திருப்புகழ் 1056 மகளு மனைவி தாய்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1056 magaLumanaivithAi  (common)
Thiruppugazh - 1056 magaLumanaivithAi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
     தனன தனன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில்
     மறுகி புறமு மார்த்திட ...... வுடலூடே

மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ
     ருடனு மியமன் மாட்டிட ...... அணுகாமுன்

உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு
     முளது மிலது மாச்சென ...... வுறைவோரும்

உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு
     உனது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய்

புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக
     ழுடைய திருத ராட்டிர ...... புதல்வோர்தம்

புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர்
     புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே

மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு
     வெனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன்

விரைசெய் நெடிய தோட்கன அடலு முருவ வேற்படை
     விசைய முறவும் வீக்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மகளு(ம்) மனைவி தாய்க் குலம் அணையும் அனைவர்
வாக்கினில் மறுகி புறமும் ஆர்த்திட
... மகள், மனைவி, தாய்,
சுற்றத்தார், வந்து கூடும் எல்லாருடைய வாக்கிலும் கலக்கம் உண்டாகி,
வெளி ஊராரும் ஐயோ என்று அலறி நிறைந்து கூட,

உடலூடே மருவும் உயிரை நோக்கமும் எரியை உமிழ
ஆர்ப்பவர் உடனும் இயமன் மாட்டிட அணுகா முன்
... உடலில்
பொருந்தியுள்ள உயிரை எடுக்கவென்றே, தனது கண்களும் தீயைக் கக்க,
பேரொலி செய்து வரும் தூதர்களுடன், யமன் என்னைச் சிக்க
வைப்பதற்காக நெருங்குவதற்கு முன்பாக,

உகமும் முடிவுமாச் செலும் உதய மதியின் ஓட்டமும் உளதும்
இலதும் ஆச்சு என உறைவோரும் உருகும் உரிமை காட்டிய
...
(இப்) பூமியில் வாழ்வும் முடிவுறும்படி போய்க் கொண்டிருந்த, தோன்றி
வரும் இடை கலையின் (இடது) நாசியால் விடும் சுவாசத்தின் ஓட்டமும்
இதோ இருக்கின்றது, இல்லை இதோ முடிவு வந்து விட்டது என்னும்படி
சொல்லிக் கொண்டு அருகில் இருப்பவர்களும் தத்தம் உறவு முறைகளைக்
காட்டுகிற போது,

முருகன் எனவு(ம்) நாக் கொ(ண்)டு உனது கழல்கள்
போற்றிட அருள் தாராய்
... (அச்சமயத்தில்) நான் முருகா என்று
என் நாவைக் கொண்டு உனது திருவடிகளைப் போற்றி செய்ய அருள்
புரிவாயாக.

புகல அரிய போர்ச் சிலை விரகு அ(வ்) விசயனால் புகழ்
உடைய திருதராட்டிர(ன்) புதல்வோர் தம் புரவி கரிகள்
தேர்ப் படை மடிய
... சொல்லுவதற்கு முடியாத சிறப்புடைய (காண்டீபம்
என்ற) போர் வில்லை உடையவனும், சாமர்த்தியம் உள்ளவனுமாகிய
அருச்சுனனைக் கொண்டு, புகழ் பெற்றிருந்த திருதராட்டிரனின் மக்களின்
குதிரை, யானை, தேர்கள், காலாட் படைகள் யாவும் இறந்து படச் செய்து,

அரசை மாய்த்து உயர் புவியின் விதன(ம்) மாற்றினர்
மருகோனே
... துரியோதனனின் அரசைத் தொலைத்து, சிறந்த இந்தப்
பூமியின் துன்பத்தை நீக்கியவரான திருமாலின் மருகனே,

மிகவு(ம்) மலையு(ம்) மாக் கடல் முழுது(ம்) மடிய வேற்று உரு
எனவு(ம்) மருவி வேல் கொ(ண்)டு பொரு சூரன்
... மிகப் பெரிய
மலை வடிவத்தையும், பெருங் கடல் உருவத்தையும் எடுத்து (எதிர்த்தோர்)
யாவரும் இறக்க வெவ்வேறு உருவங்கள் என்னும்படியாக (இந்த
உருவங்களை) ஏற்றுப் பொருந்தி வேற் படை ஏந்திச் சண்டை செய்த
சூரனின்

விரை செய் நெடிய தோள் கன அடலும் உருவ வேல் படை
விசையம் உறவும் வீக்கிய பெருமாளே.
... நறு மணமுள்ள பெரிய
தோள்களின் கனத்த வலிமையும் கழிந்து நீங்க, வேலாயுதத்தை வெற்றி
பெற வேகமாகச் செலுத்திய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.152  pg 3.153  pg 3.154  pg 3.155 
 WIKI_urai Song number: 1059 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1056 - magaLu manaivi thAi (common)

makaLu manaivi thAykkula maNaiyu manaivar vAkkinil
     maRuki puRamu mArththida ...... vudalUdE

maruvu muyirai nOkkamu meriyai yumizha Arppava
     rudanu miyaman mAttida ...... aNukAmun

ukamu mudivu mAcchelu muthaya mathiyi nOttamu
     muLathu milathu mAcchena ...... vuRaivOrum

uruku murimai kAttiya muruka nenavu nAkkodu
     unathu kazhalkaL pOtRida ...... aruLthArAy

pukala variya pOrcchilai viraka visaiya nARpuka
     zhudaiya thirutha rAttira ...... puthalvOrtham

puravi karikaL thErppadai madiya arasai mAyththuyar
     puviyin vithana mAtRinar ...... marukOnE

mikavu malaiyu mAkkadal muzhuthu madiya vEtRuru
     venavu maruvi vERkodu ...... porucUran

viraisey nediya thOtkana adalu muruva vERpadai
     visaiya muRavum veekkiya ...... perumALE.

......... Meaning .........

makaLu(m) manaivi thAyk kulam aNaiyum anaivar vAkkinil maRuki puRamum Arththida: The speech of the daughter, the wife, the mother, the relatives and all those gathered there becoming mournful, even the grief-stricken people from out-of-town who have assembled in large numbers beginning to scream,

udalUdE maruvum uyirai nOkkamum eriyai umizha Arppavar udanum iyaman mAttida aNukA mun: Yaman (God of Death), with eyes spewing fire, and accompanied by his boisterous messengers, approaching, for the sole purpose of taking the life from my body, and before he ensnares me,

ukamum mudivumAc chelum uthaya mathiyin Ottamum uLathum ilathum Acchu ena uRaivOrum urukum urimai kAttiya: while life on this earth is nearing the end, the breath exhaled from the left nostril being assessed by the relatives standing nearby, establishing their relationship and declaring "there is mobility of the breath" and some disputing, saying, "no; the breath is gone; it has ended",

murukan enavu(m) nAk ko(N)du unathu kazhalkaL pOtRida aruL thArAy: (at that moment,) kindly bless me so that I could say "Oh MurugA" with my tongue praising Your hallowed feet!

pukala ariya pOrc chilai viraku a(v) visayanAl pukazh udaiya thirutharAttira(n) puthalvOr tham puravi karikaL thErp padai madiya: Arjunan, an extremely capable warrior, possessed a matchless and great bow (called GANdeepam); He made that Arjunan destroy the entire armies consisting of horses, elephants, chariots and soldiers belonging to the sons of the famous king DhirutharAshtiran;

arasai mAyththu uyar puviyin vithana(m) mAtRinar marukOnE: He terminated the rule of the kingdom (by DhuriyOthanan) and removed the misery of this great world; and You are the nephew of that Lord VishNu!

mikavu(m) malaiyu(m) mAk kadal muzhuthu(m) madiya vEtRu uru enavu(m) maruvi vEl ko(N)du poru cUran: He came in the form of a huge mountain and the vast sea; to kill all those who opposed him, he took several concealing forms and fought the war with a spear in his hand; he was the demon SUran;

virai sey nediya thOL kana adalum uruva vEl padai visaiyam uRavum veekkiya perumALE.: destroying the strength of his fragrant and huge shoulders, You swiftly wielded Your spear and claimed victory, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1056 magaLu manaivi thAi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]