திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1053 அதல சேடனாராட (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1053 adhalasEdanArAda (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான ......... பாடல் ......... அதல சேட னாராட அகில மேரு மீதாட அபின காளி தானாட ...... அவளோடன் றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட அருகு பூத வேதாள ...... மவையாட மதுர வாணி தானாட மலரில் வேத னாராட மருவு வானு ளோராட ...... மதியாட வனச மாமி யாராட நெடிய மாம னாராட மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி ...... அலைமோதும் உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அதல சேடனார் ... (பூமிக்கு கீழேயுள்ள) அதலத்தில் இருக்கும் ஆதிே ஷன் ஆட ... நடனம் ஆடவும், அகில மேரு மீதாட ... பூமி மீதுள்ள மேருமலை அசைந்தாடவும், அபின (அபின்ன) ... மாறுபாடு இன்றி (சிவதாண்டவத்துக்கு) ஒற்றுமையாக காளி தானாட ... காளி தான் ஆடவும், அவளோ(டு) அன்(று) அதிர ... அக்காளியோடு அன்று அவள் அதிர்ந்து நடுங்கும்படி வீசி வாதாடும் ... (காலை ஊர்த்துவகோலத்தில்) வீசி போட்டியிட்டவரும் விடையில் ஏறுவார் ஆட ... ரிஷபத்தில் ஏறுவாரும் ஆகிய சிவனும் ஆடவும், அருகு பூத வேதாளம் அவையாட ... அருகில் பூதங்களும் பேய்களும் ஆடவும், மதுர வாணி தானாட ... இனிமை மிக்க சரஸ்வதியும் ஆடவும், மலரில் வேதனார் ஆட ... தாமரை மலரில் அமரும் பிரமனும் ஆடவும், மருவு வானு ளோராட ... அருகில் பொருந்திய தேவர்கள் எல்லாம் ஆடவும், மதியாட ... சந்திரன் ஆடவும், வனஜ மாமி யாராட ... தாமரையாள் நின் மாமியார் லக்ஷ்மியும் ஆடவும், நெடிய மாம னாராட ... விஸ்வரூபம் எடுத்த நின் மாமனார் விஷ்ணுவும் ஆடவும், மயிலும் ஆடி ... நீ ஏறிவரும் மயிலும் ஆடி, நீ ஆடி வரவேணும் ... நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும்* கதை விடாத தோள் வீமன் ... கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன் எதிர்கொள் வாளியால் ... எதிர்த்துச் செலுத்திய அம்பு மழையில் நீடு கருதுலார்கள் ... பெரும் பகைவர்களின் (கெளரவர்கள்) மாசேனை பொடியாக ... பெரிய சேனை பொடிபட (உதவியவரும்), கதறு காலி போய்மீள ... கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் (குழலை ஊதியவரும்), விஜயன் ஏறு தேர்மீது ... அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து, கனக வேத கோடூதி ... தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும் சங்கை ஊதியவரும், அலைமோதும் உததி மீதிலே ... அலை வீசும் பாற்கடல் மீதிலே சாயும் ... (பாம்பணையில்) பள்ளி கொண்டவரும், உலக மூடு சீர்பாத ... (வாமனாவதாரத்தில்) உலகத்தை அளந்து மூடிய பாதத்தாரும், உவணம் ஊர்தி ... கருடனை வாகனமாகக் கொண்டவரும், மாமாயன் மருகோனே ... ஆன மாமாயன் திருமாலின் மருமகனே உதய தாம மார்பான ... அன்றலர்ந்த மலர் மாலையை அணிமார்பனாகிய ப்ரபுடதேவ மாராஜ ... (திருவண்ணாமலையை ஆண்ட) ப்ரபுட தேவ மஹாராஜனின் உளமும் ஆட ... உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம் வாழ் தேவர் பெருமாளே. ... அவனது நெஞ்சிலே வாழும் தேவர் பெருமாளே. |
* இப்பாடல் அருணகிரியார் வாழ்வில் மகத்தானது. சம்பந்தாண்டான் என்பவனோடு வாது செய்தபோது முருகனை திருவண்ணாமலை அரசன் ப்ரபுட தேவராஜனின் சபையில் வரவழைக்கப் பாடிய பாடல் இது. இந்த வரியைப் பாடும்போது, முருகன் வேலும் மயிலும் விளங்க நடனக் கோலத்திலேயே சபையில் தோன்றி தரிசனம் தந்தான். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.146 pg 3.147 pg 3.148 pg 3.149 WIKI_urai Song number: 1056 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
கௌமாரம் குழுவினர் The Kaumaram Team பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு பொ. சண்முகம் Thiru P. Shanmugam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி Singapore B. Subhashini பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1053 - adhala sEdanArAda (common) adhala sEda nArAda akila mEru meedhAda abina kALi thAnAda ...... avaLOd andru adhira veesi vAdhAdum vidaiyil Eru vAr Ada arugu bUtha vEthALam ...... avaiyAda madhura vANi thAnAda malaril vEdha nAr Ada maruvu vAnu LOrAda ...... madhiyAda vanaja mAmi yArAda nediya mAma nArAda mayilum Adi nee Adi ...... varavENum gadhai vidAdha thOL veeman edhirkoL vALi yAlneedu karudha lArgaL mAsEnai ...... podiyAga kadhaRu kAli pOymeeLa vijayan Eru thErmeedhu kanaka vEdha kOdUdhi ...... alaimOdhum udhadhi meedhilE sAyum ulaga mUdu seerpAdha uvaNa mUrdhi mAmAyan ...... marugOnE udhaya dhAma mArbAna prabuda dhEva mArAjan uLamum Ada vAzh dhEvar ...... perumALE. ......... Meaning ......... adhala sEda nArAda: As AdhisEshan (the 1000-headed Serpent) danced in the netherworld, akila mEru meedhAda: Mount Meru (Sri KailAsh) on the earth also danced, abina kALi thAnAda: in unison with SivA's Dance, Kali also danced, avaLOd andru adhira: along with Her, making Her shiver, veesi vAdhAdum: raising His leg up in competition, vidaiyil Eru vAr Ada: SivA, who mounts on the Bull (Nandi), also danced, arugu bUtha vEthALam avaiyAda: and nearby, the BUthaganas and ghosts also danced, madhura vANi thAnAda: Saraswathi of sweet voice also danced, malaril vEdha nAr Ada: BrahmA on the Lotus also joined in the dance, maruvu vAnu LOrAda madhiyAda: all the Celestials and Moon also danced, vanaja mAmi yArAda: Lakshmi on Lotus, Your mother-in-law, danced, nediya mAma nArAda: Vishnu, the tall one (who assumed ViswarUpam) Your father-in-law, mayilum Adi nee Adi: Your peacock should also dance and You too, dancing, varavENum: should appear before me dancing!* gadhai vidAdha thOL veeman: Bhima, who never parted with his mace (gadha), from his shoulder, edhirkoL vALi yAl: shot a series of arrows (in MahAbhArathA War) needu karudhalArgaL mAsEnai: at the large army of his mighty opponents and podiyAga: decimated them (with the help of Krishna); kadhaRu kAli pOymeeLa: herds of sobbing cows came rushing to (Brindhavanam) (hearing the magical flute of Krishna); vijayan Eru thErmeedhu: as the charioteer on Vijayan (Arjuna)'s chariot, kanaka vEdha kOdUdhi: the golden and vedic victory-conch shell was blown (by Krishna); alaimOdhum udhadhi meedhilE sAyum: on the milky ocean with waves tossing about, He (Krishna) reclined on a serpent-bed; ulaga mUdu seerpAdha: (in Vamana Avatharam) he measured the entire world with one foot (that foot-bearer, Krishna) uvaNa mUrdhi mAmAyan: He, the Great Mystic, with Garuda for vehicle. marugOnE: You are His favourite nephew! udhaya dhAma mArbAna: Fresh garland adorning His chest, prabuda dhEva mArAjan: is the great King Praputa DEvA (of ThiruvaNNAmalai); uLamum Ada vAzh: Your presence made the King's heart dance with joy dhEvar perumALE.: Oh the Greatest One of all Gods! |
* This song by AruNagirinAthar has a unique significance. When challenged by SampanthAndAn in the Court of King Prapuda DhEvarAjan at ThiruvaNNAmalai, AruNagiri sang this song describing the dances of the entire universe and the Gods. At the utterance of this line, Lord Murugan appeared before him in the Court, in a dancing form, with dancing peacock and His Spear to the delight of the King and all those present. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |