பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 167 குரங்குகள் குதித்து விளையாடும் அழகிய குளிர்ந்த மலையில் (வள்ளிமலையில் இருந்த) மங்கை - வள்ளி சேர்ந்த மணவாளனே! நெருங்கி வந்த அசுரர்களுடைய தண்டம்) படை உடைந்து சிதறவும். தேவர்கள் போற்றவும் (அசுரர்களை) எதிர்த்துப் பொருதவனே! பிறைச் சந்திரன் போன்ற நெற்றியையும், (அந்தம் முகமும்) அழகிய முகத்தையும் கொண்டு என்றும் உனக்கு இனியராயுள்ள (தேவ சேனை வள்ளி என்னும்) இரு மாதர்களுக்கும் இன்பம் பெருகி உண்டாக, (அவர்களை) அன்புடனே அணையும் பெருமாளே! என்றும் இளையோனாய் விளங்கும் பெருமாளே! (கருணை புரிவாயே) 1071. பரந்துள்ள (ஊன்) மாமிசம், ரத்தம், இவைகளுடன் தோல் கொண்டு மேயப்பட்டு, உயரமாயுள்ள கால்கள், கைகள் இவை. களுடன் ஒரு உருவமாகி ஒரு தாயினுடைய வயிற்றில் தோற்றம் கொண்டு பிறந்து, அலைச்சலைத் தரும் மாய உணர்ச்சி மிகுந்து வருகின்ற (காயம்) இந்த உடல் பழமை அடைந்து (மூப்பு உற்று) இரைப் பொடு - #சு வாங்குதலால் (ಧಿ ఢీ ಖ್ಖಟ್ಲಿ' அடைந்து ( ് பரிதாபம்) கிழவ்ன் என்னும் பரிதாப நிலையை அடைந்து இறந்து போவதற்கு முன்பாக - அன்பு கலந்த உள்ளத்துடனே "முருகா" என்ற (உனது) திருப் பெயரைக் குறிக்கும் சொல்லை (நான்) சொல்லும்படியான வாழ்வை என்னையும் பொருட்படுத்தி (எனக்கு) அருள்வாயாக; விளங்குகின்ற (வான்.அகத்தில் விண்ணுலகிலும், (இரு நாலு திக்கில்) எட்டுத் திசையிலும் உள்ள தேவர்களுக் கெல்லாம் அரசனாகி - (அத் தேவர்களுக்கு எதிரே - அவர்கள் முன்னிலையில் (ஏறும்) விளங்கும் (மத்த வர்ண்த்தில்) செருக்குள்ளதும், மதம் பொழிவது. மான (வாரணத்தில்) வெள்ளை யானையாம் ஐராவதத்தில் இன்பகரமாக j) வெற்றி நிலையுடன் வாழ்ந்த செ வாய்ந்த அழகிய பொன்னுலகைப் பாழ்படுத்திப், பெருந் தீயிட்டுப் பாழ்படுத்தி, அவ்வூரை 蠶 போல வளைத்து, திடத்துடனே (வலிமையுடன் அரக்கர்கள் கொண்டுபோய்ச் (சிறையிட்ட தேவர்களின்) சிறையை நீக்கி அவர்களை வெளிவிட்ட பெருமாளே! (முருகா எனச் சொல் பகர் வாழ்வு அருள்வாயே)