பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப் புகழ் உரை 125 1049. (அயிலின் வாளி) வளியின் அயில் - அம்பின் கூர்மை, (வேல்வாளி) வேலின் கூர்மை (அளவு இவைகளின் அளவு போலத் - தன்மைபோலக் கூர்மை கொண்டதாய், (ஈசர் அமுது) சிவபிரான் அமுதாக உண்ட விஷத்தின் தன்மையை (அளாவு கொண்டுள்ளதாய், (ஆவேசம் மது போல) பொங்கி எழும் கள்ளைப் போல. மிகவும் நீண்டதாய், பின்னும் அகன்றதாய், அந்த நீண்ட காது இருக்கும் இடம் வரையில் ஓடி, நீண்ட கூந்தலின் நிழலில் இளைப்பாறி, துாக்கம் இல்லாத தேவர்களும், காம இச்சை கொள்ளாத வேடம் பூண்ட துறவிகள் யாவரும் மடல் ஏறும் வகைக்குத் துணிவு கொள்ளும்படி உலவுகின்ற, நீலோற்பலம் போன்ற கண்களை உடைய மாதர்களோடு இணக்கம் வைத்து வாடுகின்ற நான் ஈடேறும்படியான வழியைப் (பாராய்) காட்டியருளுவாயாக நெருங்கி எழும் மேகங்களின் (நீகாரம்) கூட்டம் படிகின்ற சயிலராசன் - மலை அரசனாம் (இமவானுடைய) செல்வப் புதல்வியான பவதி (தேவி, (யாமளா) சியாமள நிறத்தை ஒருவகைப் பச்சை நிறத்தை உடையவள் (வாமை) அழகிய (அல்லது இடது பாகத்தில் உள்ள) சிவ சத்தி, (அபிராமி) அழகி - (பரிபுரம்) சிலம்பும், (ஆரம்) கடம்பும் உள்ள (பாதாரம்) பாதாரவிந்தும் பாத தாமரையாம் (சரணி) திருவடிகளை உடையவள், (சாமள ஆகார) - பசுமை உருவம் கொண்ட பரதேவதை (மோகி) அன்பு ஊட்டுபவள் - (மகமாயி) பார்வதி கயிலையாளர் - சிவனது ஒரு பாதியில் உள்ளவள். (கடவுளாளி) - எல்லாத் தேவர்களையும் ஆள்பவள் (லோகாயி) உலகம்மையார் - ஆகிய தேவியின் (கனம்) கனத்த அல்லது பொன்னிறமான, தன அசல பாரம் - கொங்கை மலைகளாம் பாரங்களினின்றும் (அமுதுாறல் ஊறின பாலமுதின் - நறுமணம் வீசும் (ஆரணா கித கவிதைவான) வேத கீதப் பாக்களான (திரு நெறித்தமிழ் என்னும்) தேவாரத்தைப் பாடின பிரபுவே வேல்வீரனே கருணை ‘மேருவே தேவர் பெருமாளே! (ஈடேறு நெறிபாராய்)