பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 129 1051. ரத்தம், தோல் இவைகளால் ஆய (குடிலில்) குடிசையாகிய இவ்வுடலில் (ஏதம் ஆம் ஆவி) துன்பம் - கேடு அடைகின்ற இவ்வுயிர் (குலைய) நிலை கெட்டு நீங்கும்படி, யமதர்மராஜனால் (ஏவ விடு) அனுப்பப்பட்டு வருகின்ற காலன் (கூற்று) கொடுமை கொண்ட பாசக்கயிறு, ஒப்பற்ற சூலப்படை இவையுடன் வந்து கூச்ச மில்லாமல் பொல்லாத - நோய் கொடே - துன்ப நோயைத் தந்து, (கோலி) வளைத்திழுந்து, எதிர்ப்பதன் முன் (பருதி) சூரியன், (சோமன்) சந்திரன் (வானாடர்) விண்ணுலகோர் (படி உளோர்கள்) மண் ார்கள், (பால் ஆழி) திருப்பாற்கடலிற் பள்ளி கொண்டுள்ள திருமால் . ஆகிய இவர்கள் -பயம் நீங்கி இன்புற வேண்டி - வேலாயுதத்தைச் செலுத்தின இளையவனே . குற்றம் சிறிதும் இல்லாத பாக்களைப் பாடும் திறமை வாய்ந்த கவிமணிகளாலும் எழுதுதற்கு (வருணிப்பதற்கு முடியாத (அழகை உடைய) திருத்தோள்களை உடைய வீர மூர்த்தியே (பரிவின்ோடு) அன்புடனே நான் உன் திருத்தாள்களைப் பாடும்படியான திருவருட் செல்வத்தைத் தந்தருளுக (அல்லது தாள் பாட (பரிவினோடு) அன்புடனே உனது திருவருளைத் தந்தருளுக) மருத மரம் வேரற்று சிதறுண்டு விழும்படி (வலி செய்) தன் வலிமையைக் காட்டின மாயன் (மாய்வன்) (வேய் ஊதி) புல்லாங்குழல் வாசிப்பவன், (மடுவில்) நீர் நிலையில் நின்ற ஆனையானது ஆதி மூலமே என்று ஓலமிட்டு அழைக்க ஓடி வந்த (முராரி திருமால், கோபாலர் மகளிர் ( மகளிர்களின்) கணவன், (மாதாவின்) தாயாம் யின் (வசனமோ மறாகேசன்) சொல்லை மறுக்காமல் (காட்டுக்குச் சென்ற கேசவன் ஆகிய விஷ்ணு மூர்த்தியின் மருமகனே! எண்ணுதற்கு அரிய ஞான மூர்த்தியாம் ஆதி தேவரும், (எருதில் இடபத்தில் ஏறுபவரும், பிச்சைக் கபாலத்தைக் கையிற் கொண்டவரும், கடுமை வாய்ந்த பேய்களுடனே ஆடுபவரும், ಳ್ದ? தன்னை மறந்து (சிவ !تقلی( க் கை زیستگاه திரிபுரத்திலிருந்தோர் யாவரும் (தமது புன் சிரிப்பாம்) கொடிய நெருப்பில் முழுகும்படி (நாடி) நாடினவருமான சிவனுடைய புதல்வனே காரணங்களுக்கு மேற்பட்ட நிலையினனே கருணைப் பெருமலையே! தேவர்தம் பெருமாளே! (தாள் பாட அருள் தாராப்)