திருப்புகழ் 973 சுரும்பு அணி  (இலஞ்சி)
Thiruppugazh 973 surumbuaNi  (ilanji)
Thiruppugazh - 973 surumbuaNi - ilanjiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தன தந்த தனந்தன தந்த
     தனந்தன தந்த ...... தனதானா

......... பாடல் .........

சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
     துரந்தெறி கின்ற ...... விழிவேலால்

சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு
     சுருண்டும யங்கி ...... மடவார்தோள்

விரும்பிவ ரம்பு கடந்துந டந்து
     மெலிந்துத ளர்ந்து ...... மடியாதே

விளங்குக டம்பு விழைந்தணி தண்டை
     விதங்கொள்ச தங்கை ...... யடிதாராய்

பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற
     பொலங்கிரி யொன்றை ...... யெறிவோனே

புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள்
     புரந்தரன் வஞ்சி ...... மணவாளா

இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய்
     குரும்பைம ணந்த ...... மணிமார்பா

இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று
     இலஞ்சிய மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு ... அணிந்துள்ள
மலரின் மேல் வண்டுகள் திகழும் கரு மேகம் போன்ற நீண்ட
கூந்தலைப் பார்த்தும்,

துரந்து எறிகின்ற விழி வேலால் ... வேகமாக செலுத்தி வீசப்பட்ட
வேல் போன்ற கண்ணைப் பார்த்தும்,

சுழன்று சுழன்று துவண்டு துவண்டு சுருண்டு மயங்கி ... (என்
மனம்) சுழற்சி அடைந்து, மிகவும் வாட்டமுற்று, சோர்வுற்று, மயக்கம்
உற்று,

மடவார் தோள் விரும்பி வரம்பு கடந்து நடந்து ...
விலைமாதர்களின் தோள்களை விருப்பம் கொண்டு அளவு கடந்து
நடந்தும்,

மெலிந்து தளர்ந்து மடியாதே ... மெலிந்தும் தளர்ந்தும் (நான்)
இறந்து போகாமல்,

விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள்
சதங்கை அடி தாராய்
... விளங்குகின்ற உனது கடப்ப மாலையை
விரும்பி, அழகிய தண்டையையும், பல இன்னிசை வகைகளை ஒலிக்கும்
கிண்கிணியையும் அணிந்த திருவடிகளைத் தருவாயாக.

பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி
ஒன்றை எறிவோனே
... நன்றாகப் பொருந்தி அமைந்து, மேன்மை
பெற நின்ற பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழித்தவனே.

புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி
மணவாளா
... உன்னைப் புகழ்ந்தும், (உனது ஆற்றலைக்) கண்டு
மகிழ்ந்தும், வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய
வஞ்சிக் கொடி போன்ற நங்கையாகிய தேவயானையின் கணவனே,

இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த
மணி மார்பா
... தினைப் புனத்தைக் காத்த மங்கையாகிய வள்ளியின்
நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட தென்னங் குரும்பை போன்ற மார்பை
அணைந்து கலந்த அழகிய மார்பனே,

இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த
பெருமாளே.
... (சரவணக்) குளத்தில் வந்த காரணத்தால் குளவன்
(குளத்தில் உற்பவித்தவன்) என்று திருப் பெயர் கொண்டு, இலஞ்சி*
என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால
அருவிக்கு மிக அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1385  pg 2.1386 
 WIKI_urai Song number: 977 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Ilanji OthuvAr Siva Singara Velan
'இலஞ்சி ' ஓதுவார் திரு சிவா சிங்கார வேலன்

'Ilanji' Othuvar Thiru Siva Singara Velan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 973 - surumbu aNi (ilanji)

surumpaNi koNdal nedungkuzhal kaNdu
     thurantheRi kinRa ...... vizhivElAl

suzhanRusu zhanRu thuvaNduthu vaNdu
     suruNduma yangi ...... madavArthOL

virumpiva rampu kadanthuna danthu
     melinthutha Larnthu ...... madiyAthE

viLanguka dampu vizhainthaNi thaNdai
     vithangkoLsa thangai ...... yadithArAy

porunthala mainthu sithampeRa ninRa
     polangiri yonRai ...... yeRivOnE

pukazhnthuma kizhnthu vaNanguku NangkoL
     purantharan vanji ...... maNavALA

irumpuna mangai perumpuLa kanjey
     kurumpaima Nantha ...... maNimArpA

ilanjiyil vantha ilanjiya menRu
     ilanjiya marntha ...... perumALE.

......... Meaning .........

surumpu aNi koNdal nedum kuzhal kaNdu: Looking at the long hair like the dark cloud, adorned with flowers where beetles linger,

thuranthu eRikinRa vizhi vElAl: and looking at the eyes that are like the spears wielded forcefully,

suzhanRu suzhanRu thuvaNdu thuvaNdu suruNdu mayangki: my mind keeps on reeling, gets depressed and exhausted and makes me dizzy;

madavAr thOL virumpi varampu kadanthu nadanthu: hankering after the shoulders of the whores, I have exceeded the limit of decency;

melinthu thaLarnthu madiyAthE: I do not wish to be debilitated like this and to die eventually;

viLangu kadampu vizhainthu aNi thaNdai vitham koL sathangai adi thArAy: (to save me) kindly grant me, the seeker of Your elegant garland of kadappa flowers, Your hallowed feet wearing the beautiful anklet, with its beads making lilting sounds of many musical varieties!

porunthal amainthu usitham peRa ninRa pon am kiri onRai eRivOnE: The well-formed Mount Krouncha, which stood majestically, was destroyed by You, Oh Lord!

pukazhnthu makizhnthu vaNangu kuNam koL purantharan vanji maNavALA: You are the Consort of DEvayAnai, daughter of IndrA, who joyously praises You (lauding Your valour) and who has the great virtue of prostrating at Your feet.

irum puna mangai perum puLakam sey kurumpai maNantha maNi mArpA: You made VaLLi, the damsel who stood guard to the millet field, exhilarated by embracing her bosom like the baby-coconut with Your broad chest!

ilanjiyil vantha ilanjiyam enRu ilanji amarntha perumALE.: Because You emerged from the (SaravaNa) pond, You assumed the name KuLavan (One who belongs to the pond), and with that holy name, You are seated in this place called Ilanji*, Oh Great One!


* Ilanji is 4 miles away from ThenkAsi Railway Station. It is situated very close to Courtalam falls.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 973 surumbu aNi - ilanji

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]