thUthu thuththuthu thUthuthu thUthuthu sAsa sassasa sAsasa sAsasa ...... sasasAsa thAda daddada dAdada dAdada dUdu duddudu dUdudu dUdudu thAdi diddidi deedidi deedidi ...... didideedee theethi thiththithi theethithi theethithi thOthi kuththiku thOthiku thOthiku sEku sekkuku sEkuku sEkuku ...... sekusEku sEye nappala rAdida mAkalai Ayu muththamar kURidum vAsaka sEku siththira mAka niNAdiya ...... perumALE. ......... Meaning ......... Othu viththavar kUli kodAthavar: Those who have not paid the fees to their teachers, mAthavarkku athi pAthakam Anavar: those who do great harm to the venerable sages, Usalil kanalAy eri kALaiyar: those youngsters who burn themselves away with lust, maRaiyOrkaL Ur thanakku idarE seyum EzkaikaL: those fools who are out to ravage the towns of practitioners of scriptures, Ar thanakkum uthAsina thArikaL: those who are impertinent to everyone, Odi uththamar Uthiyam nAdinar: those who rush to virtuous people to exploit them and gain unfairly, iravOrukku Ethum iththanai thAnam idAthavar: those who do not give even a morsel of charity to seekers, pUthalaththinil Orama thAnavar: those in this world who speak one-sidedly (with prejudice), eesar vishNuvai sEvai seyvOr thamai ikazhvOrkaL: those who speak derisively of the worshippers of Lords SivA and VishNu, Eka siththa thiyAnam ilAthavar: those who do not meditate single-mindedly, mOkam utRidu pOkitham URinar: those who indulge in excessive passion and carnal pleasure, eenar iththanai pErkaLum Ezh naraku uzhalvArE: and all such dishonorable people will suffer, being tossed about in seven kinds* of hell. thAtha thaththatha thAthatha thAthatha .. thUthu thuththuthu thUthuthu thUthuthu sAsa sassasa sAsasa sAsasa sasasAsa thAda daddada dAdada dAdada .. dUdu duddudu dUdudu dUdudu thAdi diddidi deedidi deedidi didideedee theethi thiththithi theethithi theethithi .. thOthi kuththiku thOthiku thOthiku sEku sekkuku sEkuku sEkuku sekusEku .. sE enap palar Adida: (To the above meter) many people danced in rhapsody; mA kalai Ayum uththamar kURidum vAsaka: as You (as ThirugnAna Sambandhar) kindly composed several hymns (ThEvAram) which are hailed by many learned and virtuous people who have performed research in fine arts! sEku siththiramAka ninRu Adiya perumALE.: You stood graciously in a reddish form and performed an elegant dance**, Oh Great One! |
* The seven hells are: kUdAsalam, kumbipAkam, aLLal, athOkathi, Arvam, pUthi and chenthu (pingalam). |
** Lord Murugan performed two dances: once, He danced "thudik kUththu", after destroying the demon SUran; and the second time, He danced "kudaik kUththu" after killing all the demons. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |