திருப்புகழ் 1051 நிலவில் மாரன்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1051 nilavilmAran  (common)
Thiruppugazh - 1051 nilavilmAran - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம
     நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம்

நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு
     நியதி யாக வாயார ...... வயிறார

இலவி லூறு தேனூறல் பருகி யார வாமீறி
     யிளகி யேறு பாடீர ...... தனபாரம்

எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு
     கினுமு னீப சீர்பாத ...... மறவேனே

குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்
     குழைய மாலி காநாக ...... மொடுதாவிக்

குடில கோம ளாகார சடில மோலி மீதேறு
     குமர வேட மாதோடு ...... பிரியாது

கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்
     கடக வாரி தூளாக ...... அமராடுங்

கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நிலவில் மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில்
மாட மா மாளிகையின் மேலாம் நிலையில் வாச(ம்) மாறாத
அணையில்
... நிலவின் வெளிச்சத்தில், மன்மதன் ஏறிவரும் தென்றல்
காற்று அசைந்து வீசுகின்ற பூஞ்சோலை நிழலில், மாடங்கள் கூடிய சிறந்த
மாளிகையில் மேல் உள்ள மாடத்தில், நறு மணம் நீங்காத படுக்கையில்

மாதராரோடு நியதியாக வாயார வயிறார இலவில் ஊறு தேன்
ஊறல் பருகி ஆர் அவா மீறி
... பெண்களோடு, காலம் தவறாத
ஒழுக்கத்துடன், வாய் நிரம்பவும், வயிறு நிரம்பவும், இலவம் பூப்போன்ற
சிவந்த வாயிதழில் ஊறி வருகின்ற தேன் போல் இனிக்கும் ஊறலை
உண்டு, நிரம்பிய என் ஆசை அளவு கடந்து பொங்கி எழ,

இளகி ஏறு பாடீர தன பாரம் எனது மார்பிலே மூழ்க இறுக
மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே
...
நெகிழ்ந்து, முற்பட்டு எழுந்துள்ளதும், சந்தனம் அணிந்துள்ள தனபாரம்
என்னுடைய மார்பில் அழுந்தி முழுகும்படி கட்டி அணைத்து மோகம்
மிகுந்திருப்பினும், உன்னுடைய கடம்பு அணிந்த அழகிய திருவடிகளை
மறக்க மாட்டேன்.

குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய
மாலிகா நாகமொடு தாவி குடில கோமளாகார சடிலம் மோலி
மீது ஏறு குமர
... சிறந்த ஆகாய கங்கையைச் சூடியுள்ள தலைவர்
மகா தேவர் (ஆகிய சிவ பெருமான்) மனம் மகிழ்ச்சியில் மாலையாக
அணிந்துள்ள பாம்பின் மேல் தாவி, வளைந்துள்ள அழகிய
வடிவுள்ளதான ஜடாபார முடியின் மீது தவழ்ந்து ஏறும் குழந்தைக்
குமரனே,

வேட மாதோடு பிரியாது கலவி கூரும் ஈர் ஆறு கனக
வாகுவே
... குறப் பெண்ணாகிய வள்ளியோடு பிரியாமல் கலந்து இன்பம்
மிகக் கொள்ளும் பன்னிரண்டு பரந்த தோள்களை உடையவனே,

சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் கட கபோல மால்
யானை வனிதை பாக வேல் வீர
... சூரர்களுடைய சேனைக்கடல்
பொடியாகும்படி சண்டை செய்கின்றவனே, மதம் பெருகும் கன்னங்களை
உடைய சிறந்த வெள்ளை யானையாகிய ஐராவதம் வளர்த்த மாதாகிய
தேவயானையின் பங்கனே, வேல் வீரனே,

கருணை மேருவே தேவர் பெருமாளே. ... கருணைப் பெரு
மலையே, தேவர்கள் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.142  pg 3.143 
 WIKI_urai Song number: 1054 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1051 - nilavil mAran (common)

nilavil mAra nERUthai yasaiya veesu mArAma
     nizhalil mAda mAmALi ...... kaiyinmElAm

nilaiyil vAsa mARAtha aNaiyil mAtha rArOdu
     niyathi yAka vAyAra ...... vayiRAra

ilavi lURu thEnURal paruki yAra vAmeeRi
     yiLaki yERu pAdeera ...... thanapAram

enathu mArpi lEmUzhka iRuka mEvi mAlkUru
     kinumu neepa seerpAtha ...... maRavEnE

kulavi yOma pAkeera thimilai nAthar mAthEvar
     kuzhaiya mAli kAnAka ...... moduthAvik

kudila kOma LAkAra sadila mOli meethERu
     kumara vEda mAthOdu ...... piriyAthu

kalavi kUru meerARu kanaka vAku vEcUrar
     kadaka vAri thULAka ...... amarAdum

kadaka pOla mAlyAnai vanithai pAka vElveera
     karuNai mEru vEthEvar ...... perumALE.

......... Meaning .........

nilavil mAran ERu Uthai asaiya veesum ArAma nizhalil mAda mA mALikaiyin mElAm nilaiyil vAsa(m) mARAtha aNaiyil: In the moonlight, under the shade of the flowery garden and the drift of southerly wind which is the vehicle mounted by Manmathan (God of Love), in the terrace of a palatial mansion, on top of a bed where fragrance lingered,

mAtharArOdu niyathiyAka vAyAra vayiRAra ilavil URu thEn URal paruki Ar avA meeRi: I have been enjoying union with women on a meticulous schedule; filling my mouth and satiating my stomach, I have been imbibing the honey-like sweet saliva oozing from their lips, red like the ilavam (silk-cotton) flower, my overwhelming desire soaring boundlessly;

iLaki ERu pAdeera thana pAram enathu mArpilE mUzhka iRuka mEvi mAl kUrukinum un neepa seer pAtham maRavEnE: hugging their supple, thrusting-out and heavy bosom, smeared with sandalwood paste, to press, and drown in my chest, I become highly excited, filled with passion; nevertheless, I will never forget Your hallowed feet wearing the kadappa flowers, Oh Lord!

kula viyOka pAkeerathi milai nAthar mA thEvar kuzhaiya mAlikA nAkamodu thAvi kudila kOmaLAkAra sadilam mOli meethu ERu kumara: Wearing the great heavenly river, Gangai, on His tresses, the Supreme Lord (SivA) also gladly wears the serpent as a garland; jumping over that serpent, You climb on crawling to His curvy and matted hair, Oh little KumarA!

vEda mAthOdu piriyAthu kalavi kUrum eer ARu kanaka vAkuvE: Never leaving the company of VaLLi, the damsel of the KuRavAs, You unite with her and derive immense pleasure, Oh Lord with twelve broad shoulders!

cUrar kadaka vAri thULAka amar Adum kada kapOla mAl yAnai vanithai pAka vEl veera: You are a great warrior who shattered the sea of armies of the demons to pieces, Oh Lord! You are the consort of DEvayAnai, the daughter reared by AirAvadham, the divine white elephant from whose jaws bilious juice of rage oozed, Oh valorous Lord with the spear!

karuNai mEruvE thEvar perumALE.: You are a huge mountain of compassion and the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1051 nilavil mAran - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]