திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1072 இருந்த வீடும் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1072 irundhaveedum (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான ......... பாடல் ......... இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும் இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ...... வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் ...... மணவாளா திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ...... புலவோனே சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரும் உறுகேளும் ... நான் வசிக்கும் வீடும், நான் கொஞ்சிப் பழகும் குழந்தைகளும், என்னைச் சுற்றி அமைந்த உறவினரும், இசைந்த வூரும் பெண்டிரும் இளமையும் ... என் மனதிற்கு உகந்த ஊரும், என் மனைவி முதலிய பெண்களும், எனது இளமையும், வளமேவும் விரிந்த நாடுங் குன்றமு நிலையென மகிழாதே ... செல்வம் நிறைந்து விரிந்து பரந்த எனது நாடும், இந்நாட்டின் மலைகளும் நிலைத்திருக்கும் என்றெண்ணி நான் மகிழாமல் விளங்கு தீபங் கொண்டுனை வழிபட அருள்வாயே ... ஒளிதரும் விளக்குகளை ஏற்றி உன்னை வழிபட எனக்கு நீ அருள்வாயாக. குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே ... குருந்த* மரத்தில் ஏறியவனும் மேகவண்ணனுமான திருமாலின் மருமகனே, குரங்குலாவுங் குன்றுறை குறமகள் மணவாளா ... குரங்குகள் உலாவும் குன்றாகிய வள்ளிமலையில் வாசம் செய்யும் குறமகள் வள்ளியின் மணவாளனே, திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே ... திருத்தமான முறையில் வேதத்தை இன்பமான தமிழ்மொழியில் தேவாரமாக உலகோர் அறியத் தந்தருளிய (சம்பந்தப்) புலவனே, சிவந்த காலுந் தண்டையும் அழகிய பெருமாளே. ... செம்மை வாய்ந்த திருவடியும் அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமாளே. |
* கோபியரின் சேலைகளைக் கவர்ந்து ஒளிக்க, கண்ணன் யமுனைக் கரையில் குருந்த மரத்தின் மீது ஏறினான். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.182 pg 3.183 WIKI_urai Song number: 1075 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1072 - irundha veedum (common) iruntha veedum konjiya ciRuvaRu ...... muRukELum icaintha vUrum peNdiru miLamaiyum ...... vaLamEvum virintha nAdum kundRamu nilaiyena ...... makizhAthE viLangu theepam koNdunai vazhipada ...... aruLvAyE kurunthi lERum koNdalin vadivinan ...... marukOnE kurangu lAvum kunRuRai kuRamakaL ...... maNavALa tiruntha vEtham thaNdamizh theritharu ...... pulavOnE civantha kalum thaNdaiyu mazhkiya ...... perumaLE. ......... Meaning ......... iruntha veedum konjiya ciRuvaRu muRukELum: The house where I lived, the children whom I cuddled, the relatives who surrounded me, icaintha vUrum peNdiru miLamaiyum: my congenial hometown, the women folk headed by my wife, my youthful vigour vaLamEvum virintha nAdum kundRamu: the vast and prosperous country of mine and the mountains nilaiyena makizhAthE: were all permanent - ridding me of such wishful thinking, viLangu theepam koNdunai vazhipada aruLvAyE: Please bless me to worship You by lighting bright lamps. kurunthi lERum koNdalin vadivinan marukOnE: You are the nephew of Vishnu, who has the complexion of dark cloud, and who as Krishna climbed the Kurunthai* trees. kurangu lAvum kunRuRai kuRamakaL maNavALa: You are the consort of VaLLi residing at VaLLimalai, famous for plentiful monkeys leaping about! tiruntha vEtham thaNdamizh theritharu pulavOnE: You came as ThirugnAna Sambandhar who composed the scriptures in delightful Tamil for the benefit of the world! civantha kalum thaNdsiyu mazhkiya perumaLE.: You have reddish feet with lovely anklets, Oh Great One! |
* Krishna stole the sarees of Gopis bathing in River Yamuna and hid them in the branches of kurunthai trees on the banks of the river. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |