திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1050 தொட அடாது (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1050 thodaadAdhu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான ......... பாடல் ......... தொடஅ டாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறு வாராலு ...... மெதிர்கூறத் துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக துரிய மாகி வேறாகி ...... யறிவாகி நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம் நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன் அரியும் வாழ வானாளு ...... மதிரேகா கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர் கருதி டார்கள் தீமூள ...... முதல்நாடுங் கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தொட அடாது நேராக வடிவு காண வாராது ... தொடுதற்கு முடியாததாய், நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாததாய், சுருதி கூறுவாராலும் எதிர் கூற துறை இ(ல்)லாதது ... வேதப் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு வழி இல்லாததாய், ஓர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி ... நமது விருப்பத்துக்கு உரிய கடவுளாய், ஒப்பற்று ஒரே பரம் பொருளாக நிற்பதாய், விழிப்பு - உறக்கம் - கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பதுவாய், பிறிதாய், அறிவாய், நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி ... நீண்ட கால், கை ஆகிய உறுப்புக்களுடன் நடமாடும் உடலில் இடம் கொண்டு, நீ நானும் எனவு(ம்) நேர்மை நூல் கூறி நிறை மாயம் ... நீ என்றும், நான் என்றும் துவைதமாகக் கூறும் நிலைமையானது நூல்களால் கூறப்பட்டு, அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி (யாது என்பதையும்), நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி ... ஒப்பில்லாத யமனார் ஏவ, ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள் நினைவோடு ஏகும் ஓர் நீதி மொழியாதோ ... மறக்காமல் (உயிரைப் பிரிக்க) வருகின்ற ஒரு நியதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ? அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ... வலிமை கெடாத கோடிக் கணக்கான சூரர்கள் இறக்க, வெற்றி வலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த வீரனே, ஈராறு புய வேளே ... பன்னிரண்டு புயங்களை உடைய தலைவனே, அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா ... அழகு நிரம்பிய மான் பெற்ற பெண்ணாகிய வள்ளியின் கணவனே, வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா ... பிரமனும் திருமாலும் (சூரனுக்கு அஞ்சாமல்) வாழும்படியாக வானுலகை ஆளும் மேம்பாடு உடையவனே, கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் ... விஷம் நீங்காத கழுத்தை உடைய உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும், கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் கடவுள் ... பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக முன்பு அவர்களைத் தேடிச் சென்று சண்டையிட்ட கடவுளும், ஏறு மீது ஏறி புதல்வ ... ரிஷப வாகனத்தின்மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமானின் மகனே, காரணா வேத கருணை மேருவே தேவர் பெருமாளே. ... மூல காரணனே, வேதப் பொருளானவனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.140 pg 3.141 WIKI_urai Song number: 1053 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1050 - thoda adAdhu (common) thoda adAthu nErAka vadivu kANa vArAthu suruthi kURu vArAlu ...... methirkURath thuRaiyi lAtha thOrAsai yiRaiva nAki yOrEka thuriya mAki vERAki ...... yaRivAki nediya kAlkai yOdAdu mudalin mEvi neenAnu menavu nErmai nUlkURi ...... niRaimAyam niarAil kAla nArEva mukari yAna thUthALi ninaivo dEku mOrneethi ...... mozhiyAthO adalke dAtha cUrkOdi madiya vAkai vElEvi yamarsey veera eerARu ...... puyavELE azhaki nOdu mAneenu marivai kAva lAvEthan ariyum vAzha vAnALu ...... mathirEkA kaduvi dAka LArUpa nadavi nOtha thAdALar karuthi dArkaL theemULa ...... muthalnAdum kadavu LERu meethERi puthalva kAra NAvEtha karuNai mEru vEthEvar ...... perumALE. ......... Meaning ......... thoda adAthu nErAka vadivu kANa vArAthu: It cannot be touched; Its form cannot be directly seen; suruthi kURuvArAlum ethir kURa thuRai i(l)lAthathu: even those capable of interpreting the VEdAs cannot find words to describe It; Or Asai iRaivanAki Or Eka thuriyamAki vERu Aki aRivAki: It is our favourite God; It is the matchless Supreme substance; It is beyond the three stages, namely, wakefulness, sleep and dream; It is different from all these; and It is Pure Knowledge. nediya kAl kaiyOdu Adum udalil mEvi: Occupying this body which moves around with long legs and arms, nee nAnum enavu(m) nErmai nUl kURi niRai mAyam: It renders itself to interpretation as duality by texts distinguishing between "You" and "me"; this gives rise to a delusory feeling; nikaril kAlanAr Eva mukariyAna thUthALi ninaivOdu Ekum Or neethi mozhiyAthO: upon the command of the unique God of Death (Yaman), His messengers arrive without fail clamorously (to take the life away); will You kindly explain to me this precise routine? adal kedAtha cUr kOdi madiya vAkai vEl Evi amar sey veera: You wielded the triumphant spear on millions of mighty demons and killed them in the battle, Oh valorous One! eerARu puya vELE: You are the great leader with twelve shoulders, Oh Lord! azhakinOdu mAn eenum arivai kAvalA: You are the consort of VaLLi, the daughter of a beautiful deer! vEthan ariyum vAzha vAn ALum athi rEkA: You ruled the celestial land with such eminence that BrahmA and VishNu could survive (without fear of the demon SUran)! kadu vidA kaLA rUpa nada vinOtha thAdALar: His neck bears the mark of poison; He is the greatest dancer performing wonderful dances; karuthidArkaL thee mULa muthal nAdum kadavuL: He is the primal God who went after the hostile Thiripuras and burnt them down; ERu meethu ERi puthalva: and He is the Lord mounting the bull (Nandi); You are the son of that Lord SivA! kAraNA vEtha karuNai mEruvE thEvar perumALE.: You are the Causal One; You are the substance of all the VEdAs; Your compassion is great as Mount MEru; You are the Lord of the celestials, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |