திருப்புகழ் 1048 குருதி தோலினால்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1048 kurudhithOlinAl  (common)
Thiruppugazh - 1048 kurudhithOlinAl - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
     குலைய ஏம னாலேவி ...... விடுகாலன்

கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
     கொடுமை நோய்கொ டேகோலி ...... யெதிராமுன்

பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
     பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே

பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர
     பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய்

மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
     மடுவி லானை தான்மூல ...... மெனவோடி

வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
     வசன மோம றாகேசன் ...... மருகோனே

கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி
     கடிய பேயி னோடாடி ...... கருதார்வெங்

கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய ...
ரத்தம், தோல் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட குடிசையாகிய இவ்வுடலில்
கேடு அடைகின்ற இந்த உயிர் நிலை கெட்டு நீங்கும்படி,

ஏமனால் ஏவி விடு காலன் கொடிய பாசம் ஓர் சூல
படையினோடு
... யம தர்மனால் அனுப்பப்பட்டு வருகின்ற காலன்
என்ற தூதன் கொடுமை வாய்ந்த பாசக் கயிறு, ஒப்பற்ற சூலப் படை
இவைகளோடு வந்து,

கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன் ...
கூச்சமில்லாமல், பொல்லாத துன்ப நோய்களைத் தந்து, வளைத்திருந்து
என்னை எதிர்ப்பதன் முன்பு,

பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம்
உறாமல் வேல் ஏவும் இளையோனே
... சூரியன், சந்திரன்,
விண்ணுலகோர், மண்ணுலகத்தினர், திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட
திருமால் (ஆகிய இவர்கள்) பயம் நீங்க வேண்டி வேலைச் செலுத்திய
இளையவனே,

பழுது உறாத பா வாணர் எழுத ஒணாத தோள் வீர ... குற்றம்
சிறிதும் இல்லாத பாக்களைப் பாடும் திறமை வாய்ந்த கவி மணிகளாலும்
எழுதுவதற்கு முடியாத (அழகை உடைய) தோள்களை உடைய வீரனே,

பரிவினோடு தாள் பாட அருள் தாராய் ... அன்புடன் நான் உன்
திருவடியைப் பாடும்படியான திருவருளைத் தந்தருள்க.

மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி ... மருத
மரம் வேரற்றுச் சிதறி விழும்படி தன் வலிமையைக் காட்டிய மாயவன்,
புல்லாங் குழலை வாசிப்பவன்,

மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி வரு முராரி கோபாலர்
மகளிர் கேள்வன்
... நீர் நிலையில் நின்ற (கஜேந்திரன் என்ற)
யானையானது ஆதி மூலமே என்று ஓலமிட்டு அழைக்க, அதைக்
காப்பாற்ற ஓடிவந்த முரன் என்ற அசுரனின் எதிரியாகிய முராரி, இடைக்
குலத்து கோபிகை மகளிரின் கணவன்,

மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே ... தாயாகிய
கைகேயியின் சொல்லை மறுக்காமல் (காட்டுக்குச் சென்ற) கேசவனாகிய
திருமாலின் மருமகனே,

கருத ஒணாத ஞான ஆதி எருதில் ஏறு காபாலி ... எண்ணுதற்கு
அரிய ஞான மூர்த்தியும், ரிஷபத்தில் ஏறுபவரும், (பிரம்ம) கபாலத்தைக்
கையில் ஏந்தியவரும்,

கடிய பேயினோடு ஆடி கருதார் வெம் கனலில் மூழ்கவே நாடி
புதல்வ
... கடுமை வாய்ந்த பேய்களுடன் ஆடுபவரும், தன்னை மறந்து
(சிவ பூசையைக் கைவிட்ட திரிபுரத்தில்) இருந்த அனைவரும் கொடிய
நெருப்பில் முழுகும்படி நாடியவரும் ஆகிய சிவபெருமானுடைய மகனே,

காரண அதீத கருணை மேருவே தேவர் பெருமாளே. ...
காரணங்களுக்கு அப்பாற்பட்டவனே, கருணைப் பெருமலையே,
தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.136  pg 3.137 
 WIKI_urai Song number: 1051 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1048 - kurudhi thOlinAl (common)

kuruthi thOli nAlmEvu kudili lEtha mAmAvi
     kulaiya Ema nAlEvi ...... vidukAlan

kodiya pAsa mOrcUla padaiyi nOdu kUsAtha
     kodumai nOyko dEkOli ...... yethirAmun

paruthi sOman vAnAdar padiyu LOrkaL pAlAzhi
     payamu RAmal vElEvu ...... miLaiyOnE

pazhuthu RAtha pAvANa rezhutho NAtha thOLveera
     parivi nOdu thALpAda ...... aruLthArAy

maruthu neeRa thAyveezha valisey mAyan vEyUthi
     maduvi lAnai thAnmUla ...... menavOdi

varumu rAri gOpAlar makaLir kELvan mAthAvin
     vasana mOma RAkEsan ...... marukOnE

karutho NAtha njAnAthi eruthi lERu kApAli
     kadiya pEyi nOdAdi ...... karuthArveng

kanalil mUzhka vEnAdi puthalva kAra NAtheetha
     karuNai mEru vEthEvar ...... perumALE.

......... Meaning .........

kuruthi thOlinAl mEvu kudilil Etham Am Avi kulaiya: This cottage of a body is made up of blood and skin; when life degenerates and is about to depart from the body,

EmanAl Evi vidu kAlan kodiya pAsam Or cUla padaiyinOdu kUsAtha kodumai nOykodE kOli ethirA mun: and before the messenger KAlan, sent by Yaman, the God of Death, comes with the evil rope of bondage and his unique weapon, the trident, and shamelessly harasses with unbearable diseases, besieging me oppressively,

paruthi sOman vAn nAdar padi uLOrkaL pAl Azhi payam uRAmal vEl Evum iLaiyOnE: Oh Young Lord, who wielded the spear to remove the fear of the sun, the moon, the celestials, the terrestrials and Lord VishNu who slumbers in the milky ocean,

pazhuthu uRAtha pA vANar ezhutha oNAtha thOL veera: and whose valorous shoulders are so handsome that their beauty cannot be described in poetry even by expert poets who are capable of singing impeccable songs,

parivinOdu thAL pAda aruL thArAy: kindly grant me the blessing to praise Your hallowed feet with love!

maruthu neeRu athAy veezha vali sey mAyan vEy Uthi: He is the mystic one who displayed His valour that uprooted the marutha tree; He plays the flute;

maduvil Anai thAn mUlam ena Odi varu murAri gOpAlar makaLir kELvan: when the elephant (GajEndran) in the pond screamed "Oh Primordial Lord" and sought refuge, He came flying to its rescue; He is MurAri, the enemy of the demon Muran; He is the consort of the GopikA girls of the clan of cowherds;

mAthAvin vasanamO maRA kEsan marukOnE: He is KEsavan who as Rama obeyed the command of His mother (KaikEyi) and willingly went to the forest; You are the nephew of that Lord VishNu!

karutha oNAtha njAna Athi eruthil ERu kApAli: He is in the form of inconceivable Knowledge; He mounts the bull, Rishabam; He holds in His hand the skull (of BrahmA);

kadiya pEyinOdu Adi karuthAr vem kanalil mUzhkavE nAdi puthalva: He dances along with evil devils; those (in Thiripuram) who ignored Him (by not offering worship) were all drowned in wild fire by His will; You are the son of that Lord SivA!

kAraNa atheetha karuNai mEruvE thEvar perumALE.: You are beyond all causes; Your compassion is like the huge mountain MEru! You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1048 kurudhi thOlinAl - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]