திருப்புகழ் 974 மாலையில் வந்து  (இலஞ்சி)
Thiruppugazh 974 mAlaiyilvandhu  (ilanji)
Thiruppugazh - 974 mAlaiyilvandhu - ilanjiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனந்த தான தனந்த
     தனா தனந்த ...... தனதான

......... பாடல் .........

மாலையில் வந்து மாலை வழங்கு
     மாலை யநங்கன் ...... மலராலும்

வாடை யெழுந்து வாடை செறிந்து
     வாடை யெறிந்த ...... அனலாலுங்

கோல மழிந்து சால மெலிந்து
     கோமள வஞ்சி ...... தளராமுன்

கூடிய கொங்கை நீடிய அன்பு
     கூரவு மின்று ...... வரவேணும்

கால னடுங்க வேலது கொண்டு
     கானில் நடந்த ...... முருகோனே

கான மடந்தை நாண மொழிந்து
     காத லிரங்கு ...... குமரேசா

சோலை வளைந்து சாலி விளைந்து
     சூழு மிலஞ்சி ...... மகிழ்வோனே

சூரிய னஞ்ச வாரியில் வந்த
     சூரனை வென்ற ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாலையில் வந்து மாலை வழங்கு ... அந்திப் பொழுதில் வந்து காம
இச்சையைத் தருகின்ற

மாலை அனங்கன் மலராலும் ... (மகிழம் பூ) மாலையை அணிந்த
மன்மதன் எய்கின்ற மலர்ப் பாணங்களாலும்,

வாடை எழுந்து வாடை செறிந்து ... வாடைக் காற்று கிளம்பி,
(அதனுடன் கலந்து வரும் மலர்களின்) வாசனைகள் மிகுந்து

வாடை எறிந்த அனலாலும் ... வடவா முகாக்கினி போல வீசி எறியும்
நெருப்பாலும்,

கோலம் அழிந்து சால மெலிந்து ... தனது அழகு எல்லாம் அழிந்து,
மிகவும் மெலிந்து,

கோமள வஞ்சி தளரா முன் ... அந்த இளமை வாய்ந்த வஞ்சிக்கொடி
போன்ற பெண் சோர்வு அடைவதற்கு முன்பு,

கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவும் இன்று வரவேணும் ...
இளமை கூடிய மார்பு அன்பு மிக்கு விம்மும் படியாகவும் நீ இன்று வந்து
அருள வேண்டும்.

காலன் நடுங்க வேல் அது கொண்டு ... யமன் நடுங்கவும், கையிலே
வேலாயுதத்தைக் கொண்டு,

கானில் நடந்த முருகோனே ... (பொய்யாமொழிப் புலவர் வரும்)
காட்டில் (வேடனாய்) நடந்த முருகனே,*

கான மடந்தை நாண மொழிந்து ... வள்ளி மலைக் காட்டில் இருந்த
பெண்ணாகிய வள்ளி நாணும்படியாக அவளிடம் பேசி,

காதல் இரங்கு குமரேசா ... அவள்மீது உனக்கிருந்த காதலை
வெளிப்படுத்திய குமரேசனே,

சோலை வளைந்து சாலி விளைந்து சூழும் இலஞ்சி
மகிழ்வோனே
... சோலைகள் சுற்றியும் உள்ள, நெற்பயிர் உள்ள
வயல்கள் விளைந்து சூழ்ந்துள்ள, இலஞ்சி** என்னும் நகரில் (வீற்றிருந்து)
மகிழ்ச்சி கொண்டவனே,

சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே. ...
சூரியன் தான் உதிப்பது எப்படி என்று பயப்படும்படியாக, கடலில் நின்று
கொண்டிருந்த (மாமரமாகிய) சூரனை வென்ற பெருமாளே.


* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க,
அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக
வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.


** இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால
அருவிக்கு மிக அருகில் உள்ளது.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. மன்மதன், மலர்க் கணைகள், வடக்கே இருந்து வீசும்
வாடைக் காற்று - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1387  pg 2.1388  pg 2.1389  pg 2.1390 
 WIKI_urai Song number: 978 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Ilanji OthuvAr Siva Singara Velan
'இலஞ்சி ' ஓதுவார் திரு சிவா சிங்கார வேலன்

'Ilanji' Othuvar Thiru Siva Singara Velan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 974 - mAlaiyil vandhu (ilanji)

mAlaiyil vanthu mAlai vazhangu
     mAlai yanangan ...... malarAlum

vAdai yezhunthu vAdai seRinthu
     vAdai yeRintha ...... analAlum

kOla mazhinthu sAla melinthu
     kOmaLa vanji ...... thaLarAmun

kUdiya kongai neediya anpu
     kUravu minRu ...... varavENum

kAla nadunga vElathu koNdu
     kAnil nadantha ...... murukOnE

kAna madanthai nANa mozhinthu
     kAtha lirangu ...... kumarEsA

sOlai vaLainthu sAli viLainthu
     sUzhu milanji ...... makizhvOnE

cUriya nanja vAriyil vantha
     cUranai venRa ...... perumALE.

......... Meaning .........

mAlaiyil vanthu mAlai vazhangu mAlai anangan malarAlum: The well-garlanded Manmathan (God of Love) always comes out in the evening and shoots his flowery arrows that provoke extreme lust;

vAdai ezhunthu vAdai seRinthu vAdai eRintha analAlum: the cool northerly winds blow bringing along the fragrance of flowers which feels like the fiery blast from the North Pole at the end of the aeons (vadamukAgni);

kOlam azhinthu sAla melinthu kOmaLa vanji thaLarA mun: She has lost all her charm and grown weaker; before this young vanji (rattan reed) creeper-like damsel is further disillusioned,

kUdiya kongai neediya anpu kUravum inRu varavENum: You must come and bless her today making her young bosoms distend with love!

kAlan nadunga vEl athu koNdu kAnil nadantha murukOnE: Sending fear waves to Yaman (God of Death), You once walked through the forest (disguised like a hunter) with a spear held in Your hand (for the sake of Poet PoyyAmozhi)*, Oh MurugA!

kAna madanthai nANa mozhinthu: You went to the forest of VaLLimali to see VaLLi, the damsel of the hunters, and spoke to her making her blush

kAthal irangu kumarEsA: and expressed Your deep love for her, Oh Lord Kumara!

sOlai vaLainthu sAli viLainthu sUzhum ilanji makizhvOnE: This town, Ilanji**, is famous for the surrounding groves and fertile paddy fields all around; it is Your happy abode, Oh Lord!

cUriyan anja vAriyil vantha cUranai venRa perumALE.: The sun was scared to rise from the sea where the demon SUran hid, disguised like a mango tree; You conquered that SUran, Oh Great One!


* PoyyAmozhi was a poet bent upon praising only SivA and was totally against Murugan. In an interesting episode, Murugan came in the disguise of a hunter with a spear, encountered the poet in a forest, challenged him for a debate and eventually won him to His side.


** Ilanji is 4 miles away from ThenkAsi Railway Station. It is situated very close to Courtalam falls.


This song has been written in the Nayaka-Nayaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The Love God, the flowery arrows and the northerly breeze are some of the sources which aggravate the agony of separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 974 mAlaiyil vandhu - ilanji

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]