திருப்புகழ் 995 ஆவி காப்பது  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 995 AvikAppadhu  (common)
Thiruppugazh - 995 AvikAppadhu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
     தான தாத்தன தாத்தன ...... தனதானா

......... பாடல் .........

ஆவி காப்பது மேற்பத மாத லாற்புரு டார்த்தமி
     தாமெ னாப்பர மார்த்தம ...... துணராதே

ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட வீட்டொட
     நேக நாட்டொடு காட்டொடு ...... தடுமாறிப்

பூவை மார்க்குரு காப்புதி தான கூத்தொடு பாட்டொடு
     பூவி னாற்றம றாத்தன ...... கிரிதோயும்

போக போக்யக லாத்தொடு வாழ்ப ராக்கொடி ராப்பகல்
     போது போக்கியெ னாக்கையை ...... விடலாமோ

தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவ னார்க்கொரு சாக்ரஅ
     தீத தீக்ஷைப ரீக்ஷைக ...... ளறவோதுந்

தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண மோக்ஷதி
     யாக ராத்திகழ் கார்த்திகை ...... பெறுவாழ்வே

மேவி னார்க்கருள் தேக்குது வாத சாக்ஷ ஷடாக்ஷர
     மேரு வீழ்த்தப ராக்ரம ...... வடிவேலா

வீர ராக்கத ரார்ப்பெழ வேத தாக்ஷக னாக்கெட
     வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆவி காப்பது மேற்பதம் ஆதலால் ... உயிரைக் காத்து உய்விப்பது
மேலான தகுதிவாய்ந்த செயலாதலால்

புருடார்த்தமிதாமெனா ... அறம், பொருள், இன்பம், வீடு என்ற
புருஷார்த்தங்கள் இவை என உணர்ந்து,

பரமார்த்தமது உணராதே ... மேலான உண்மைப் பொருளைத்
தெரிந்து கொள்ளாமல்,

ஆனை மேற் பரி மேற் பல சேனை போற்றிட ... யானையின்
மீதும், குதிரையின் மீதும், பல படைகள் புகழ்ந்திட

வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி ...
வீட்டிலும், பல நாட்டிலும், காட்டிலும் அலைந்து தடுமாற்றம் உற்று,

பூவைமார்க்கு உருகாப் புதிதான கூத்தொடு பாட்டொடு ...
மாதர் மயக்கில் உருகி, புதுப்புது நடனங்களுடனும், பாட்டுக்களுடனும்,

பூவினாற்றம் அறாத்தன கிரிதோயும் ... மலரின் நறுமணம்
நீங்காத மார்பகங்களாகிய மலைகளில் தோய்கின்ற

போக போக்ய கலாத்தொடு வாழ்பராக்கொடு ... சுகம்
அனுபவிப்பதிலும், ஊடல் செய்வதிலுமான வாழ்க்கையின்
விளையாடல்களிலே

இராப்பகல் போது போக்கி யென் ஆக்கையை விடலாமோ ...
இரவும் பகலுமாக வீணாகப் பொழுதைப் போக்கி எனது உடலை
விட்டுப் போதல் நன்றாகுமோ?

தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவனார்க்கு ... தேவி பார்வதி
இணைந்த மேலான பரிசுத்த மூர்த்தியாம் சிவபிரானுக்கு

ஒரு சாக்ரஅதீத தீக்ஷைப ரீக்ஷைகள் அறவோதும் தேவ ...
ஒப்பற்ற ஆத்ம தத்துவங்களுக்கு மேற்பட்டதான உபதேசங்களையும்,
பிரணவ விளக்கங்களையும் முழுமையாக ஓதின தேவனே,

பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண ... ஞான சூரியனே, நால்வகைக்
கவிகளையும்* (திருஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்துப்) பாடி
அருளிய அழகனே,

மோக்ஷதியாக ... மோக்ஷ நிலையாகிய விடுதலையை அளிக்கும்
தியாக மூர்த்தியே,

ராத்திகழ் கார்த்திகை பெறுவாழ்வே ... இரவிலே சுடர்விடும்
(நக்ஷத்திரங்களாகிய) கார்த்திகைப் பெண்கள் பெற்ற பெருஞ்செல்வமே,

மேவினார்க்கருள் தேக்கு துவாதச அக்ஷ ஷடாக்ஷர ... விரும்பி
உன்னை அடைந்தவர்களுக்கு அருளை அள்ளி அள்ளி வழங்கும்
பன்னிரு கண்களை உடையவனே, சரவணபவ என்ற ஆறெழுத்துக்கு
உரிய மூர்த்தியே,

மேரு வீழ்த்தப ராக்ரம வடிவேலா ... கிரெளஞ்ச மலையை வீழ்த்திய
பராக்கிரம சாலியே, கூரிய வேலாயுதனே,

வீர ராக்கதர் ஆர்ப்பெழ வேத தாக்ஷகன் நாக்கெட ... வீரனே,
அசுரர்கள் அலறும் கூச்சல் எழவும், வேதத்தலைவனாம் பிரமன்
(பிரணவத்துக்குப் பொருள் கூறத்தெரியாமல்) நாவடங்கிப் போகவும்,

வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே. ... கடல் ஓலமிட்டுக்
கலங்கவும் வேலை விரைவில் செலுத்திய பெருமாளே.


* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:

ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,
மதுரம் - இனிமை வாய்ந்தது,
சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,
வித்தாரம் - வர்ணனை மிக்கது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.18  pg 3.19  pg 3.20  pg 3.21 
 WIKI_urai Song number: 998 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 995 - Avi kAppadhu (common)

Avi kAppadhu mERpadha mAdha lARpuru dArththami
     dhAme nAppara mArththamadh ...... uNarAdhE

Anai mERpari mERpala sEnai pOtrida veettoda
     nEga nAttodu kAttodu ...... thadumARi

pUvai mArk kurugAp pudhi dhAna kUththodu pAttodu
     pUvi nAtram aRAththana ...... girithOyum

bOga bOgyaka lAththodu vAzhpa rAkkodi rAppagal
     pOdhu pOkki enAkkayai ...... vidalAmO

dhEvi pArppathi sErppara pAva nArkkoru jAgra
     atheetha dheekshai pareekshaigaL ...... aRavOdhum

dhEva bARkara nARkavi pAdu lAkshaNa mOkshathi
     yAga rAththigazh kArththikai ...... peRuvAzhvE

mEvi nArkkaruL thEkku dhuvAdha sAksha shadAkshara
     mEru veezhththa parAkrama ...... vadivElA

veera rAkkadhar Arppezha vEdha dhAkshaka nAkkeda
     vElai kUppida veekkiya ...... perumALE.

......... Meaning .........

Avi kAppadhu mERpadha mAdhalAR: As safeguarding the soul in this life is the most worthwhile thing to do,

purudArththami dhAme nAppara mArththamadh uNarAdhE: I ought to have known the fundamental tenets (namely, righteousness, material things, pleasure and liberation); without knowing them or the most important principle in life,

Anai mERpari mERpala sEnai pOtrida veettodu anEga nAttodu kAttodu thadumARi: I enjoyed my dominant rides on elephants, and horses much to the admiration of many soldiers, and roamed around aimlessly away from my home in many countries and forests;

pUvai mArk kurugAp pudhi dhAna kUththodu pAttodu: I indulged lavishly in women coming up with new songs and dances,

pUvi nAtram aRAththana girithOyum: immersing myself in their mountain-like bosoms where flowery scent lingered.

bOga bOgyaka lAththodu vAzhpa rAkkodi rAppagal: In carnal pleasure with women and in playful dissonance with them, I spent days and nights.

pOdhu pOkki enAkkayai vidalAmO: Wasting time like this, should I just give up my body in vain?

dhEvi pArppathi sErppara pAva nArkku: He is the consort of DEvi PArvathi; He is the supreme form of purity;

oru jAgra atheetha dheekshai pareekshaigaL aRavOdhum dhEva: to that SivA You exhaustively preached the significance of PraNava and the truth that is beyond the reach of all tenets of the soul, Oh Lord!

bARkara nARkavi pAdu lAkshaNa: You are the Sun of Wisdom! Oh Handsome One, You came (as ThirugnAna Sambandhar) to sing four different varieties* of poetry!

mOkshathiyAga: You are the deliverer of Eternal Bliss! You are the supreme sacrificer!

rAththigazh kArththikai peRuvAzhvE: You are the great treasure brought forth by the six Karththigai Women who appear as stars in the night!

mEvi nArkkaruL thEkku dhuvAdha sAksha: Upon those devotees who prostrate at Your feet, Your twelve eyes bestow abundant grace!

shadAkshara: You are the Lord represented by the six holy letters (SaravaNabava)!

mEru veezhththa parAkrama vadivElA: You hold the sharp spear that shattered Mount Krouncha!

veera rAkkadhar Arppezha: Oh valorous One! Making the demons scream in fear,

vEdha dhAkshaka nAkkeda: rendering the Master of VEdAs, BrahmA, speechless (due to His inability to interpret the PraNava ManthrA),

vElai kUppida veekkiya perumALE.: and stirring the oceans into a roaring screech, You wielded the spear swiftly, Oh Great One!


* The four varieties of Tamil poetry are:

Asu (alliteration)
Mathuram (sweetness)
Chiththiram (artful presentation) and
ViththAram (description).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 995 Avi kAppadhu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]