பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 89 (என்) பாவ வினையெலாம் தொலைந்துபோய், உனது திரு நாமங்களையே (நான் நினைக்கும் படியான புத்தியை, இப்பூமியில் (நீ) எனக்கு அருள் புரிய வரவேணும்; டலின் அழகுக்கு ஏற்ப நடனம் புரியும் மயிலை வேகமாகச் செலுத்திப் பராக்ரம்த்துடன் நிற்கின்ற முருகனே! மூர்த்தியாம் சிவனுக்கு வேதமொழி முடிய உபதேசித்து, மகிழ்ச்சியை (விருப்பை) ஊட்டிய அறிஞனே! (வேடைமயல்) காம நோய் மோகம் கொண்டு வேடர் மகளாம் - வள்ளியிடம் (வேளை என) காவல் வேலையாளாக நின்ற அல்லது. சமயா சமயம் பார்த்து நின்ற வெற்றி வீரனே! முன்பு அசுரர்கள் இட்ட தேவர்களின் சிறையை (வெட்டி) ஒழித்து அவர்கள் மீளும்படி விடுவித்த பெருமாளே! (உன் நாமம் நினை புத்தி அருள்கைக்கு வரவேணும்) 1030. (தோதகம்) சகம் மிக்குள்ள (மன், நீர், தீ, காற்று, வின்) என்னும் ஐம்பூதங்களின் (மருள்) மயக்கினால் (ஏற்படும்) (அல்லது ஐம்பூதங்களால் (அருள்) உண்டாகும் பக்க சூலை விலாப் ப்க்கிங்களில் நோய் கொடுக்கும் சூலை நோய்; (வலி) குமர கண்டம் முதலிய இழுப்பு நோய்கள், (வெப்பு) சுரம், (மத நீர்) வீரிய சம்பந்தமான நோப், (தோப்) சேர்ந்து - (சூழ்) எங்கும் பரவி நோய் தரும் பெரு வயிற்று நோய் இருமல், (குற்று இடிப்பது போல் தலையிடி முதலிய நோய், (சோகை) ரத்த மின்மையால் உடம்பு ஊதுதல், (பல குட்டமவை) பல வகையான குட்ட நோய்கள், (திரா)- தீர்க்க முடியாத (வாதம்) வாயு சம்பந்தமான நோய்கள், பித்தம் - பித்த சம்பந்தமான நோய்கள், மூல நோய், இவையுடன் (மற்றும் ஆய பிணி) பின்னும் பல வகையான நோய்கள் - இவை எவையும் என்னைக் கொஞ்சமேனும் அணுகாதவாறு: வருந்தி நிற்கும் என்னை நீ மோஷம் நீடித்து விளங்கும் உனது திருவடியில் வாழும் படியாக நன்கு வைத்து அருள் புரிவாயாக ஆசை மிக வைத்து நல்ல தினையை விளைவித்த காட்டுக் குறத்தி வள்ளியின் மணவாளனே! உலகம் முழுமையும் ஓடி வலம் வந்த ஒடி அளவிட்டு வந்த நீண்ட காலை உடைய பச்சை மயில் வீரனே !