திருப்புகழ் 1033 தோடு உற்ற காது  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1033 thOduutRakAdhu  (common)
Thiruppugazh - 1033 thOduutRakAdhu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத்த தானத்த தானத்த தானத்த
     தானத்த தானத்த ...... தனதான

......... பாடல் .........

தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற
     தோய்மைக்க ணால்மிக்க ...... நுதலாலே

தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள்
     சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம்

ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க
     ஓசைக்கு நேசித்து ...... உழலாதே

ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி
     யோதற்கு நீசற்று ...... முணர்வாயே

வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின்
     மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா

வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க
     வேதத்தி லேநிற்கு ...... மயனாருந்

தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த
     சேமத்தி னாமத்தை ...... மொழிவோனே

தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தோடு உற்ற காது ஒக்க நீடு உற்ற போர் உற்ற தோய் மைக்
க(ண்)ணால் மிக்க நுதலாலே
... தோடு அணிந்துள்ள காது வரை
நீண்டுள்ளதும், போர் செய்வதற்குச் சித்தமாய் உள்ளதுமான மை
தீட்டிய கண்ணாலும், சிறந்த நெற்றியாலும்,

தோள் வெற்பினால் வில் கை வேளுக்கு மேன் மக்கள்
சோர்கைக்கு மால் விற்கும் மடவார் தம்
... மலை போன்ற
தோள்களாலும், (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனுடைய
பாணங்களாலும், மேலான குணங்களை உடைய மக்களும் மனம்
சோர்ந்து போகும்படி காம ஆசையை விற்கின்ற விலைமாதர்களின்,

ஊடற்குள்ளே புக்கு வாடிக் கலாம் மிக்க ஓசைக்கு நேசித்து
உழலாதே
... ஊடல் பிணக்கில் சிக்கி வாட்டமுற, சண்டைக் கோபத்தால்
மிக்கெழுந்த கூச்சல் சப்தத்தை விரும்பி (நான்) அலையாமல்,

ஊர் பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி ... எனது ஊர்,
ஈன்றெடுத்த தாய், எனது உறவினர் இவை எல்லாமாய் உள்ள (உனது)
திருவடியைக் கெட்டியாகப் பிடித்து,

ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே ... போற்றித் துதிக்க நீ சிறிது எனக்கு
உணர்த்த மாட்டாயோ?

வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க ஓர் வெற்பின் மீது உற்ற
பேதைக்கு ஒர் மணவாளா
... வேடர்களையும் பெரிய சொர்க்கப்
பூமியில் வாழ்விக்க விரும்பி சிறந்த வள்ளி மலையின் மேல் இருந்த
பெண்ணாகிய வள்ளிக்கு ஒப்பற்ற மணவாளனே,

வேழத்தின் ஆபத்தை மீள் வித்த மால் ஒக்க வேதத்திலே
நிற்கும் அயனாரும்
... யானையாகிய கஜேந்திரனை அதற்குற்ற
ஆபத்திலிருந்து விடுவித்த திருமாலும், அவருடன் வேதத்தையே ஓதி
நிற்கும் பிரமனும்,

தேடற்கு ஒணா நிற்கும் வேடத்தர் தாம் வைத்த சேமத்தின்
நாமத்தை மொழிவோனே
... (முடியையும் அடியையும்) தேடுதற்கு
முடியாத எல்லையில் நிற்கும் அழல் உருவம் கொண்ட வேடத்தினராகிய
சிவபெருமான் தாம் வைத்துள்ள சேமிப்புப் பொருளாகிய ஐந்தெழுத்து
நாமத்தின் (நமசிவாய) பெயரையும், புகழையும் (சம்பந்தராக வந்து)
எடுத்து மொழிந்தவனே,

தீது அற்ற நீதிக்கு(ள்) ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க
வாழ்வித்த பெருமாளே.
... குற்றம் இல்லாத நீதி நெறியில் பொருந்திய
பக்தி சிறந்த அடியார்கள் போற்றி வணங்க, அவர்களை வாழ்வித்த
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.106  pg 3.107  pg 3.108  pg 3.109 
 WIKI_urai Song number: 1036 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1033 - thOdu utRa kAdhu (common)

thOdutRa kAthokka needutRa pOrutRa
     thOymaikka NAlmikka ...... nuthalAlE

thOLveRpi nAlviRkai vELukku mEnmakkaL
     sOrkaikku mAlviRku ...... madavArtham

UdaRku LEpukku vAdikka lAmikka
     Osaikku nEsiththu ...... uzhalAthE

UrpetRa thAysutRa mAyutRa thALpatRi
     yOthaRku neesatRu ...... muNarvAyE

vEdarkku neeLsorkkam vAzhvikka vOrveRpin
     meethutRa pEthaikkor ...... maNavALA

vEzhaththi nApaththai meeLviththa mAlokka
     vEthaththi lEniRku ...... mayanArum

thEdaRko NAniRkum vEdaththar thAmvaiththa
     sEmaththi nAmaththai ...... mozhivOnE

theethatRa neethikku LEypaththi kUrpaththar
     sEvikka vAzhviththa ...... perumALE.

......... Meaning .........

thOdu utRa kAthu okka needu utRa pOr utRa thOy maik ka(N)NAl mikka nuthalAlE: Because of their dark and combative eyes with mascara, extending right up to the studded ears and their prominent foreheads,

thOL veRpinAl vil kai vELukku: because of their hill-like shoulders and because of the flowery arrows shot by Manmathan from his bow of sugarcane,

mEn makkaL sOrkaikku mAl viRkum madavAr tham: these whores are capable of selling delusive carnal pleasure, destabilising the mind of even the most virtuous people;

UdaRkuLLE pukku vAdik kalAm mikka Osaikku nEsiththu uzhalAthE: I do not wish to be depressed by falling into the web of their erotic clashes nor do I like to roam about hearing the high decibel noise of their angry exchanges;

Ur petRa thAy sutRamAy utRa thAL patRi: (instead,) I would like to hold firmly Your hallowed feet that symbolise my hometown, my mother and my relatives

OthaRku nee satRum uNarvAyE: and praise Your glory; will You not even slightly enlighten me to do that?

vEdarkku neeL sorkkam vAzhvikka Or veRpin meethu utRa pEthaikku or maNavALA: She longed to uplift her lineage of hunters so that they could also thrive in the great heaven; She is the damsel, VaLLi, living in the famous Mount VaLLimalai; You are her matchless consort!

vEzhaththin Apaththai meeL viththa mAl okka vEthaththilE niRkum ayanArum: Lord VishNu who rescued the elephant GajEndran from its peril, and BrahmA who constantly chants the VEdAs

thEdaRku oNA niRkum vEdaththar: were unable to discern (the head or feet of) Lord SivA who stood beyond all frontiers, taking the form of a fiery effulgence;

thAm vaiththa sEmaththin nAmaththai mozhivOnE: His safe haven, namely the five sacred letters (NamasivAya), and glory were propagated by You (coming as ThirugnAna Sambandhar)!

theethu atRa neethikku(L) Ey paththi kUr paththar sEvikka vAzhviththa perumALE.: As Your unblemished and righteous followers, full of devotion, praise and worship You, they are blessed with prosperity, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1033 thOdu utRa kAdhu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]