திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1027 தோதகம் மிகுத்த (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1027 thOdhagammiguththa (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தத்த தானதன தத்த தானதன தத்த ...... தனதான ......... பாடல் ......... தோதகமி குத்த பூதமருள் பக்க சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய் சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று சோகைபல குட்ட ...... மவைதீரா வாதமொடு பித்த மூலமுடன் மற்று மாயபிணி சற்று ...... மணுகாதே வாடுமெனை முத்தி நீடியப தத்தில் வாழமிக வைத்து ...... அருள்வாயே காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த கானககு றத்தி ...... மணவாளா காசினிய னைத்து மோடியள விட்ட கால்நெடிய பச்சை ...... மயில்வீரா வேதமொழி மெத்த வோதிவரு பத்தர் வேதனைத விர்க்கு ...... முருகோனே மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தோதகம் மிகுத்த பூதம் மருள் ... வஞ்சகம் மிக்குள்ள (மண், நீர், தீ, காற்று, விண் என்னும்) ஐந்து பூதங்களின் மயக்கத்தால் ஏற்படும் பக்க சூலை வலி வெப்பு மதநீர் தோய் ... விலாப் பக்கத்தில் உண்டாகும் சூலை நோய், வலிப்பு முதலிய நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து, சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை ... எங்கும் பரவும் பெரு வயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குஷ்ட நோய்கள், தீரா வாதமொடு பித்தம் மூலமுடன் மற்று(ம்) ஆய பிணி சற்றும் அணுகாதே ... தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூல நோய் பின்னும் பல வகையான நோய்கள் கொஞ்சமேனும் என்னை அணுகாமல், வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே ... வருந்தி நிற்கும் என்னை முக்தி நீடித்து விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக. காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா ... காதல் மிகக் கொண்டு நல்ல தினை விளைவித்த காட்டுக் குறத்தியாகிய வள்ளியின் மணவாளனே, காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா ... உலகம் முழுமையும் ஓடி (அதன் சுற்றளவை) அளவிட்டு வந்த, நீண்ட கால்களை உடைய பச்சை மயில் வீரனே, வேத மொழி மெத்த ஓதி வரு(ம்) பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே ... வேத மொழிகளை எப்போதும் ஓதும் அடியார்களின் துயரங்களைத் தீர்க்கும் முருகனே, மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே. ... முன்னாள் அசுரர்கள் அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.96 pg 3.97 pg 3.98 pg 3.99 WIKI_urai Song number: 1030 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1027 - thOdhagam miguththa (common) thOthakami kuththa pUthamaruL pakka cUlaivali veppu ...... mathaneerthOy sUzhperuva yitRu nOyirumal kutRu sOkaipala kutta ...... mavaitheerA vAthamodu piththa mUlamudan matRu mAyapiNi satRu ...... maNukAthE vAdumenai muththi neediyapa thaththil vAzhamika vaiththu ...... aruLvAyE kAthalmika vutRu mAthinaivi Laiththa kAnakaku Raththi ...... maNavALA kAsiniya naiththu mOdiyaLa vitta kAlnediya pacchai ...... mayilveerA vEthamozhi meththa vOthivaru paththar vEthanaitha virkku ...... murukOnE mElasura ritta thEvarsiRai vetti meeLavidu viththa ...... perumALE. ......... Meaning ......... thOthakam mikuththa pUtham maruL: The five treacherous elements (namely, earth, water, fire, air, and cosmos) are responsible for this delusion, causing, pakka cUlai vali veppu mathaneer thOy: paralysis of one side, epilepsy, fever, edema, sUzh peru vayitRu nOy irumal kutRu sOkai pala kuttam avai: the widespread ulcer in the stomach, cough, head ache, anaemia, various kinds of leprosy, theerA vAthamodu piththam mUlamudan matRu(m) Aya piNi satRum aNukAthE: incurable gastritis, biliousness, piles and several other diseases; I do not wish to be affected by any of those; vAdum enai muththi neediya pathaththil vAzha mika vaiththu aruLvAyE: ending my suffering, kindly bless me to remain adhered to Your hallowed feet so that my liberation will be long lasting! kAthal mika utRu mA thinai viLaiththa kAnaka kuRaththi maNavALA: She attended with utmost devotion to growing millet of great quality; She is the damsel of the KuRavAs living in the forest; and You are the Consort of that VaLLi! kAsini anaiththum Odi aLavitta kAl nediya pacchai mayil veerA: You are the valorous Lord who mounted the green peacock with long legs, that flew around the entire world as if to measure its circumference! vEtha mozhi meththa Othi varu(m) paththar vEthanai thavirkkum murukOnE: You remove the grief of those devotees who are engaged in VEdic chanting at all times, Oh MurugA! mEl asurar itta thEvar siRai vetti meeLa viduviththa perumALE.: You destroyed the prisons in which the demons had previously locked up the celestials and liberated the DEvAs to return to the Celestial Land, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |