(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 1068 ஒழு கூனிரத்தம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1068 ozhukUniraththam  (common)
Thiruppugazh - 1068 ozhukUniraththam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனத்த தனனா தனத்த
     தனனா தனத்த ...... தனதான

......... பாடல் .........

ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி
     உயர்கால் கரத்தி ...... னுருவாகி

ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து
     உழல்மாய மிக்கு ...... வருகாயம்

பழசா யிரைப்பொ டிளையா விருத்த
     பரிதாப முற்று ...... மடியாமுன்

பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்
     பகர்வாழ் வெனக்கு ...... மருள்வாயே

எழுவா னகத்தி லிருநாலு திக்கில்
     இமையோர் தமக்கு ...... மரசாகி

எதிரேறு மத்த மதவார ணத்தில்
     இனிதேறு கொற்ற ...... முடன்வாழுஞ்

செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து
     செழுதீ விளைத்து ...... மதிள்கோலித்

திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
     சிறைமீள விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஒழுகு ஊன் இரத்தமொடு தோலுடுத்தி ... வழியும் மாமிசமும்,
ரத்தமும் சேர்ந்து, தோலால் மூடப்பட்டு,

உயர்கால் கரத்தின் உருவாகி ... உயர்ந்த கால்கள் கைகள்
இவற்றுடன் ஓர் உருவமாகி,

ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து ... ஒரு தாயினுடைய
வயிற்றிலே தோற்றம் கொண்டு பிறந்து,

உழல்மாய மிக்கு வருகாயம் ... அலைச்சலைத் தரும் மாயம் மிகுந்து
வருகின்ற இந்த உடலானது

பழசாய் இரைப்பொடு இளையா ... பழமையடைந்து மூப்புற்று,
மூச்சு வாங்குவதால் சோர்வு அடைந்து

விருத்த பரிதாப முற்று மடியாமுன் ... கிழவன் என்ற பரிதாப
நிலையை அடைந்து, இறந்து போவதற்கு முன்பாக,

பரிவால் உளத்தில் முருகா எனச்சொல் ... அன்பு கலந்த
உள்ளத்தோடு முருகா என்ற உன் திருப் பெயரைக் குறிக்கும் சொல்லை

பகர்வாழ்வெனக்கும் அருள்வாயே ... நான் சொல்லும்படியான
வாழ்வை எனக்கு நீ அருள்வாயாக.

எழுவானகத்தி லிருநாலு திக்கில் ... விளங்கும் விண்ணுலகிலும்,
எட்டுத் திசையிலும் உள்ள

இமையோர் தமக்கும் அரசாகி ... தேவர்களுக்கு எல்லாம் அரசனாகி,

எதிரேறு மத்த மதவாரணத்தில் ... அவர்கள் முன்னிலையில்
விளங்கும் செருக்குள்ள மதயானையாம் ஐராவதத்தின் மீது

இனிதேறு கொற்றமுடன்வாழும் ... இன்பகரமாக ஏறிவரும்
வெற்றிநிலையுடன் வாழ்ந்த

செழுமா மணிப்பொன் நகர்பாழ் படுத்து ... செழிப்பான அழகிய
பொன்னுலகாம் அமராவதியைப் பாழ்படுத்தி,

செழுதீ விளைத்து மதிள்கோலி ... பெரும் தீயிட்டுச் சிதைத்து,
அவ்வூரை மதில்போல வளைத்து,

திடமோடு அரக்கர் கொடுபோய் அடைத்த ... வலிமையுடன்
அரக்கர்கள் கொண்டுபோய்ச் சிறையிலிட்ட

சிறைமீள விட்ட பெருமாளே. ... தேவர்களின் சிறையை நீக்கி,
அவர்களை விடுவித்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.174  pg 3.175 
 WIKI_urai Song number: 1071 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

 ZZnameE ZZnameT 

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 1068 - ozhu kUniraththam (common)

ozhukUn iraththa moduthOl uduththi
     uyar kAl karaththin ...... uruvAgi

oru thAy vayitrin idaiyE udhiththu
     uzhal mAya mikku ...... varukAyam

pazhasAy iraippod iLaiyA viruththa
     parithApam utru ...... madiyAmun

parivAl uLaththil murugA enachchol
     pagar vAzhvenakkum ...... aruLvAyE

ezhu vAn agaththil irunAlu dhikkil
     imaiyOr thamakkum ...... arasAgi

edhir ERu maththa madha vAraNaththil
     inidhERu kotram ...... udanvAzhum

sezhumA maNippon nagarpAzh paduththu
     sezhu thee viLaiththu ...... madhiLkOlith

dhidamOd arakkar kodupOy adaiththa
     siRaimeeLa vitta ...... perumALE.

......... Meaning .........

ozhukUn iraththa moduthOl uduththi: Oozing flesh and blood were wrapped under the skin;

uyar kAl karaththin uruvAgi: well-defined arms and legs began to take shape;

oru thAy vayitrin idaiyE udhiththu: and I was born from the womb of a mother.

uzhal mAya mikku varukAyam: This body, being subjected to so much of churning in delusion,

pazhasAy iraippod iLaiyA viruththa: gets battered and exhausted due to gasping upon reaching old age.

parithApam utru madiyAmun: Before it dies miserably,

parivAl uLaththil murugA enachchol pagar vAzhvenakkum aruLvAyE: kindly grant me the kind of life in which to utter Your name as "MurugA!" with earnest devotion from my heart!

ezhu vAn agaththil irunAlu dhikkil: In the seven celestial lands and in all the eight directions,

imaiyOr thamakkum arasAgi: He was the Lord of all the DEvAs;

edhir ERu maththa madha vAraNaththil inidhERu kotram udanvAzhum: His triumphant reign witnessed His majestic mounting of the wild elephant, AirAvadham, in the presence of the celestials;

sezhumA maNippon nagarpAzh paduththu: that IndrA's prosperous and beautiful capital city AmarAvathi was devastated

sezhu thee viLaiththu madhiLkOlith dhidamOd arakkar: and set fire to, by powerful demons who twisted all the fortresses

kodupOy adaiththa: and imprisoned the celestials, locking them up.

siRaimeeLa vitta perumALE.: You destroyed those prisons and liberated the DEvAs, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1068 ozhu kUniraththam - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top