திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1145 ஒக்க வண்டெழு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1145 okkavaNdezhu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்த தந்தன தந்தன தந்தன தத்த தந்தன தந்தன தந்தன தத்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான ......... பாடல் ......... ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட உற்ப லங்கள்சி வந்துகு விந்திட ...... இந்த்ரகோபம் ஒத்த தொண்டைது வண்டமு தந்தர மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற வொக்க மென்தொனி வந்துபி றந்திட ...... அன்புகூர மிக்க சந்திர னொன்றுநி லங்களில் விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ ...... ளின்பமாதர் வித்த கந்தரு விந்துத புங்குழி பட்ட ழிந்துந லங்குகு ரம்பையை விட்ட கன்றுநி னம்புய மென்பத ...... மென்றுசேர்வேன் மைக்க ருங்கட லன்றெரி மண்டிட மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட மற்று நன்பதி குன்றிய ழிந்திட ...... வும்பர்நாடன் வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற மெச்சு குஞ்சரி கொங்கைபு யம்பெற மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை ...... நுங்கும்வேலா குக்கு டங்கொடி கொண்டப ரம்பர சக்ர மண்டல மெண்டிசை யும்புகழ் கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர ...... ணங்கிகாரா கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண்புய கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட ... ஒன்று கூடி வண்டுகள் எழுந்து மொய்க்கும் கூந்தல் கலைய, வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட ... மலை போன்ற பருத்த மார்பகங்கள் குழைதல் அடைய, உற்பலங்கள் சிவந்து குவிந்திட இந்த்ர கோபம் ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர ... நீலோற்பலம் போன்ற கண்கள் சிவந்து குவிய, தம்பலப்பூச்சி போன்று சிவந்த கொவ்வைக் கனியை ஒத்த வாயிதழ் துவட்சி உற்று அமுத ஊறலைத் தர, மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு ஒக்க மென் தொனி வந்து பிறந்திட ... மெச்சும்படியான வண்டு, கரிய குயில், மெல்லிய புறா இவைகளின் ஒலிக்கு நிகரான மென்மையான புட்குரல் கண்டத்தில் தோன்றி எழ, அன்பு கூர மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட ... அன்பு மிக்கெழ நன்றாகப் பிரகாசிக்கும் சந்திர காந்தக் கல் வேய்ந்துள்ள தளத்தில், பல வீரச் செயல்களை நிகழ்த்தி விளங்கும் நகரேகை படும்படி மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் இன்ப மாதர் வித்தகம் தரு விந்து த(ப்)பும் குழி பட்டு அழிந்து நலங்கு குரம்பையை விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன் ... பக்குவமாக நல்ல பொருள் கிடைத்த அளவுக்குத் தகுந்த அன்பைத் தந்து கூடும் சிற்றின்ப மாதர்களின் சாமர்த்தியம் தருகின்ற சுக்கிலத்துக்குக் அழிவு உண்டாக்கும் பெண்குறிக்குள் விழுந்து அழிந்து நொந்து போகும் சிறு குடிலாகிய இவ்வுடலை விட்டு நீங்கி, உன்னுடைய தாமரை போன்ற மென்மை வாய்ந்த திருவடியை என்று கூடுவேன்? மைக் கருங் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட மற்று நன் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன் வச்சிரம் கை அணிந்து பதம் பெற ... மிகக் கரிய கடல் அன்று தீப்பட்டு எரிய, அசுர உணர்ச்சி கொண்டிருந்த கிரவுஞ்ச மலையின் உடலம் நெருப்பிலே அழிய, மேலும் (சூரனுடைய) சிறப்பான நகரமாகிய மகேந்திரபட்டணம் வளம் குறைந்து பாழ்பட, தேவர் நாட்டு அரசனான இந்திரன் குலிஜாயுதத்தைக் கையில் தரித்த பதவியில் வாழ்வு பெற, மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற மத்த வெம்சின வஞ்சகர் தங்களை நுங்கும் வேலா ... வியக்கத்தக்க தேவயானையின் மார்பகங்கள் உனது திருப்புயம் பெற, செருக்கையும் கொடிய கோபத்தையும் கொண்ட வஞ்சக அசுரர்களைக் கொன்று விழுங்கிய வேலைக் கையில் தாங்கியவனே, குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ் கொட்க கொன்றை அணிந்த சிரம் சரண் அங்கிகாரா ... சேவற்கொடியை கையில் ஏந்திய பராபர மூர்த்தியே, சக்ரவாளகிரியால் சூழப்பட்ட இடங்களிலும், எட்டுத் திசையில் உள்ளவர்களும் உனது புகழை வெளிப்படுத்த, கொன்றை மலரைத் தரித்த (தந்தையாகிய) சிவபெருமானின் சிரத்தினை உனது திருவடியில் ஏற்றுக் கொண்டவனே, கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே. ... பூக்கொத்துகள் அவிழும் கடப்ப மலரில் நிலைத்துள்ள சிறந்த கடவுளே, கங்கணம் அணிந்த திருப்புயங்களை உடையவனே, வெற்றியையும் அழகையும் கொண்ட குற மங்கையாகிய வள்ளி நாயகி விரும்பும் தம்பிரானே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.350 pg 3.351 pg 3.352 pg 3.353 WIKI_urai Song number: 1148 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1145 - okka vaNdezhu (common) okka vaNdezhu koNdaiku lainthida veRpe nungana kongaiku zhainthida uRpa langaLsi vanthuku vinthida ...... inthrakOpam oththa thoNdaithu vaNdamu thanthara mecchu thumpika rumkuyil menpuRa vokka menthoni vanthupi Ranthida ...... anpukUra mikka chanthira nonRuni langaLil vikra manjeythi languna kampada meththa menporu LanpaLa vunthuva ...... LinpamAthar viththa kantharu vinthutha pumkuzhi patta zhinthuna languku rampaiyai vitta kanRuni nampuya menpatha ...... menRusErvEn maikka rumkada lanReri maNdida meykra vunjasi lampudal vempida matRu nanpathi kunRiya zhinthida ...... vumparnAdan vacchi rangaiya Ninthupa thampeRa mecchu kunjari kongaipu yampeRa maththa vemchina vanjakar thangaLai ...... nungumvElA kukku damkodi koNdapa rampara chakra maNdala meNdisai yampukazh kotka konRaiya Ninthasi ranchara ...... NangikArA koththa vizhnthaka dampalar thangiya mikka vangaNa kangaNa thiNpuya kotRa vanguRa mangaivi rumpiya ...... thambirAnE. ......... Meaning ......... okka vaNdu ezhu koNdai kulainthida: Their hair around which the beetles swarm together became dishevelled; veRpu enum kana kongai kuzhainthida: their mountain-like huge bosom became mellowed; uRpalangaL sivanthu kuvinthida inthra kOpam oththa thoNdai thuvaNdu amutham thara: their eyes that look like the blue lily reddened and contracted; their reddish lips like the cochineal insect and the kovvai fruit withered and exuded nectar-like saliva; mecchu thumpi karum kuyil men puRavu okka men thoni vanthu piRanthida: soft sounds of cooing of the birds like the admirable beetle, the black cuckoo and the gentle pigeon emanated from their throat; anpu kUra mikka chanthiran onRu nilangaLil vikramam seythu ilangu nakam pada: out of overpouring love, on the brightly lit moonstone floor, they demonstrated several heroic deeds by etching their nail-marks; meththa men poruL anpu aLavum thuvaL inpa mAthar viththakam tharu vinthu tha(p)pum kuzhi pattu azhinthu nalangu kurampaiyai vittu akanRu nin ampuyam men patham enRu sErvEn: these pleasure girls tactfully dispense love commensurate with the amount of money they receive in their hand; delving deep into the genitals of these calculating whores offering trivial and measured pleasure and wasting the precious sperm, this little cottage of my body is misearbly weakened; and when will I leave this body and merge with Your soft and hallowed feet, Oh Lord? maik karum kadal anRu eri maNdida mey kravunja silampu udal vempida matRu nan pathi kunRi azhinthida umpar nAdan vacchiram kai aNinthu patham peRa: The dark and wide sea caught fire that day; the mount Krouncha, possessed of demonic thoughts, was also burnt down by fire; further, the famous capital-city, MahEndrapattiNam, (of the demon SUran) was destroyed shedding all its charms; IndrA, the king of the celestials, was able to regain his kingdom holding the weapon Vajra in his hand; mecchu kunjari kongai puyam peRa maththa vemchina vanjakar thangaLai nungum vElA: the bosom of DEvayAnai, the wonderful daughter of the celestials, hugged Your hallowed shoulders as You held in Your hand the great spear that gobbled up the lives of demons notorious for their arrogance, wild temper and treachery, Oh Lord! kukkudam kodi koNda parampara chakra maNdalam eN thisaiyum pukazh kotka konRai aNintha siram charaN angikArA: Oh Supreme Lord, You hold the staff of the Rooster prominently in Your hand! All people around the mount ChakravaLAkam and in the eight directions extolled Your glory as You graciously accepted the worship of Your Father, Lord SivA, prostrating at Your hallowed feet placing His head wearing kondRai flower (Indian Laburnum) on the matted hair, Oh Lord! koththu avizhntha kadampu alar thangiya mikka vangaNa kangaNa thiN puya kotRam am kuRa mangai virumpiya thambirAnE.: You constantly remain among the bunches of blossoming kadappa flowers, Oh famous Lord! You wear the triumphant shoulder belts around the hallowed shoulders! VaLLi, the damsel of the KuRavAs, known for her beauty and victory, loves You intensely, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |