திருப்புகழ் 994 வேத வித்தகா  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 994 vEdhaviththagA  (common)
Thiruppugazh - 994 vEdhaviththagA - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்தனா தானா தனாதன
     தான தத்தனா தானா தனாதன
          தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான

......... பாடல் .........

வேத வித்தகா சாமீ நமோநம
     வேல்மி குத்தமா சூரா நமோநம
          வீம சக்ரயூ காளா நமோநம ...... விந்துநாத

வீர பத்மசீர் பாதா நமோநம
     நீல மிக்ககூ தாளா நமோநம
          மேக மொத்தமா யூரா நமோநம ...... விண்டிடாத

போத மொத்தபேர் போதா நமோநம
     பூத மற்றுமே யானாய் நமோநம
          பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ...... துங்கமேவும்

பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம
     ஆறி ரட்டிநீள் தோளா நமோநம
          பூஷ ணத்துமா மார்பா நமோநம ...... புண்டரீக

மீதி ருக்குநா மாதோடு சேயிதழ்
     மீதி ருக்குமே ரார்மாபு லோமசை
          வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் ...... நின்றுநாளும்

வேத வித்தகீ வீமா விராகிணி
     வீறு மிக்கமா வீணா கரேமக
          மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ ...... யங்கராகீ

ஆதி சத்திசா மாதேவி பார்வதி
     நீலி துத்தியார் நீணாக பூஷணி
          ஆயி நித்தியே கோடீர மாதவி ...... யென்றுதாழும்

ஆர்யை பெற்றசீ ராளா நமோநம
     சூரை யட்டுநீள் பேரா நமோநம
          ஆர ணத்தினார் வாழ்வே நமோநம ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

வேத வித்தகா சாமீ நமோநம ... வேதங்கள் உணர்ந்த
பேரறிவாளனே, ஸ்வாமியே, போற்றி, போற்றி

வேல் மிகுத்த மாசூரா நமோநம ... வேலினைச் சிறப்பாக ஏந்தும்
மஹா சூரனே, போற்றி, போற்றி

வீம சக்ரயூ காளா நமோநம ... அச்சம் தரும் சக்ரவியூகத்தை
போரிலே எடுப்பவனே, போற்றி, போற்றி

விந்துநாத ... ஆவுடையாகவும் லிங்கமாகவும் சிவசக்தி உருவமாக
விளங்குபவனே,

வீர பத்மசீர் பாதா நமோநம ... வீரனே, தாமரை போன்ற அழகிய
திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி

நீல மிக்ககூ தாளா நமோநம ... நீல நிறத்தில் மிகுந்த
கூதளப்பூமாலைகள் அணிந்தவனே, போற்றி, போற்றி

மேகம் ஒத்த மாயூரா நமோநம ... மேக நிறம் கொண்டுள்ள மயில்
வாகனனே, போற்றி, போற்றி

விண்டிடாத போதம் ஒத்தபேர் போதா நமோநம ... சொல்வதற்கு
அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானப் பொருளே, போற்றி,
போற்றி

பூத மற்றுமே யானாய் நமோநம ... பஞ்ச பூதங்களாயும் பிறவாயும்
ஆனவனே, போற்றி, போற்றி

பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ... பரிபூரணப் பொருளாக
வாழ்பவனே, போற்றி, போற்றி

துங்கமேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம ... பரிசுத்தமான
மலைகளில் எல்லாம் வாழ்பவனே, போற்றி, போற்றி

ஆறி ரட்டிநீள் தோளா நமோநம ... பன்னிரண்டு நீண்ட
புஜங்களை உடையவனே, போற்றி, போற்றி

பூஷணத்துமா மார்பா நமோநம ... ஆபரணங்களை அணிந்த
அழகிய மார்பனே, போற்றி, போற்றி

புண்டரீக மீதிருக்கு நா மாதோடு ... வெள்ளைத் தாமரையின்
மீது வீற்றிருக்கும் சரஸ்வதியோடு,

சேயிதழ் மீதிருக்கும் ஏரார் மா ... செந்தாமரை மீது அமர்ந்த
அழகு நிறைந்த லக்ஷ்மியும்,

புலோமசை ... இந்திராணியும்,

வீர மிக்கஏழ் பேர்மாதர் ... வீரம் மிகுந்த ப்த மாதாக்களும்,*

நீடினம் நின்றுநாளும் ... மற்றுமுள்ள எல்லா தெய்வ மகளிரும் எதிரே
நின்று நாள்தோறும்

வேத வித்தகீ வீமா ... வேத ஞானியே, பயங்கரியே,

விராகிணி ... பற்று அற்றவளே,

வீறுமிக்க மா வீணா கரே ... சிறப்புமிக்க அழகிய (விபஞ்சி என்ற)
வீணையை கையில் ஏந்தியவளே,

மகமேரு வுற்றுவாழ் சீரே ... மகாமேரு மலையில் தங்கி வாழும்
சிறப்பை உடையவளே,

சிவாதரெ ... சிவனுடைய உடலில் பங்கு கொண்டவளே,

அங்கராகீ ... உடம்பெல்லாம் பரிமள கந்தங்களைப் பூசியவளே,

ஆதி சத்தி சாமாதேவி பார்வதி ... ஆதிசக்தியே, சாமவேதம்
போற்றும் தேவியே, பார்வதியே,

நீலி ... நீல நிறத்தவளே,

துத்தியார் நீள் நாக பூஷணி ... புள்ளிகள் நிறைந்த நீண்ட
நாகங்களை ஆபரணமாக அணிந்தவளே,

ஆயி நித்தியே கோடீர மாதவி ... அன்னையே, என்றும்
இருப்பவளே, சடையுள்ள துர்கா தேவி,

என்றுதாழும் ... என்றெல்லாம் துதி செய்து வணங்குகின்ற

ஆர்யை பெற்ற சீராளா நமோநம ... மஹாதேவி பெற்ற சீராளனே,
போற்றி, போற்றி

சூரை யட்டுநீள் பேரா நமோநம ... சூரனை வதைத்துப் பேரும்
புகழும் பெற்றவனே, போற்றி, போற்றி

ஆரணத்தினார் வாழ்வே நமோநம ... வேதம் ஓதுவோர்களின்
செல்வமே, போற்றி, போற்றி

தம்பிரானே. ... அனைவருக்கும் பெருமாளாக விளங்குபவனே.


** சப்த மாதாக்கள்:

அபிராமி, மகேசுவரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.16  pg 3.17  pg 3.18  pg 3.19 
 WIKI_urai Song number: 997 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 994 - vEdha viththagA (common - thuthippAdal)

vEdha viththagA sAmee namO nama
     vEl miguththa mA sUrA namO nama
          veema chakra yUgALA namO nama ...... vindhu nAdha

veera padhma seer pAdhA namO nama
     neela mikka kUthALA namO nama
          mEga moththa mAyUrA namO nama ...... viNdidAdha

bOdha moththa pEr bOdhA namO nama
     bUtha matrum EyAnAy namO nama
          pUraNath uLE vAzhvAy namO nama ...... thunga mEvum

bUtha rath elAm vAzh vAy namO nama
     AR irattineeL thOLA namO nama
          bUsha Naththu mA mArbA namO nama ...... puNdareeka

meedh irukku nA mAdhOdu sEyidhazh
     meedh irukkum ErAr mA pulOmasai
          veera mikkka EzhpEr mAdhar needinam ...... nindru nALum

vEdha viththagee veemA virAgiNi
     veeRu mikka mA veeNA karE maha
          mEru utru vAzh seerE sivAdharE ...... angarAgee

Adhi saththi sAmA dhEvi pArvathi
     neeli thuththiyAr neeNAga bUshaNi
          Ayi niththiyE kOdeera mAdhavi ...... endru thAzhum

Aryai petra seerALA namO nama
     sUrai yattu neeL pErA namO nama
          AraNath thinAr vAzhvE namO nama ...... thambirAnE.

......... Meaning .........

vEdha viththagA sAmee namO nama: You are the greatest expert in all scriptures, My Lord,
     I bow to You, I bow to You.

vEl miguththa mA sUrA namO nama: You hold the spear grandly, Oh valorous One,
     I bow to You, I bow to You.

veema chakra yUgALA namO nama: Your strategy of attack in the battlefield is terrific,
     I bow to You, I bow to You.

vindhu nAdha: You are the combination of Shakthi (Vindhu) and SivA (NAtham),

veera padhma seer pAdhA namO nama: Oh Brave One, Your feet are just beautiful like lotus,
     I bow to You, I bow to You.

neela mikka kUthALA namO nama: You are adorned with plenty of violet flowers (kUthaLa flowers),
     I bow to You, I bow to You.

mEga moththa mAyUrA namO nama: Your peacock has the complexion of the clouds,
     I bow to You, I bow to You.

viNdidAdha bOdha moththa pEr bOdhA namO nama: You are the Knowledge of those who have reached the pinnacle of wisdom that can never be interpreted,
     I bow to You, I bow to You.

bUtha matrum EyAnAy namO nama: You are the five elements and all other things too,
     I bow to You, I bow to You.

pUraNath uLE vAzhvAy namO nama: You are inside everything that is absolute,
     I bow to You, I bow to You.

thunga mEvum bUtha rath elAm vAzh vAy namO nama: You have as abode all mountains that are pure,
     I bow to You, I bow to You.

AR irattineeL thOLA namO nama: You have twelve broad shoulders,
     I bow to You, I bow to You.

bUsha Naththu mA mArbA namO nama: Your chest is grand and bejewelled,
     I bow to You, I bow to You.

puNdareeka meedh irukku nA mAdhOdu: Along with Saraswathi, the Mother who sits on white lotus,

sEyidhazh meedh irukkum ErAr mA: the beautiful Mother Lakshmi, who sits on red lotus,

pulOmasai: pulOmasai (IndrANi, wife of IndrA),

veera mikkka EzhpEr mAdhar: the valorous seven mothers (Saptha MAthas),*

needinam nindru nALum: and similar Divine mothers stand together and pray daily (as follows);

vEdha viththagee veemA: "Oh, Expert in scriptures, You are a terrific Goddess;

virAgiNi: You are without any attachment;

veeRu mikka mA veeNA karE: You hold the famous Veena (Vipanchi Veena) in Your hand;

maha mEru utru vAzh seerE: You reside with grandeur in the Great KailAsh;

sivAdharE angarAgee: You occupy the left side of SivA; You wear fragrant scents on Your body;

Adhi saththi sAmA dhEvi pArvathi neeli: You are the prime Shakthi; You are the Goddess PArvathi, praised in Sama VEdha; You love violet flowers (NeelOthpala flowers);

thuththiyAr neeNAga bUshaNi: You wear as jewels long snakes with dotted designs;

Ayi niththiyE kOdeera mAdhavi: Mother, You are Eternal; and You are Durga with long tresses"

endru thAzhum Aryai petra seerALA namO nama: The Great Goddess thus worshipped delivered You as Her darling!
     I bow to You, I bow to You.

sUrai yattu neeL pErA namO nama: Your name and fame are due to Your slaying of the demon, SUran,
     I bow to You, I bow to You.

AraNath thinAr vAzhvE namO nama: You are the greatest wealth of all those who know the scriptures,
     I bow to You, I bow to You,

ThambirAnE.: Oh the Lord of all Lords!


* Saptha MAthAs (Seven Divine Mothers):

AbhirAmi, Maheswari, KaumAri, NArAyaNi, VArAhi, IndirANi and KALi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 994 vEdha viththagA - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]