திருப்புகழ் 1067 மைந்தர் இனிய  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1067 maindhariniya  (common)
Thiruppugazh - 1067 maindhariniya - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தனன தந்த தனன
     தந்த தனன ...... தனதான

......... பாடல் .........

மைந்த ரினிய தந்தை மனைவி
     மண்டி யலறி ...... மதிமாய

வஞ்ச விழிகள் விஞ்சு மறலி
     வன்கை யதனி ...... லுறுபாசந்

தந்து வளைய புந்தி யறிவு
     தங்கை குலைய ...... உயிர்போமுன்

தம்ப முனது செம்பொ னடிகள்
     தந்து கருணை ...... புரிவாயே

மந்தி குதிகொ ளந்தண் வரையில்
     மங்கை மருவு ...... மணவாளா

மண்டு மசுரர் தண்ட முடைய
     அண்டர் பரவ ...... மலைவோனே

இந்து நுதலு மந்த முகமு
     மென்று மினிய ...... மடவார்தம்

இன்பம் விளைய அன்பி னணையு
     மென்று மிளைய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய ...
பிள்ளைகள், இனிமை தரும் தந்தை, மனைவி (இவர்கள் யாவரும்)
நெருங்கிக் கூச்சலிட்டு அழுது, அறிவு அழியும்படி,

வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன் கை அதனில் உறு பாசம் ...
வஞ்சனை எண்ணத்தைக் காட்டும் கண்கள் முன் தோன்றி விளங்கும்
யமன் தனது வலிய கையில் உள்ள பாசக் கயிற்றை

தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன் ...
வீசி எறிந்து என் உயிரை வளைக்க, என் மனமும், அறிவும் ஒரு வழியில்
நிலைபெற்றுத் தங்காமல் அலைச்சல் கொள்ள, என் உயிர் போவதற்கு
முன்பு

தம்ப(ம்) உனது செம் பொன் அடிகள் தந்து கருணை
புரிவாயே
... பற்றுக் கோடாகவுள்ள உனது அழகிய திருவடிகளை
எனக்குத் தந்து கருணை புரிவாயாக.

மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும்
மணவாளா
... குரங்குகள் குதித்து விளையாடும் அழகிய குளிர்ந்த
(வள்ளி) மலையில் (இருந்த) வள்ளி நாயகியை அணைந்த மணவாளனே,

மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ
மலைவோனே
... நெருங்கும் அசுரர்களின் படை உடைந்து சிதறவும்,
தேவர்கள் போற்றவும், எதிர்த்துப் போரிட்டவனே,

இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார் தம் ...
பிறைச் சந்திரன் போன்ற நெற்றியையும், அழகிய முகமும் கொண்டவராய்,
(உனக்கு) என்றும் இனியராயுள்ள தேவயானை, வள்ளி ஆகிய இரண்டு
மாதர்களுக்கும்,

இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய
பெருமாளே.
... இன்பம் பெருகி உண்டாக அன்புடன் அணையும்,
என்றும் இளையோனாக விளங்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.172  pg 3.173  pg 3.174  pg 3.175 
 WIKI_urai Song number: 1070 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1067 - maindhar iniya (common)

maintha riniya thanthai manaivi
     maNdi yalaRi ...... mathimAya

vanja vizhikaL vinju maRali
     vankai yathani ...... luRupAsam

thanthu vaLaiya punthi yaRivu
     thangai kulaiya ...... uyirpOmun

thampa munathu sempo nadikaL
     thanthu karuNai ...... purivAyE

manthi kuthiko LanthaN varaiyil
     mangai maruvu ...... maNavALA

maNdu masurar thaNda mudaiya
     aNdar parava ...... malaivOnE

inthu nuthalu mantha mukamu
     menRu miniya ...... madavArtham

inpam viLaiya anpi naNaiyu
     menRu miLaiya ...... perumALE.

......... Meaning .........

mainthar iniya thanthai manaivi maNdi alaRi mathi mAya: My sons, dear father, my wife and others surround me closely cry their hearts out and lose their mind;

vanja vizhikaL vinjum maRali van kai athanil uRu pAsam: while the God of Death (Yaman) displays his prominent and treacherous eyes, with the rope of bondage in his hand;

thanthu vaLaiya punthi aRivu thangai kulaiya uyir pO mun: he throws the rope to take my life; my mind and intellect, being unable to steady themselves, are struggling; just before my life departs from the body,

thampa(m) unathu sem pon adikaL thanthu karuNai purivAyE: kindly show compassion and grant me Your hallowed feet which are my only refuge!

manthi kuthi koL am thaN varaiyil mangai maruvum maNavALA: In the beautiful and cool mountain VaLLimalai, monkeys jump about playfully; You hugged Your consort VaLLi living in that mountain!

maNdum asurar thaNdam udaiya aNdar parava malaivOnE: The armies of the confronting demons were shattered while the celestials rejoiced and worshipped You; such was Your powerful fighting, Oh Lord!

inthu nuthalum antha mukamum enRum iniya madavAr tham: Both Your consorts, VaLLi and DEvayAnai, who have forehead like a crescent moon and beautiful face,

inpam viLaiya anpin aNaiyum enRum iLaiya perumALE.: are exhilarated when You embrace them lovingly. You are the ever youthful Lord, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1067 maindhar iniya - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]