திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1008 இலகு வேலெனு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1008 ilaguvElenu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன தனன தானன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... இலகு வேலெனு மிருவினை விழிகளும் எழுதொ ணாதெனு மிருதன கிரிகளும் இசையி னால்வசை பொசிதரு மொழிகளு ...... மெதிர்வேகொண் டெதிரி லாவதி பலமுடை யிளைஞரெ னினிய மாவினை யிருளெனும் வலைகொடு இடைவி டாதெறு நடுவனு மெனவளை ...... மடவார்தம் கலவி மால்கொடு கலைகளு மறிவொடு கருதொ ணாதென முனிவுற மருள்கொடு கரையி லாவிதி யெனுமொரு கடலிடை ...... கவிழாதே கருணை வானவர் தொழுதெழு மயிலுறை குமர கானவர் சிறுமியொ டுருகிய கமல தாளிணை கனவிலு நினைவுற ...... அருள்தாராய் பலகை யோடொரு பதுசிர மறஎறி பகழி யானர வணைமிசை துயில்தரு பரமன் மால்படி யளவிடு மரிதிரு ...... மருகோனே பழுதி லாமன முடையவர் மலர்கொடு பரவ மால்விடை மிசையுறை பவரொடு பரம ஞானமு மிதுவென வுரைசெய்த ...... பெரியோனே அலகை காளிகள் நடமிட அலைகட லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை அசுரர் மார்பக மளறது படவிடு ...... மயில்வேலா அரிய பாவல ருரைசெய அருள்புரி முருக ஆறிரு புயஇய லிசையுடன் அழகு மாண்மையு மிலகிய சரவண ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இலகு வேல் எனும் இரு வினை விழிகளும் எழுத ஒணாது எனும் இரு தன கிரிகளும் ... விளங்குகின்ற வேல் போன்றதும், பெரிய வினைகள் விளைவதற்குக் காரணமானதுமான கண்களும், படத்தில் எழுதிக்காட்ட முடியாது என்னும்படி உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களும், இசையினால் வசை பொசி தரு மொழிகளும் எதிர்வே கொண்டு எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு இடை விடா தெறு நடுவனும் என வளை மடவார் தம் ... ஓசையுடனே பேசப்படுகின்ற பழிப்புச் சொற்கள் வெளி வரும் பேச்சுக்களும், இவைகளின் சந்திப்பால் இணையற்ற மிக்க ஆற்றல் உடைய இளைஞர்கள் என்கின்ற இன்பம் கொண்ட விலங்குகளை அவர்களுடைய அஞ்ஞானம் என்ற வலையில் மாட்டி ஓய்வில்லாமல் கொல்லுகின்ற யமன் என்று சொல்லும்படி வளையல்கள் அணிந்த விலைமாதர்களின் கலவி மால் கொடு கலைகளும் அறிவொடு கருத ஒணாது என முனிவுற மருள் கொடு கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே ... புணர்ச்சியில் ஆசை கொண்டு, கலை நூல்களை அறிவு கொண்டு நினைக்கவும் முடியாது என்னும்படியாக வெறுத்து விலக்க, மயக்க உணர்ச்சியால் கரை என்பதே இல்லாத விதி என்கின்ற ஒரு கடல் நடுவில் நான் கவிழ்ந்து போகாமல், கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர கானவர் சிறுமியொடு உருகிய கமல தாள் இணை கனவிலும் நினைவு உற அருள் தாராய் ... கருணை மிகுந்த தேவர்கள் வணங்கி எழும் மயிலை வாகனமாகக் கொண்ட குமரனே, வேட்டுவச் சிறுமியாகிய வள்ளியின் பொருட்டு மனம் உருகி நடந்த பாத கமலத்தை உடையவனே, உனது திருவடி இணைகளை கனவிலும் நான் நினைக்கும்படி அருள் புரிவாயாக. பல கையோடு ஒரு ப(த்)து சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு பரமன் மால் படி அளவிடும் அரி திரு மருகோனே ... (ராவணனின்) பல கைகளுடன் ஒப்பற்ற பத்துத் தலைகளும் அற்று விழும்படி செலுத்திய அம்பை உடையவன், (ஆதிசேஷனாம்) பாம்பணையின் மேல் துயிலும் மேலோனாகிய மாயோன், பூமியை அளந்த திருமாலின் மருகனே, பழுது இலா மனம் உடையவர் மலர் கொடு பரவ மால் விடை மிசை உறைபவரொடு பரம ஞானமும் இது என உரை செய்த பெரியோனே ... குற்றமில்லாத மனத்தை உடைய அடியார்கள் மலர்களைக் கொண்டு போற்ற, பெருமை வாய்ந்த ரிஷப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு மேலான ஞானப் பொருள் இதுதான் என்று உபதேசம் செய்த பெரியோனே, அலகை காளிகள் நடம் இட அலை கடல் அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை அசுரர் மார்பகம் அளறது பட விடும் அயில் வேலா ... பேய்களும் காளிகளும் மகிழ்ந்து கூத்தாட, அலை வீசும் கடலில் நீண்ட குடல்களும், மாமிச மலைகளும், பிண மலைகளும், அசுரர்களின் மார்பிடங்களும் ரத்தச் சேறுபட்டு அழியும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே, அரிய பாவலர் உரை செய அருள் புரி முருக ஆறிரு புய இயல் இசையுடன் அழகும் ஆண்மையும் இலகிய சரவண பெருமாளே. ... அருமை வாய்ந்த புலவரான நக்கீரர் உன்னைப் பாடி (திருமுருகாற்றுப்படையால்) புகழ அருள் புரிந்த முருகனே, பன்னிரண்டு திருப்புயங்களை இயற்றமிழும், இசைத் தமிழும், அழகும், ஆண்மையும் அலங்கரிக்க விளங்குகின்றவனே, சரவண மடுவில் தோன்றிய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.52 pg 3.53 pg 3.54 pg 3.55 WIKI_urai Song number: 1011 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1008 - ilagu vElenu (common) ilaku vElenu miruvinai vizhikaLum ezhutho NAthenu miruthana kirikaLum isaiyi nAlvasai positharu mozhikaLu ...... methirvEkoN dethiri lAvathi palamudai yiLainjare niniya mAvinai yiruLenum valaikodu idaivi dAtheRu naduvanu menavaLai ...... madavArtham kalavi mAlkodu kalaikaLu maRivodu karutho NAthena munivuRa maruLkodu karaiyi lAvithi yenumoru kadalidai ...... kavizhAthE karuNai vAnavar thozhuthezhu mayiluRai kumara kAnavar siRumiyo durukiya kamala thALiNai kanavilu ninaivuRa ...... aruLthArAy palakai yOdoru pathusira maRaeRi pakazhi yAnara vaNaimisai thuyiltharu paraman mAlpadi yaLavidu marithiru ...... marukOnE pazhuthi lAmana mudaiyavar malarkodu parava mAlvidai misaiyuRai pavarodu parama njAnamu mithuvena vuraiseytha ...... periyOnE alakai kALikaL nadamida alaikada lathanil neeLkudal niNamalai piNamalai asurar mArpaka maLaRathu padavidu ...... mayilvElA ariya pAvala ruraiseya aruLpuri muruka ARiru puyaiya lisaiyudan azhaku mANmaiyu milakiya saravaNa ...... perumALE. ......... Meaning ......... ilaku vEl enum iru vinai vizhikaLum ezhutha oNAthu enum iru thana kirikaLum: Their eyes are looking like prominent spear and are the cause of many consequences; their two mountain-like breasts cannot be adequately captured in a painting; isaiyinAl vasai posi tharu mozhikaLum ethirvE koNdu ethir ilA athi palam udai iLainjar en iniya mA vinai iruL enum valai kodu idai vidA theRu naduvanum ena vaLai madavAr tham: their loud utterances are full of derisive and foul words; because of such a combination, many proficient young men with matchless capabilities are shackled like passionate animals and are ensnared in a net of ignorance; like the tireless God of Death (Yaman) who keeps on slaughtering them, the bangles of these whores rattle; kalavi mAl kodu kalaikaLum aRivodu karutha oNAthu ena munivuRa maruL kodu karaiyilA vithi enum oru kadal idai kavizhAthE: being obsessed with making love to these whores, I have never been able to apply my mind to classic texts of arts which I have shunned with abhorrence; without letting me drown in utter delusion in the mid-sea of fate without boundary, karuNai vAnavar thozhuthu ezhu mayil uRai kumara kAnavar siRumiyodu urukiya kamala thAL iNai kanavilum ninaivu uRa aruL thArAy: Oh KumarA, mounting the Peacock, that is worshipped by celestials full of compassion, and having the lotus feet that trod the path with a melting heart for the sake of VaLLi, the damsel of the hunters, kindly make me meditate upon Your hallowed feet even in my dream! pala kaiyOdu oru pa(thf)thu siram aRa eRi pakazhiyAn aravu aNai misai thuyil tharu paraman mAl padi aLavidum ari thiru marukOnE: Severing his many hands and ten matchless heads, He knocked down the demon RAvaNan by wielding a unique arrow; He slumbers on the serpent-bed (AdhisEshan); He is the great Mystic who measured the earth with His foot; and You are the nephew of that Lord VishNu! pazhuthu ilA manam udaiyavar malar kodu parava mAl vidai misai uRaipavarodu parama njAnamum ithu ena urai seytha periyOnE: As the devotees with flawless mind worship Him with flowers, He mounts the famous bull, Rishabam (Nandi); to that Lord SivA You preached pointing out the Supreme Principle of Wisdom, Oh Wise One! alakai kALikaL nadam ida alai kadal athanil neeL kudal niNa malai piNa malai asurar mArpakam aLaRathu pada vidum ayil vElA: As the fiends and KALis danced about in glee, Your sharp spear piled in the wavy sea long intestines and mountains of flesh and corpses, while the chests of the demons were destroyed in the mire of muddy blood, Oh Lord! ariya pAvalar urai seya aruL puri muruka ARiru puya iyal isaiyudan azhakum ANmaiyum ilakiya saravaNa perumALE.: The rare poet Nakkeerar praised You by singing (the famous composition ThirumurugAtRuppadai) and You blessed Him, Oh MurugA! You have twelve broad hallowed shoulders adorned by chaste literary and musical Tamil, along with handsomeness and valour, Oh Lord! You were born in the pond of SaravaNa, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |