பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 175 1075. நான் வாசம் செய்யும் விடும், நான் கொஞ்சிப் பழகும் குழந்தைகளும், பொருந்திய சுற்றத்தாரும் என் மனதுக்கு உகந்த ஊரும், மனவிை முதலிய பெண்டுகளும் எனது இளமையும், செல்வம் நிறைந்த பரந்துள்ள எனது நாடும், (நாட்டில் உள்ள) மலைகளும் என்றும் (எனக்கு நிலைத்திருக்கும் என எண்ணி நான் மகிழாமல் ஒளி தரும் தீபங்களை ஏற்றி உன்னை வழிபட (எனக்கு) அருள் புரிவாயாக குருந்த மரத்தில் ஏறின மேக வண்ணனாம் திருமாலின் மருகனே! குரங்குகள் உலாவும் குன்றமாகிய (வள்ளி மலையில்) வாசம் செய்த குறப் பெண் வள்ளியின் மணவாளனே! மொழியில் (திரு நெறித் தமிழ் எனும் தேவாரமாக) (தெரிதெரு) உலகோர் தெரியத் தந்த (சம்பந்தப் பெருமானாம்) புலவனே! செம்மை வாய்ந்த திருவடியும் அதில் தண்டையும் அழகு பொலியும் பெருமாளே! ( வழி பட அருள்வாயே) " கொல்லையஞ் சாரற் குருந் தொசித்த மாயவன்" - சிலப்பதி. ஆய்ச். குரவை "குருந்திடைக் கூறை பணியாய்" (ஆண்டாள்) திருமொழி. 3-2 'கொங் கலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன்" -(திரு மங்கையார்) 1-8-1 விரைவினில் வந்தாய்ச்சியர் பொற் கலைகள் வாரி, வெறிய மலர்க் குருந்தேறி நகைத்து நின்றான்" அம்பர மெல்லாம் வாரி, அழகிய குருந்தி னேறும் உம்பர்கள் பெருமான்" - (வரத ராசர் அருளிய பாகவதம் - கூறைகொள் படலம்) இவ் வரலாற்றின் விரிவை - பூ மு. ராகவையங்கார் அவர்கள் எழுதிய கட்டுரைத் திரட்டு - ஆராய்ச்சித் தொகுதியிற் காண்க: பக்கம் 61-65 x " குரங்குலாவும் குன்று" வள்ளி மலை - "மந்தி குதிகொள் அந்தண் வரை"- என்றார் 1070 பாடலில். o தமிழ் வேதம் - சம்பந்தர் தேவாரம் - ரிக் வேதம் "ருக்கு ஐயம் போக உரைத்தோன்" - கந். அந்தாதி 96 " சுருதித் தமிழ்க் கவி' பாடல் 280 பக்கம் 196