திருப்புகழ் 1102 உம்பரார் அமுது  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1102 umbarAramudhu  (common)
Thiruppugazh - 1102 umbarAramudhu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
     தந்தனா தனதனந் ...... தனதான

......... பாடல் .........

உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்
     டுண்டுமே கலைகழன் ...... றயலாக

உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன்
     பொன்றிலா ரொடுதுவண் ...... டணைமீதே

செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ்
     சிந்தவாள் விழிசிவந் ...... தமராடத்

திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ்
     சிந்தையே னெனவிதங் ...... கரைசேர்வேன்

கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்
     கொண்டல்ப்லோ மசையள்சங்க் ...... ரமபாரக்

கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங்
     கொண்டலா னையைமணஞ் ...... செயும்வீரா

அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன்
     றஞ்சவா னவருறுஞ் ...... சிறைமீள

அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந்
     தங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டு
உண்டு மேகலை கழன்று அயலாக
... தேவர்கள் (உண்ணும்)
அமுதம் போன்றதும், கொவ்வைப் பழம் போலச் சிவந்ததுமான
வாயிதழ் ஊறலாகிய அமுதத்தை மேலும் மேலும் பருகி, இடையணி
கழன்று வேறுபட்டு விலகி விழ,

உந்தி வாவியில் விழுந்து இன்பமா(க) முழுகி அன்பு ஒன்று
இலாரொடு துவண்டு அணை மீதே
... கொப்பூழ் குளத்தில்
விழுந்து சுகமாக முழுகி, அன்பு என்பதே இல்லாத பொது மகளிரோடு
கலந்து சோர்வுற்று படுக்கையின் மேல்,

செம் பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த
வாள் விழி சிவந்து அமராட
... செம்பொன்னால் ஆகிய குடம்
போன்ற மார்பின் மீதுள்ள ஆபரணங்கள் இடம் பெயர்ந்து விழ, ஒளி
நிறைந்த கண்கள் செந்நிறம் கொண்டு கலக்கமுற,

திங்கள் வேர்வு உற அணைந்து இன்ப வாரியில் விழும்
சிந்தையேன் எ(ன்)னவிதம் கரை சேர்வேன்
... மதி போன்ற
முகம் வேர்வை கொள்ளும்படியாகத் தழுவி, இன்பக் கடலிலே
விழுந்து அமிழும் எண்ணம் உடையவனாகிய நான் என்ன விதமாக
நற்கதியை அடைவேன்?

கொம்பு நாலு உடைய வெண் கம்ப(ம்) மால் கிரி வரும்
கொண்டல்
... தந்தங்கள் நான்கினைக் கொண்டதும்* வெண்ணிறமான
தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான
ஐராவதத்தின் மீது வரும் மேகவாகனன்,

புலோமசையள் சங்க்ரம பார கும்ப(ம்) மால் வரை பொருந்து
இந்த்ர பூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும்
வீரா
... இந்திராணியுடைய மிக்கெழுந்தது போன்றதும், கனத்த குடம்
போன்றதும், மலை போன்றதுமான மார்பகங்களை அணையும் இந்திரன்
பெற்று வளர்த்த, மேகத்தை வாகனமாகக் கொண்டு செல்லும்,
தேவயானையைத் திருமணம் செய்துகொண்ட வீரனே,

அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச
வானவர் உறும் சிறை மீள
... கடலும், பெரிய கிரெளஞ்ச மலையும்,
மாமரமாய் நின்ற சூரனும் அன்று அஞ்சி நடுங்கவும், தேவர்கள்
அடைபட்டிருந்த சிறையினின்றும் வெளியேறவும்,

அங்க நான் மறை சொ(ல்)லும் பங்கயாசனம் இருந்து அம் கை
வேலு உற விடும் பெருமாளே.
... அங்கங்களைக் கொண்ட நாலு
வேதங்களாலும் போற்றப்படுகின்ற பத்மாசனத்தில் வீற்றிருந்து, அழகிய
கையில் ஏந்திய வேலாயுதத்தைப் பொருந்திச் செலுத்திய பெருமாளே.


* ஐராவதம் என்னும் யானைக்கு நான்கு தந்தங்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.236  pg 3.237  pg 3.238  pg 3.239 
 WIKI_urai Song number: 1105 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1102 - umbarAr amudhu (common)

umparA ramuthenun thoNdaivA yamuthamuN
     duNdumE kalaikazhan ...... RayalAka

unthivA viyilvizhun thinpamA muzhukiyan
     ponRilA roduthuvaN ...... daNaimeethE

semponAr kudamenum kongaiyA paraNamum
     sinthavAL vizhisivan ...... thamarAdath

thingaLvEr vuRavaNain thinpavA riyilvizhum
     sinthaiyE nenavithang ...... karaisErvEn

kompunA ludaiyaveN kampamAl kirivarum
     koNdalplO masaiyaLsang ...... ramapArak

kumpamAl varaiporun thinthrapU pathitharum
     koNdalA naiyaimaNam ...... seyumveerA

ampurA siyunedung kunRumA maramuman
     RanjavA navaruRum...... siRaimeeLa

anganAn maRaisolum pangayA sanamirun
     thangaivE luRavidum ...... perumALE.

......... Meaning .........

umparAr amuthu enum thoNdai vAy amutham uNdu uNdu mEkalai kazhanRu ayalAka: It tastes like the nectar imbibed by the celestials; this is the saliva that oozes from the (whores') red lips looking like the kovvai fruit, and I have been consuming that nectar again and again; their waist band gets separated and falls down;

unthi vAviyil vizhunthu inpamA(ka) muzhuki anpu onRu ilArodu thuvaNdu aNai meethE: drowning blissfully in the pond of their belly, I have been making love to these loveless whores, lying wearily on their bed;

sem pon Ar kudam enum kongai AparaNamum sintha vAL vizhi sivanthu amarAda: the ornaments adorning their bosom looking like reddish golden pot are dislodged, and their bright eyes redden due to excitement;

thingaL vErvu uRa aNainthu inpa vAriyil vizhum sinthaiyEn e(n)navitham karai sErvEn: I hug them so tightly that their moon-like face perspires; thinking only about drowning in a sea of bliss, how could I ever tread the righteous path?

kompu nAlu udaiya veN kampa(m) mAl kiri varum koNdal: He rides the clouds and mounts the mountain-like elephant AirAvatham, as His vehicle, that has four unique tusks* and legs like white pillars;

pulOmasaiyaL sangrama pAra kumpa(m) mAl varai porunthu inthra pUpathi tharum koNdal Anaiyai maNam seyum veerA: He is Indra who hugs PulOmasai (Indrani)'s protruding bosom looking like a heavy pot and a mountain; He sired and reared DEvayAnai, who mounts the cloud as her vehicle, and You married her, Oh valorous One!

ampurAsiyum nedum kunRum mA maramum anRu anja vAnavar uRum siRai meeLa: One day, terrifying the sea, the mount Krouncha and the demon SUran who was in the disguise of a mango tree, who were all shuddering, and for freeing the celestials from their prisons,

anga nAn maRai so(l)lum pangayAsanam irunthu am kai vElu uRa vidum perumALE.: You wielded the spear from Your hallowed hand, seated on the lotus praised by the four VEdAs that have many subdivisions, Oh Great One!


* AirAvatham is a unique elephant having four tusks.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1102 umbarAr amudhu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2017-2030

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact us if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
we are NOT responsible for any damage caused by downloading any item from this website.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[xhtml] 0504.2022[css]