திருப்புகழ் 1026 தோடு பொரு மை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1026 thOduporumai  (common)
Thiruppugazh - 1026 thOduporumai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான

......... பாடல் .........

தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற
     தோர்தனம சைத்து ...... இளைஞோர்தம்

தோள்வலிம னத்து வாள்வலியு ழக்கு
     தோகையர்ம யக்கி ...... லுழலாதே

பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி
     யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே

பாவவினை யற்று னாமநினை புத்தி
     பாரிலருள் கைக்கு ...... வரவேணும்

ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி
     ஆண்மையுட னிற்கு ...... முருகோனே

ஆதியர னுக்கு வேதமொழி முற்றி
     யார்வம்விளை வித்த ...... அறிவோனே

வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு
     வேளையென நிற்கும் ...... விறல்வீரா

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
     மீளவிடு வித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தோடு பொரு(ம்) மைக் கண் ஆட ... காதில் அணியும்
தோடுகளைத் தாக்கும், மை பூசிய, கண்கள் அசைய,

வடிவுற்றது ஓர் தனம் அசைத்து இளைஞோர் தம் தோள் வலி
மனத்து வாள் வலி உழக்கு தோகையர் மயக்கில் உழலாதே
...
அழகுள்ள, ஒப்பற்ற மார்பகங்களை அசைத்து இளைஞர்களுடைய தோள்
வலிமையையும் மனத்தின் ஒளி வாய்ந்த வலிமையையும் கலக்குகின்ற
மயில் போன்ற மாதர்களின் காம மயக்கத்தில் நான் அலைவுறாமல்,

பாடல் இசை மிக்க ஆடல் கொ(ண்)டு பத்தியோடு நினை
பத்தர் பெரு வாழ்வே
... பாடல், இசை, மிகுந்த ஆடல் இவைகளைக்
கொண்டு பக்தியுடன் உன்னை நினைக்கின்ற பக்தர்களின் பெரிய
செல்வமே,

பாவ வினை அற்று நாம(ம்) நினை புத்தி பாரில்
அருள்கைக்கு வர வேணும்
... என் பாவ வினைகள் தொலைந்து
போய், உனது திரு நாமங்களையே நினைக்கும்படியான புத்தியை இந்தப்
பூமியில் எனக்குத் தந்தருள வரவேணும்.

ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில் எற்றி ஆண்மையுடன்
நிற்கு(ம்) முருகோனே
... ஆடலின் அழகான தாளத்துக்கு ஏற்ப
நடனம் செய்யும் மயிலை வேகமாகச் செலுத்தி வீரத்துடன் நிற்கும்
முருகனே,

ஆதி அரனுக்கு வேத மொழி முற்றிய ஆர்வம் விளைவித்த
அறிவோனே
... ஆதி மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கு வேதங்களை
முழுவதுமாய் உபதேசித்து, மகிழ்ச்சியை ஊட்டிய அறிஞனே,

வேடை மயல் உற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும்
விறல் வீரா
... காம நோய் மோகம் கொண்டு, வேடர்கள் பெண்ணாகிய
வள்ளிக்கு காவல் வேலையாளாக நின்ற வெற்றி வீரனே,

மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த
பெருமாளே.
... முன்பு அசுரர்கள் இட்ட தேவர்களின் சிறையை வெட்டி,
அவர்கள் மீளும்படி விடுவித்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.94  pg 3.95  pg 3.96  pg 3.97 
 WIKI_urai Song number: 1029 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1026 - thOdu poru mai (common)

thOduporu maikka NAdavadi vutRa
     thOrthanama saiththu ...... iLainjOrtham

thOLvalima naththu vALvaliyu zhakku
     thOkaiyarma yakki ...... luzhalAthE

pAdalisai mikka Adalkodu paththi
     yOduninai paththar ...... peruvAzhvE

pAvavinai yatRu nAmaninai puththi
     pArilaruL kaikku ...... varavENum

Adalazha kokka Adumayi letRi
     ANmaiyuda niRku ...... murukOnE

Athiyara nukku vEthamozhi mutRi
     yArvamviLai viththa ...... aRivOnE

vEdaimaya lutRu vEdarmaka Lukku
     vELaiyena niRkum ...... viRalveerA

mElasura ritta thEvarsiRai vetti
     meeLavidu viththa ...... perumALE.

......... Meaning .........

thOdu poru(m) maik kaN Ada: With their rolling eyes, painted with black pigment, attacking their earstuds,

vadivutRathu Or thanam asaiththu iLainjOr tham thOL vali manaththu vAL vali uzhakku thOkaiyar mayakkil uzhalAthE: and with the movement of their beautiful and matchless bosom they challenge the valour of the shoulders and the bright strength of the mind of young men; I do not wish to be roaming about in delusory passion for such peacock-like women;

pAdal isai mikka Adal ko(N)du paththiyOdu ninai paththar peru vAzhvE: Oh the Great Treasure of those devotees who worship You through songs, music and many kinds of dances,

pAva vinai atRu nAma(m) ninai puththi pAril aruLkaikku vara vENum: kindly come to me to to destroy all my past sinful deeds and grant the intellect that thinks only of Your hallowed names!

Adal azhaku okka Adum mayil etRi ANmaiyudan niRku(m) murukOnE: Oh MurugA, You stand there valorously after driving fast the peacock that is capable of dancing in accordance with the elegant beats of classical dance!

Athi aranukku vEtha mozhi mutRiya Arvam viLaiviththa aRivOnE: To the primordial Lord SivA, You preached the complete scriptures and exhilarated Him, Oh Wise One!

vEdai mayal utRu vEdar makaLukku vELai ena niRkum viRal veerA: Struck by feverish passion, You went and stood guard for VaLLi, the damsel of the hunters, Oh Valiant and Brave One!

mEl asurar itta thEvar siRai vetti meeLa viduviththa perumALE.: Shattering the prisons into which the celestials were thrown by the demons, You set them free, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1026 thOdu poru mai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]