திருப்புகழ் 970 வேனின் மதன் ஐந்து  (ஸ்ரீ புருஷமங்கை)
Thiruppugazh 970 vEninmadhanaindhu  (Sri purushamangkai)
Thiruppugazh - 970 vEninmadhanaindhu - SripurushamangkaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த ...... தனதான

......... பாடல் .........

வேனின்மத னைந்து பாணம்விட நொந்து
     வீதிதொறு நின்ற ...... மடவார்பால்

வேளையென வந்து தாளினில்வி ழுந்து
     வேடைகெட நண்பு ...... பலபேசித்

தேனினும ணந்த வாயமுத முண்டு
     சீதளத னங்க ...... ளினின்மூழ்கித்

தேடியத னங்கள் பாழ்படமு யன்று
     சேர்கதிய தின்றி ...... யுழல்வேனோ

ஆனிரைது ரந்து மாநிலம ளந்தொ
     ராலிலையி லன்று ...... துயில்மாயன்

ஆயர்மனை சென்று பால்தயிர ளைந்த
     ஆரணமு குந்தன் ...... மருகோனே

வானவர்பு கழ்ந்த கானவர்ப யந்த
     மானொடுவி ளங்கு ...... மணிமார்பா

மாமறைமு ழங்கு ஸ்ரீபுருட மங்கை
     மாநகர மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து ... வேனில்
பருவத்துக்கு உரிய மன்மதன் தனது ஐந்து மலர் அம்புகளைச் செலுத்த,
மனம் வேதனை அடைந்து,

வீதி தோறும் நின்ற மடவார் பால் வேளை என வந்து
தாளினில் விழுந்து
... தெரு மூலைகள் தோறும் நின்றுள்ள
மாதர்களிடத்தே இதுவே சமயம் என்று வந்து அவர்கள் காலில் விழுந்து,

வேடை கெட நண்பு பல பேசித் தேனினும் மணந்த வாய்
அமுதம் உண்டு
... ஆசை தீர நட்பான பல பேச்சுக்களைப் பேசி,
தேனைக் காட்டிலும் அதிக நறு மணம் கொண்ட வாயிதழ் ஊறலை உண்டு,

சீதள தனங்களினில் மூழ்கித் தேடிய தனங்கள் பாழ் பட
முயன்று
... (அம்மாதர்களின்) குளிர்ந்த மார்பகங்களில் முழுகி, தேடி
வைத்திருந்த செல்வம் எல்லாம் அழிக்க முயற்சி செய்து,

சேர் கதி அது இன்றி உழல்வேனோ ... அடைய வேண்டிய கதியை
(வீட்டுப் பேற்றை) அடைதல் இல்லாமல் அலைந்து திரிவேனோ?

ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில்
அன்று துயில் மாயன்
... பசுக் கூட்டங்களை மேய்த்து ஓட்டிச்
செலுத்தியும், பெரிய பூமியை (ஓர் திருவடி கொண்டு) அளந்தும், ஓர்
ஆலிலையில் ஊழி அன்று துயில் கொண்ட மாயன்,

ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த ஆரண முகுந்தன்
மருகோனே
... இடையர் வீடுகளில் போய் பாலையும், தயிரையும்
கலந்து உவகையுடன் பருகியவனும், வேதம் போற்றும் முகுந்தனுமாகிய
திருமாலின் மருகனே,

வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி
மார்பா
... தேவர்கள் புகழ்ந்து போற்றிய தேவயானையுடனும், வேடர்கள்
மகளாகிய மான் போன்ற வள்ளியுடனும் விளங்கும் அழகிய மார்பனே,

மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த
பெருமாளே.
... பெருமை வாய்ந்த வேதங்கள் ஒலிக்கின்ற ஸ்ரீபுருட
மங்கை (நாங்குநேரி) என்னும் பெரிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.


* நாங்குநேரி என்ற தலம் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும்
வழியில் 24 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1377  pg 2.1378  pg 2.1379  pg 2.1380 
 WIKI_urai Song number: 974 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 970 - vEnin madhan aindhu (sripurushamangai - nAngunEri)

vEninmatha nainthu pANamvida nonthu
     veethithoRu ninRa ...... madavArpAl

vELaiyena vanthu thALinilvi zhunthu
     vEdaikeda naNpu ...... palapEsith

thEninuma Nantha vAyamutha muNdu
     seethaLatha nanga ...... LininmUzhkith

thEdiyatha nangaL pAzhpadamu yanRu
     sErkathiya thinRi ...... yuzhalvEnO

Aniraithu ranthu mAnilama Lantho
     rAlilaiyi lanRu ...... thuyilmAyan

Ayarmanai senRu pAlthayira Laintha
     AraNamu kunthan ...... marukOnE

vAnavarpu kazhntha kAnavarpa yantha
     mAnoduvi Langu ...... maNimArpA

mAmaRaimu zhangu Sripuruda mangai
     mAnakara marntha ...... perumALE.

......... Meaning .........

vEnin mathan ainthu pANam vida nonthu: Because of the five flowery arrows wielded by Manmathan (God of Love) who belongs to the season of spring, my mind was in agony;

veethi thORum ninRa madavAr pAl vELai ena vanthu thALinil vizhunthu: I went after the women standing at all street-corners thinking that it was the most opportune moment and fell at their feet;

vEdai keda naNpu pala pEsith thEninum maNantha vAy amutham uNdu: to my utmost satisfaction, I chatted with them intimately and imbibed their saliva which was sweeter than honey;

seethaLa thanangaLinil mUzhkith thEdiya thanangaL pAzh pada muyanRu: I drowned myself in their cool bosom and managed to fritter away all my hard-earned wealth;

sEr kathi athu inRi uzhalvEnO: am I to roam about aimlessly like this without seeking liberation?

An nirai thuranthu mA nilam aLanthu Or Al ilaiyil anRu thuyil mAyan: He steered the herds of cow for grazing; He measured the large earth (with His single hallowed foot); on the doom's day, He, the mystic One, slumbered atop a banyan leaf;

Ayar manai senRu pAl thayir aLaintha AraNa mukunthan marukOnE: He entered the homes of shepherds and merrily gulped a mixture of milk and curd; He is Mukunthan, adored by the VEdAs; You are the nephew of that VishNu!

vAnavar pukazhntha kAnavar payantha mAnodu viLangu maNi mArpA: You are the consort of DEvayAnai, praised by the celestials, and VaLLi, the deer-like daughter of the hunters!

mA maRai muzhangu Sripurudamangai mA nakar amarntha perumALE.: In this large town Sri Purushamangai (NAngunEri*) where the great VEdAs are chanted resoundingly, You have taken Your seat, Oh Great One!


* Sri Purushamangai is now known as NAngunEri, situated 24 miles from Tirunelveli on the route to NAgarkOvil.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 970 vEnin madhan aindhu - Sri purushamangkai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]