திருப்புகழ் 1040 நாராலே தோல்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1040 nArAlEthOl  (common)
Thiruppugazh - 1040 nArAlEthOl - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

......... பாடல் .........

நாரா லேதோல் நீரா லேயாம்
     நானா வாசற் ...... குடிலூடே

ஞாதா வாயே வாழ்கா லேகாய்
     நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன்

தாரா ரார்தோ ளீரா றானே
     சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே

தாழா தேநா யேனா வாலே
     தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய்

பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
     பாவார்வேதத் ...... தயனாரும்

பாழூ டேவா னூடே பாரூ
     டேயூர் பாதத் ...... தினைநாடாச்

சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
     சேவூர் வார்பொற் ...... சடையீசர்

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நாராலே தோல் நீராலேயாம் ... நரம்புகளாலும், தோலாலும்,
நீராலும் ஆகியுள்ள

நானா வாசற் குடிலூடே ... பலவித வாயில்களை (நவத்
துவாரங்களை*) உடைய குடிசையாகிய இந்த உடலினுள்

ஞாதாவாயே வாழ்கால் ஏகாய் ... அறிவு வாய்ந்தவானாக வாழ்கின்ற
காலத்தில், உயிர் போதலுற்று இறந்து போகும் சமயம்

நாய்பேய் சூழ்கைக்கு இடமாமுன் ... நாயும் பேயும் என் உடலைச்
சூழுதற்கான காலம் வருமுன்பாக,

தாரார் ஆர்தோள் ஈராறானே ... ஆத்திமாலைகள் நிறைந்த
பன்னிரண்டு தோள்களை உடையவனே,

சார்வானோர்நற் பெருவாழ்வே ... உன்னைச் சார்ந்தவர்களுக்கு
நல்ல பெரு வாழ்வே,

தாழாதே நாயேன் நாவாலே ... சற்றும் தாமதியாமல் நாயனைய
அடியேன் என் நாவைக்கொண்டு

தாள்பாடாண்மைத் திறல்தாராய் ... உன் திருவடிகளைப் பாடும்
வலிமைத்திறலைத் தருவாயாக.

பாரேழோர்தாளாலே யாள்வோர் ... ஏழுலகங்களையும் தன் ஒப்பற்ற
முயற்சியால் காத்து ஆளுகின்ற திருமாலும்,

பாவார்வேதத்து அயனாரும் ... தூய்மையான பாடல்கள் உள்ள
வேதத்தை ஓதும் பிரமனும்,

பாழூடே வானூடே பாரூடேயூர் பாதத்தினை நாடா ...
வெட்டவெளிப் பாழிலும், வானிலும், மண்ணிலும் பரவி நிற்கும்
பாதத்தினை நாடமுடியாத

சீரார் மாதோடேவாழ்வார் ... சிறப்பினை உடையவரும், பார்வதி
தேவியுடன் வாழ்பவரும்,

நீள் சேவூர்வார் பொற் சடையீசர் ... பெரிய ரிஷபத்தை
வாகனமாக உடையவரும், பொன்னிறச் சடை உடையவருமான
ஈசர் சிவபிரானுடைய

சேயே வேளே பூவே கோவே ... குமாரனே, செவ்வேளே,
அழகனே, தலைவனே,

தேவே தேவப் பெருமாளே. ... தெய்வமே, தேவர்களின் பெருமாளே.


* ஒன்பது துவாரங்கள்:

இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.120  pg 3.121 
 WIKI_urai Song number: 1043 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1040 - nArAlE thOl (common)

nArA lEthOl neerA lEyAm
     nAnA vAsaR ...... kudilUdE

njAthA vAyE vAzhkA lEkAy
     nAypEy sUzhkaik ...... kidamAmun

thArA rArthO LeerA RAnE
     sArvA nOrnaR ...... peruvAzhvE

thAzhA thEnA yEnA vAlE
     thALpA dANmaith ...... thiRalthArAy

pArE zhOrthA LAlE yALvOr
     pAvAr vEthath ...... thayanArum

pAzhU dEvA nUdE pArU
     dEyUr pAthath ...... thinainAdA

seerAr mAthO dEvAzh vArneeL
     sEvUr vArpoR ...... cadaiyeesar

sEyE vELE pUvE kOvE
     thEvE thEvap ...... perumALE.

......... Meaning .........

nArA lEthOl neerA lEyAm nAnA vAsaR kudilUdE: This body is like a cottage composed of veins, skin, water and several doorways (nine portals*).

njAthA vAyE vAzhkAl EkAy: While living in this body as an intelligent person, the day of reckoning will come, and I have to depart after death.

nAypEy sUzhkaik kidamAmun: Before the body is subjected to preying by dogs and devils, -

thArA rArthO LeerA RAnE: Oh Lord wearing on Your twelve shoulders the fulsome garlands of Aththi (mountain ebony) flowers,

sArvA nOrnaR peruvAzhvE: Oh the bestower of prosperous life on Your devotees, -

thAzhA thEnA yEnA vAlE thALpA dANmaith thiRalthArAy: kindly grant me, the lowly dog, without delay, the vigour and strength to sing the glory of Your feet with my tongue!

pArE zhOrthA LAlE yALvOr: Lord Vishnu who protects the seven worlds with His perseverance

pAvAr vEthath thayanArum: and BrahmA, who preaches the VEdAs full of songs,

pAzhU dEvA nUdE pArU dEyUr pAthath thinainAdA: searched in the wastelands, in the skies and in the earth for the hallowed feet of Lord SivA which they could never attain;

seerAr mAthO dEvAzh vAr: He is of such a unique glory; He lives with His consort, PArvathi;

neeLsEvUr vArpoR cadaiyeesar: he mounts the huge bull (Nandi); He has golden tresses;

sEyE vELE pUvE kOvE: You are the son of that Lord SivA! You are the reddish God of Love! You are the handsome king!

thEvE thEvap perumALE.: Oh Lord, You are the God of all the Celestials, Oh Great One!


* The nine portals of the body:

two eyes, two ears, two nostrils, a mouth and two excretory organs.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1040 nArAlE thOl - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]