பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 முருகவேள் திருமுறை (7- திருமுறை விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ மிடையு மலகில் தேர்ப்படை யொடுசூழும். விகட மகுட பார்த்திய ரணைவ ருடனு நூற்றுவர் விசைய னொருவ னாற்பட *வொருதுாது: திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி சிறுவ தறுகணன் வேட்டுவர் கொடிகோவே. திமிர வுததி கூப்பிட அவுனர் மடிய வேற்கொடு சிகரி தகர விக்கிய பெருமாளே (64) 1059. கழல்களைப் போற்ற தனன தனண தாத்தன, தனண தண்ண தாத்தன தனன தனண தாத்தன தனதான மகளு மனைவி தாய்க்குல மனையு மனைவர் வாக்கினில் மறுகி புறமு மார்த்திட வுடலுTடே. மருவு முயிரை நோக்கமு. மெரியை யுமிழ ஆர்ப்பவ ருடனு மியமன் மாட்டிட அனுகாமுன், உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு. முளது மிலது மாச்சென வுறைவோரும். உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு உனது கழல்கள் போற்றிட அருள்தாராய்,

  • பாண்டவர்க்காகத் திருமால் துாது சென்றது. எங்களுக்காக நீ துரியோதனனிடம் துதுசென்று நாங்கள் வாழ நாடு ஒன்று கேட்பாயாக அதைக் கொடுக்க அவன் மறுத்தால், ஐந்து ஊர்களைத் தரச் சொல்: அதையும் அவன் மறுத்தால் ஐந்து வீடுகள் கேள்; அதையும் அவன் மறுத்தால் போர்தான் முடிவு என்று கூறுவாயாக எனச் சொல்லி அனுப்பினார் தருமராஜர் கிருஷ்ண பகவானை:

" நாடொன்று நல்கானாகில், ஐந்துார் வேண்டு; அவை இல் எனில் ஐந்து இலம் வேண்டு; அவை மறுத்தால் அடுபோர் வேண்டு.... செங்கண் மாலே". அங்கணமே பகவான் துதுசென்று. துரியோதனன் எதையும் கொடுக்க மறுத்துப் போர் புரியத் துணிந்ததைத் தருமனிடம் வந்து சொன்னார்: " துர்துபோய் அரவத் துவசனோடு உறுதி சொன்னதும் மறுத்தவன் சினந்து, மோது போர்புரியத் துணிந்ததும்.