திருப்புகழ் 1009 முருகு உலாவிய குழல்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1009 muruguulAviyakuzhal  (common)
Thiruppugazh - 1009 muruguulAviyakuzhal - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
          தனன தானன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

முருகு லாவிய குழலினு நிழலினும்
     அருவ மாகிய இடையினு நடையினு
          முளரி போலுநல் விழியினு மொழியினு ...... மடமாதர்

முனிவி லாநகை வலையினு நிலையினும்
     இறுக வாரிடு மலையெனு முலையினு
          முடிவி லாததொர் கொடுவிட மடுவித ...... மயலாகி

நரகி லேவிழு மவலனை யசடனை
     வழிப டாதவொர் திருடனை மருடனை
          நலமி லாவக கபடனை விகடனை ...... வினையேனை

நடுவி லாதன படிறுகொ ளிடறுசொ
     லதனில் மூழ்கிய மறவனை யிறவனை
          நளின மார்பத மதுபெற ஒருவழி ...... யருள்வாயே

வரிய ராவினின் முடிமிசை நடமிடு
     பரத மாயவ னெழுபுவி யளவிடு
          வரதன் மாதவ னிரணிய னுடலிரு ...... பிளவாக

வகிரு மாலரி திகிரிய னலையெறி
     தமர வாரிதி முறையிட நிசிசரன்
          மகுட மானவை யொருபதும் விழவொரு ...... கணையேவுங்

கரிய மேனியன் மருதொடு பொருதவன்
     இனிய பாவல னுரையினி லொழுகிய
          கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு ...... மபிராமன்

கருணை நாரண னரபதி சுரபதி
     மருக கானக மதனிடை யுறைதரு
          கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முருகு உலாவிய குழலினும் நிழலினும் ... நறு மணம் வீசும்
கூந்தலிலும், அக் கூந்தலின் ஒளியிலும்,

அருவமாகிய இடையினு(ம்) நடையினு(ம்) ... கண்ணுக்குப்
புலப்படாத அளவுக்குச் சிறுத்திருந்த இடையிலும், நடை அழகிலும்,

முளரி போலு(ம்) நல் விழியினு(ம்) மொழியினு(ம்) ... தாமரை
போன்ற அழகிய கண்ணிலும், பேச்சிலும்,

மட மாதர் முனிவிலா நகை வலையினு(ம்) நிலையினு(ம்) ...
இளம் பெண்களின் கோபக்குறி இல்லாத புன்னகையாகிய வலையிலும்,
அதன் (வசீகரத்) ை தன்மையிலும்,

இறுக வார் இடு மலை எனும் முலையினு(ம்) ... அழுத்தமாக
கச்சு அணிந்த மலை போன்ற மார்பிலும்,

முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி ... முடிவே
இல்லாததும், ஒப்பற்ற கொடிய விஷம் கொல்லுவது போன்ற
தன்மையதான மோகத்தைக் கொண்டவனாகி,

நரகிலே விழும் அவலனை அசடனை ... நரகத்தில் விழும் வீணனும்
முட்டாளுமான என்னை,

வழிபடாத ஒர் திருடனை மருடனை ... ஒரு நல்வழிக்கும் வராத ஓர்
திருடனும், மயக்கத்தில் இருப்பவனுமான என்னை,

நலம் இலா அக கபடனை விகடனை வினையேனை ... நன்மை
நினைவே இல்லாத உள்ளக் கபடனும், செருக்கு உள்ளவனும், தீ
வினைக்கு ஈடானவனுமான என்னை,

நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய
மறவனை இறவனை
... நடு நிலைமையே இல்லாது வஞ்சகமே பூண்டு,
தடை வார்த்தைகளைப் பேசுவதிலேயே முழுகிய கொடியோனும், இறந்து
ஒழிதற்கே பிறந்தவனுமான என்னை,

நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே ... தாமரை
போன்ற உனது திருவடிகளை அடையச் செய்வதற்கு ஓர் உபதேசத்தை
அருள்வாயாக.

வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் ...
கோடுகளைக் கொண்ட (காளிங்கன் என்னும்) பாம்பின் முடி மீது
நடனம் செய்யும் பரத நாட்டியத்தில் வல்ல மாயவன்,

எழு புவி அளவிடு வரதன் மாதவன் ... ஏழு உலகங்களையும்
பாதத்தால் அளந்தவன், வரமளிப்பவன், மாதவன்,

இரணியன் உடல் இரு பிளவாக வகிரும் மால் அரி
திகிரியன்
... இரணியனுடைய உடலை இரண்டு பிளவாகும்படி
நகத்தால் கீறிய திருமால், அரி, சக்கரம் ஏந்தியவன்,

அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன் மகுடம்
ஆனவை ஒரு பதும் விழ ஒரு கணை ஏவும் கரிய மேனியன்
...
அலை வீசுகின்றதும் ஒலிப்பதுமான கடல் முறையிடவும், அரக்கனாகிய
இராவணனுடைய மகுடம் அணிந்த தலைகள் பத்தும் அறுபட்டு
விழும்படி, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய கரிய உடல் கொண்டவன்,

மருதொடு பொருதவன் இனிய பாவலன் உரையினில் ஒழுகிய
கடவுள்
... மருத மரங்களைச் சாடித் தள்ளியவன், இனிமை வாய்ந்த
புலவனாகிய (திருமழிசை ஆழ்வாரின்) சொல்லுக்கு இணங்கி அதன்
படி நடந்த கடவுள்*,

வேய் இசை கொ(ண்)டு நிரை பரவிடும் அபிராமன் ...
புல்லாங்குழலின் இன்னிசையால் பசுக் கூட்டத்தைப் பாதுகாத்த
பேரழகன்,

கருணை நாரணன் நர பதி சுர பதி மருக ... கருணை நிறைந்த
நாராயண மூர்த்தி, அருச்சுனனுக்குத் தலைவன், தேவர்களின்
தலைவன் ஆகிய திருமாலுக்கு மருகனே,

கானகம் அதன் இடை உறை தரு கரிய வேடுவர் சிறுமியொடு
உருகிய பெருமாளே.
... காட்டில் குடியிருந்த கருநிறங் கொண்ட
வேடர்களின் சிறுமியாகிய வள்ளிக்காக மனம் உருகிய பெருமாளே.


* திருமால் சென்றது:

திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்ணனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள்
ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.54  pg 3.55  pg 3.56  pg 3.57 
 WIKI_urai Song number: 1012 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1009 - murugu ulAviya kuzhal (common)

muruku lAviya kuzhalinu nizhalinum
     aruva mAkiya idaiyinu nadaiyinu
          muLari pOlunal vizhiyinu mozhiyinu ...... madamAthar

munivi lAnakai valaiyinu nilaiyinum
     iRuka vAridu malaiyenu mulaiyinu
          mudivi lAthathor koduvida maduvitha ...... mayalAki

naraki lEvizhu mavalanai yasadanai
     vazhipa dAthavor thirudanai marudanai
          nalami lAvaka kapadanai vikadanai ...... vinaiyEnai

naduvi lAthana padiRuko LidaRuso
     lathanil mUzhkiya maRavanai yiRavanai
          naLina mArpatha mathupeRa oruvazhi ...... yaruLvAyE

variya rAvinin mudimisai nadamidu
     paratha mAyava nezhupuvi yaLavidu
          varathan mAdhava niraNiya nudaliru ...... piLavAka

vakiru mAlari thikiriya nalaiyeRi
     thamara vArithi muRaiyida nisisaran
          makuda mAnavai yorupathum vizhavoru ...... kaNaiyEvum

kariya mEniyan maruthodu poruthavan
     iniya pAvala nuraiyini lozhukiya
          kadavuL vEyisai kodunirai paravidu ...... mapirAman

karuNai nAraNa narapathi surapathi
     maruka kAnaka mathanidai yuRaitharu
          kariya vEduvar siRumiyo durukiya ...... perumALE.

......... Meaning .........

muruku ulAviya kuzhalinum nizhalinum: In their fragrant hair, in its brightness,

aruvamAkiya idaiyinu(m) nadaiyinu(m): in their slender waist that is hardly noticeable, in their gait,

muLari pOlu(m) nal vizhiyinu(m) mozhiyinu(m): in their lotus-like eyes, in their speech,

mada mAthar munivilA nakai valaiyinu(m) nilaiyinu(m): in the net of the smile of these young women showing no sign of anger, in its enchanting nature,

iRuka vAr idu malai enum mulaiyinu(m): and in their mountain-like bosom with tight-fitting blouse,

mudivilAthathu or kodu vidam adu vitha mayalAki: I became obsessed with endless passion that could be compared to a unique lethal poison;

narakilE vizhum avalanai asadanai: I am a total waste, destined to go to hell; I am a fool;

vazhipadAtha or thirudanai marudanai: I am an incorrigible thief; I remain in a state of delusion;

nalam ilA aka kapadanai vikadanai vinaiyEnai: I have a venomous mind without any good thinking; I am an arrogant one and a victim of my past bad deeds;

naduvilAthana padiRu koL idaRu sol athanil mUzhkiya maRavanai iRavanai: I am a wicked person, ever treacherous, without a sense of justice and indulging in negative talk; I am born to decay and die;

naLinam Ar patham athu peRa oru vazhi aruLvAyE: (despite all my shortcomings,) kindly teach me a lesson that would enable me to attain Your lotus feet!

vari arAvinin mudi misai nadam idu paratha mAyavan: Upon the head of the striped serpent (KALingan) this Mystic One danced showing His expertise in Bharatha NAttiyam;

ezhu puvi aLavidu varathan mAdhavan: He measured the seven worlds with His foot; He is the grantor of boons; He has performed great penances;

iraNiyan udal iru piLavAka vakirum mAl ari thikiriyan: He is Lord VishNu who severed the body of HiraNyan into two pieces using His nails; He is Hari; He holds the disc in His hand;

alai eRi thamara vArithi muRai ida nisisaran makudam Anavai oru pathum vizha oru kaNai Evum kariya mEniyan: As the wavy and roaring seas appealed, He, with a dark complexion, severed and knocked down the ten crowned heads of the demon, RAvaNan, with His matchless arrow;

maruthodu poruthavan iniya pAvalan uraiyinil ozhukiya kadavuL: He felled the marutha trees; He is the Deity who listened to the great poet (Thirumazhisai AzhvAr) and followed him in implicit obedience to his word*;

vEy isai ko(N)du nirai paravidum apirAman: with the music from His flute, this most handsome One protected the herds of cows;

karuNai nAraNan nara pathi sura pathi maruka: He is the compassionate Lord NArAyaNan, Master of Arjunan and the leader of all celestials; and You are the nephew of that Lord VishNu!

kAnakam athan idai uRai tharu kariya vEduvar siRumiyodu urukiya perumALE.: Your mind melted for VaLLi, the daughter of the dark hunters who lived in the forest, Oh Great One!


* Once the deity in KAnchipuram, Lord VaradarAjar - an aspect of VishNu -, decided to leave town and go after the banished devotee, KaNikaNdan, disciple of the celebrated Tamil poet-cum-devotee, Thirumazhisai AzhvAr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1009 murugu ulAviya kuzhal - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]