![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி). (Please read my important note before using this website - Thank You). |
திருப்புகழ் 1103 வண்டுதான் மிக (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1103 vaNdudhAnmiga (common) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு mp3 | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தனா தனதனந் தந்தனா தனதனந் தந்தனா தனதனந் ...... தனதான ......... பாடல் ......... வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென் பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந் தந்தமா மதனலம் ...... விதமாக விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண் டொன்றுமா யுறவழிந் ...... தநுபோகம் விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந் துன்றன்மே லுருகஎன் ...... றருள்வாயே பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம் பைம்பொன்மா நகரிலிந் ...... திரன்வாழ்வு பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந் தன்பினோ ரகமமர்ந் ...... திடுவோனே அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந் தண்டுவாள் கொடுநடந் ...... திடுசூரன் அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண் டங்கைவே லுறவிடும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வண்டுதான் மிக இடம் கொண்ட கார் அளகமென் பந்திமா மலர்சொரிந்து உடைசோர ... வண்டுகள் நிரம்பவும் மொய்க்கும் கரிய கூந்தலில் வரிசையாக வைக்கப் பெற்ற நல்ல மலர்கள் சிதறுண்டு விழ, அணிந்துள்ள ஆடை நெகிழ, வம்புசேர் கனிபொருந்தி இன்பவாய் அமுதருந்து அந்த மா மதன் நலம் விதமாக விண்டு மேனிகள் துவண்டு ... புதுமை வாய்ந்ததும், கனியின் சுவை கொண்டதும் ஆகிய வாயூறலைப் பருகுகின்ற அந்த சிறந்த மன்மத லீலையின் இன்பம் பலவிதத்திலும் வெளிவர, இருவர் உடல்களும் சோர்வடைந்து, அன்றில்போல் உளம் இரண்டு ஒன்றுமாய் உறவு அழிந்து அநுபோகம் விஞ்சவே தரும் இளங் கொங்கையார் வினைகடந்து உன்றன்மேல் உருக என்று அருள்வாயே ... அன்றில் பறவை போல இருவர் உள்ளமும் நன்றாக ஒன்றுபட்டு, காம நுகர்ச்சியை நிரம்பத் தருகின்ற இளமை வாய்ந்த மார்பகங்களை உடைய மாதர்களுடன் ஊடாடுவதை விட்டு, உன்னை நினைந்து உருக, எனக்கு என்று அருள் புரிவாய்? பண்டு பாரினை அளந்து உண்டமால் மருக ... முன்பு பூமியை (திரிவிக்கிரமனாக) அளந்தவரும், பூமியை (கண்ணனாக) உண்டவருமான திருமாலின் மருகனே, செம் பைம் பொன்மா நகரில் இந்திரன்வாழ்வு பண்பெலா(ம்) மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பினோர் அகம் அமர்ந்திடுவோனே ... செவ்விய பசுமையான சிறந்த பொன்னுலகத்தில் இந்திரனின் செல்வமும், அழகுச் சிறப்புக்கள் எல்லாமும் நிறைந்திருக்கும் மேலெழுந்து விளங்கும் தேவயானையை மணந்து, அன்புடனே ஒன்றுபட்ட மனத்தினனாக அமர்ந்து வீற்றிருப்போனே, அண்டர்தாம் அதிபயங் கொண்டு வாடிட நெடுந் தண்டுவாள் கொடுநடந்திடு சூரன் அங்கமானது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு அங்கை வேல் உற விடும் பெருமாளே. ... தேவர்கள் மிக்க பயம் கொண்டு வாட்டம் அடையும்படி பெரிய தண்டாயுதம், வாள் இவைகளுடன் வந்த சூரனுடைய உடலைப் பிளந்து, எங்கும் கூச்சல் எழும்படி கோபித்து, அழகிய திருக்கையில் இருந்த வேல் சென்று தாக்கும்படியாகச் செலுத்தின பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.238 pg 3.239 pg 3.240 pg 3.241 WIKI_urai Song number: 1106 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
![]() | ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | ![]() to singer's page |
![]() | சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil | ![]() |
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
| ![]() |
(Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
Song 1103 - vaNdudhAn miga (common) vaNduthAn mikavidang koNdakA raLakamen panthimA malarsorin ...... thudaisOra vampusEr kaniporun thinpavA yamutharun thanthamA mathanalam ...... vithamAka viNdumE nikaLthuvaN danRilpO luLamiraN donRumA yuRavazhin ...... thanupOkam vinjavE tharumiLang kongaiyAr vinaikadan thunRanmE lurukaen ...... RaruLvAyE paNdupA rinaiyaLan thuNdamAl marukasem paimponmA nakarilin ...... thiranvAzhvu paNpelA mikuthipong kinpayA naiyaimaNan thanpinO rakamamarn ...... thiduvOnE aNdarthA mathipayang koNduvA didanedun thaNduvAL kodunadan ...... thiducUran angamA nathupiLan thengumvee ridavekuN dangaivE luRavidum ...... perumALE. ......... Meaning ......... vaNduthAn mika idam koNda kAr aLakamen panthimA malarsorinthu udaisOra: The beautiful flowers, neatly bedecked on their dark hair, swarmed by a horde of beetles, are scattered spilling all over; the garments they are wearing have come loose; vampusEr kaniporunthi inpavAy amutharunthu antha mA mathan nalam vithamAka viNdu mEnikaL thuvaNdu: the bliss from the famous erotic art of imbibing their saliva, filled with novelty and tasting like the fruit, is derived in many a way; both of our bodies droop; anRilpOl uLam iraNdu onRumAy uRavu azhinthu anupOkam vinjavE tharum iLang kongaiyAr vinaikadanthu unRanmEl uruka enRu aruLvAyE: like a pair of anRil (krouncha) birds, both our minds unite perfectly; I have been abundantly enjoying passionate experience through the youthful bosom of these women; making me give up that kind of interplay with them, when will You bless me graciously so that I could melt in contemplative thoughts of You? paNdu pArinai aLanthu uNdamAl maruka: Once He measured the dimensions of the earth (coming as Thirivikraman) and gulped the earth (coming as KrishNan); and You are the nephew of that Lord VishNu! sem paim ponmA nakaril inthiranvAzhvu paNpelA(m) mikuthi pongu inpa yAnaiyai maNanthu anpinOr akam amarnthiduvOnE: She is endowed with all the wealth of Lord Indra who rules the great, fertile and famous celestial land; She is also the flourishing damsel gifted with all beautiful niceties; marrying that DEvayAnai, You are also seated with her, with Your minds fused together in a bond of love, Oh Lord! aNdarthAm athipayang koNdu vAdida nedun thaNduvAL kodunadanthidu cUran angamAnathu piLanthu engum veerida vekuNdu angai vEl uRa vidum perumALE.: When the demon SUran came aggressively with weapons like a huge mace and a sword to intimidate the terrified celestials, You angrily wielded the powerful spear held in Your hallowed hand to attack and split his body amidst a din of screams everywhere, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை in PDF venue list alphabetical numerical | ![]() |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |