பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 345 (வித்தகம் தரு) சாமர்த்தியம் (தரு தருகின்ற (விந்து தயும் குழி) சுக்கிலத்துக்குக் கேடுண்டாக்கும் (குழிபட்டு) அல்குலிற் பட்டு (அழிந்து) அழிவுற்று. (நலங்கு நொந்து போகின்ற (குரம்பையை) சிறு குடிலாகிய இவ்வுடலை விட்டு நீங்கி, உனது தாமரை போன்ற மென்மை வாய்ந்த திருவடியை என்று கூடுவேன். (மைக்கருங் கடல்) மிகக் கரிய கடல் அன்று தீப்பட்டு மிக எரிய, (மெய் க்ரவுஞ்ச சிலம்பு (அசுர) உணர்ச்சி கொண்டிருந்த கிரவுஞ்ச மலையின், உடல் வெம்பிட உடலம் தீப்பட்டழிய, மற்று மேலும், நன்பதி - சூரனுடைய சிறப்பான நகரமாம் மகேந்திர பட்டணம் (குன்றி) வளங்குன்றிப் பாழ்பட, தேவர் நாட்டு அரசன் (இந்திரன்) வஜ்ராயுதத்தைக் (குலிசாயுதத்தைக்) கையில் தரித்துத் தனது (இந்த்ர) பதவியில் வாழ்வுற, நீ வியந்த (அல்லது உன்னை வியந்த) குஞ்சரி - தேவசேனையின் கொங்கை உனது திருப்புயங்களைப் பெற, அல்லது கொங்கையை உன் திருப்புயம் பெற, மத்த மத்தம் - செருக்கையும், கொடிய கோபத்தையும் கொண்ட வஞ்சக எண்ணத்தினராம் அசுரர்களைக் கொன்று விழுங்கின வேலாயுதனே! கோழியைக் கொடியாகக் கொண்ட பராபர மூர்த்தியே! சக்ரவாளகிரியாற் சூழப்பட்ட (மண்டலம்) பிரதேசங்களிலும் எட்டுத் திசையிலும்' (உன்) புகழ் (கொட்க) வெளிவரக் கொன்றைம்ாலை அணிந்த (தந்தையர்ம் சிவபிரானது) சிரத்தைச் (சரண் அங்கிகார) உனது திருவடியில் (அங்கீகரித்தவனே) ஏற்றுக் கொண்டவனே! பூங்கொத்துக்கள் அவிழும் கடப்ப மலரில் (தங்கிய) நிலைத்துள்ளதான (மிக்க வங்கண்) மிகுந்த காதலை உடையவனே! அல்லது மிக்க அங்கண - சிறந்த கடவுளே! (கங்கண திண்புய) வாகு வலயம் தோளணி கொண்ட வலிய திருப்புயங்களை உடையவனே! (கொற்றம்) வெற்றியையும் (அம்) அழகையும் கொண்ட (குறமங்கை) வள்ளி விரும்பின (அல்லது) வள்ளியை விரும்பின) தம்பிரானே! (அம்புய மென்பதம் என்று சேர்வேன்) 1149. ஒது வித்தவர் கல்விகற்பித்த ஆசிரியருக்குக் கூலி கொடர்தவர்; சிறந்த தவசிகளுக்கு அதிக H ளேன் பாதகத் தொழிலினர் - பெரும்பாவிகள் ஊசலிற் கனலாய் ஏரி காளையர் (காமாதிகளால்) மனந்தடுமாற்றம் உறும் வேளையில் (கனலாப் எரி) தீப் போலக் கனன்று வேதனையுறும் இளமைப் பருவத்தினர்; அந்தணர்கள் (வாழும்).