திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1046 அயிலின் வாளி (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1046 ayilinvALi (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான ......... பாடல் ......... அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயீச ரமுத ளாவு மாவேச ...... மதுபோல அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி னளவு மோடி நீடோதி ...... நிழலாறித் துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத துறவ ரான பேர்யாரு ...... மடலேறத் துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய் பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான பவதி யாம ளாவாமை ...... அபிராமி பரிபு ரார பாதார சரணி சாம ளாகார பரம யோகி னீமோகி ...... மகமாயி கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி கனத னாச லாபார ...... அமுதூறல் கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... (முதல் ஏழு வரிகள் வேசையரின் கண்களை விவரிக்கின்றன). அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ... அம்பின் கூர்மை, வேலின் நுனி இவைகளின் அளவு போலக் கூர்மை கொண்டதாய், ஈசர் அமுது அளாவும் ஆவேச மது போல ... சிவபெருமான் அமுதாக உண்ட விஷத்தின் தன்மையைக் கொண்டுள்ளதாய், பொங்கி எழச்செய்யும் கள்ளைப் போன்றதாய், அறவு நீளிதாய் மீள அகலிதாய வார்காதின் அளவும் ஓடி நீடு ஓதி நிழல் ஆறி ... மிகவும் நீண்டதாய், பின்னும் அகன்றதாய், நெடிய காது இருக்கும் இடம் வரை ஓடி, கூந்தலின் நிழலில் இளைப்பாறி, துயில் கொளாத வானோரும் மயல் கொளாத ஆவேத துறவரான பேர் யாரும் மடல் ஏற ... தூக்கம் இல்லாத தேவர்களும், காம இச்சை கொள்ளாத வேடம் பூண்ட துறவிகள் யாவரும் மடல்* ஏறும் வகைக்கு, துணியுமாறு உலா(வு) நீல நயன மாதராரோடு ... துணிச்சலுடன் உலவுகின்ற, நீலோற்பலம் போன்ற கண்களை உடைய விலைமாதர்களோடு துவளுவேனை ஈடேறு நெறி பாராய் ... இணக்கம் வைத்து வாடுகின்ற என்னை ஈடேறும்படியான வழியைக் காட்டி அருள்வாயாக. பயிலும் மேக நீகாரம் சயில ராசன் வாழ்வான பவதி யாமளா வாமை அபிராமி ... நெருங்கி எழும் மேகங்களின் கூட்டம் படிகின்ற இமயமலை அரசனான இமவானுடைய செல்வப் புதல்வியான பார்வதி தேவி, ஒரு வகைப் பச்சை நிறம் உடையவள், ஈசனின் இடது பக்கத்தில் உள்ளவள், பேரழகி, பரி புர(ம்) ஆர(ம்) பாதார சரணி சாமள ஆகார பரம யோகினீ மோகி மகமாயி ... சிலம்பும், மலர் மாலைகளும் உள்ள பாதத் தாமரையாகிய திருவடிகள் உடையவள், மரகதப் பச்சை வண்ணத்தாள், பரதேவதை, அனைவருக்கும் அன்பு ஊட்டுபவள், பெரிய அம்பிகை, கயிலையாளர் ஓர் பாதி கடவுளாளி லோகாயி ... கயிலாசநாதரின் ஒரு பாகத்தில் உள்ளவள், எல்லாத் தேவர்களையும் ஆள்பவள், உலகம்மை ஆனவள், கன(ம்) தன அசலா பாரம் அமுது ஊறல் கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர ... (அத்தகைய பார்வதி தேவியின்) பருத்த மார்பகங்களில் இருந்து ஊறின பாலமுதின் நறுமணம் வீசும் (வாயால்) வேதப் பாக்களாகிய தேவாரத்தை (திருஞான சம்பந்தராகத் தோன்றிப்) பாடிய கவிவாணனே, வேல் வீரனே, கருணை மேருவே தேவர் பெருமாளே. ... கருணை உருவான மேருமலையே, தேவர்கள் பெருமாளே. |
* மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம் உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.132 pg 3.133 WIKI_urai Song number: 1049 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1046 - ayilin vALi (common) ayilin vALi vElvALi aLavu kUri thAyeesa ramutha LAvu mAvEsa ...... mathupOla aRavu neeLi thAymeeLa akali thAya vArkAthi naLavu mOdi needOthi ...... nizhalARith thuyilko LAtha vAnOru mayalko LAtha AvEtha thuRava rAna pEryAru ...... madalERath thuNiyu mARu lAneela nayana mAtha rArOdu thuvaLu vEnai yeedERu ...... neRipArAy payilu mEka neekAra sayila rAsan vAzhvAna pavathi yAma LAvAmai ...... apirAmi paripu rAra pAthAra saraNi sAma LAkAra parama yOki neemOki ...... makamAyi kayilai yALa rOrpAthi kadavu LALi lOkAyi kanatha nAsa lApAra ...... amuthURal kamazhu mAra NAkeetha kavithai vANa vElveera karuNai mEru vEthEvar ...... perumALE. ......... Meaning ......... (The first seven lines describe the eyes of whores). ayilin vALi vEl vALi aLavu kUrithAy: They are sharp like the tip of the arrow and the pointed end of the spear; eesar amuthu aLAvum AvEsa mathu pOla: they have the quality of the poison consumed by Lord SivA who imbibed it like nectar; they are like toddy that makes one inebriated and highly excited; aRavu neeLithAy meeLa akalithAya vArkAthin aLavum Odi needu Othi nizhal ARi: they are very long, and still quite wide, running right up to the lengthy ears and relaxing under the shade of the hair; thuyil koLAtha vAnOrum mayal koLAtha AvEtha thuRavarAna pEr yArum madal ERa: they make the sleepless celestials and all those ascetics, who feign to be dispassionate, resort to the palm-leaf (madal*) custom; thuNiyumARu ulA(vu) neela nayana mAtharArOdu thuvaLuvEnai dERu neRi pArAy: so daring are those roving eyes that look like the blue lily; I have been having liaison with whores having such eyes and am feeling miserable; will You kindly show me a way out so that I could be redeemed? payilum mEka neekAram sayila rAsan vAzhvAna pavathi yAmaLA vAmai apirAmi: She is PArvathi DEvi, the beloved daughter of King HimavAn of the HimAlayAs, over which dense clouds hover; She is of a unique green complexion; She is concorporate on the left side of Lord SivA; She is exquisitely beautiful; pari pura(m) Ara(m) pAthAra saraNi sAmaLa AkAra parama yOkinee mOki makamAyi: On Her hallowed and lotus feet She wears anklets and floral garlands; She is of the hue of emerald-green; She is the Supreme Deity; She infuses love in everyone; She is the Primal Mother; kayilaiyALar Or pAthi kadavuLALi lOkAyi: She is one-half of Lord SivA, the Head of Mount KailAsh; She rules over all the celestials; She is the Universal Mother; kana(m) thana asalA pAram amuthu URal kamazhum AraNA keetha kavithai vANa vEl veera: that PArvathi DEvi fed You with nectar-like milk from Her huge breasts; with the aroma of that holy milk (still lingering in Your mouth), You composed VEdic Hymns (thEvAram), Oh Great Poet (coming into this world as ThirugnAna Sambandhar)! You are the valorous One with the spear! karuNai mEruvE thEvar perumALE.: Your compassion is huge like the Mount MEru, Oh Lord! You are the Leader of the celestials, Oh Great One! |
* Sending out passion-filled doodles in palm leaves was known as "madal ERuthal": here the passion-stricken hero makes several doodles and mounts a horse made of palm leaves to go around the town announcing to the world his love for the heroine. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |