திருப்புகழ் 967 முத்து நவரத்நமணி  (மதுரை)
Thiruppugazh 967 muththunavarathnamaNi  (madhurai)
Thiruppugazh - 967 muththunavarathnamaNi - madhuraiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

......... பாடல் .........

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
     மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும்

முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
     முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி

பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி
     பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும்

பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
     பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
     தெய்த்ததென தெய்தததென ...... தெனனான

திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
     செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்

அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
     சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா

அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
     ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி ...
முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது)
இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும்,

முத்தி தரு என ஓதும் முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த
முருகக் கடவுள்
... முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம்
ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள்
பாலித்து உபதேசித்த முருகக் கடவுள்,

முப்பது முவர்க்க சுரர் அடி பேணி ... முப்பத்து மூன்று* வகையான
தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப,

பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி ...
(இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய
(ராமனாகிய) திருமால்,

பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் ... அருச்சுனன்
(மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து)
தேரைச் செலுத்திய,

பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் ... பச்சை
நிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன்,
சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்க
வைத்த முருகக் கடவுளே,

பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே ... பக்தர்கள் மனத்தில்
பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக.

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
     தெய்த்ததென தெய்தததென தெனனான
          திக்குவென மத்தளம் இடக்கைதுடி
... (இவ்வகை)
ஒலிகளுடன் மத்தளம், இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோல் கருவி,
உடுக்கை ஆகியவை ஒலிக்க,

தத்ததகு செச்சரிகை செச்சரிகை யெனஆடும் ... தத்ததகு
செச்சரிகை செச்சரிகை என்ற ஜதிக்கு நடனம் ஆடும்

அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவசித்தி அருள் சத்தி
அருள் புரிபாலா
... தந்தை சிவபெருமானுடன் ஒத்ததான நடனம்
புரிபவள், மூன்று லோகங்களுக்கும் முதல்வி, புதுமையான
வரப்ரசாதங்களை அடியார்களுக்கு அருளும் பார்வதி ஈன்றருளிய
குழந்தையே,

அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் ...
நுண்ணிய இடையை உடைய மாதர்களின் மெத்தை வீடுகள் எல்லாம்
நிலை பெற்றனவாய் உயர்ந்த மதில்களுடன் விளங்கும்,

கனக பத்ம புரி பெருமாளே. ... பொற்றாமரைக் குளம் அமைந்த
பட்டணமாகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.


* முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் பின்வருமாறு:

ஆதித்தர் 12, ருத்திரர் 11, வசுக்கள் 8, மருத்தவர் 2 - ஆக 33 வகையின.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1369  pg 2.1370  pg 2.1371  pg 2.1372 
 WIKI_urai Song number: 971 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 967 - muththu navarathnamaNi (madhurai)

muththunava rathnamaNi paththiniRai saththiyida
     moyththakiri muththitharu ...... venavOthum

mukkaNiRai varkkumaruL vaiththamuru kakkadavuL
     muppathumu varkkasura ...... radipENi

paththumudi thaththumvakai yutRakaNi vittAri
     paRkunanai vetRipeRa ...... rathamUrum

pacchainiRa mutRapuya lacchamaRa vaiththaporuL
     paththarmana thutRasivam ...... aruLvAyE

thiththimithi thiththimithi thikkukuku thikkukuku
     theyththathena theythathathena ...... thenanAna

thikkuvena maththaLami dakkaithudi thaththathaku
     seccharikai seccharikai ...... yenaAdum

aththanuda noththanada nithripuva naththinava
     siththiyaruL saththiyaruL ...... puribAlA

aRpavidai thaRpamathu mutRunilai petRuvaLa
     raRkanaka pathmapuri ...... perumALE.

......... Meaning .........

muththu nava rathna maNi paththi niRai saththi idam moyththa kiri: "He is like a mountain on whose left side DEvi PArvathi is concorporate, adorned with rows of pearls and nine precious gems;

muththi tharu ena Othum mukkaN iRaivarkkum aruL vaiththa murukak kadavuL: He is the sacred tree that grants the fruit of Liberation; He is the three-eyed Lord SivA" - so on and so forth that Lord is praised; to that SivA, Lord Murugan kindly preached!

muppathu muvarkka surar adi pENi: When all the celestials of thirty-three* kinds prostrated at His feet,

paththu mudi thaththum vakai utRa kaNi vitta ari: Lord VishNu (as RAmA) shot His arrow knocking down the ten heads (of RAvaNA);

paRkunanai vetRi peRa ratham Urum: the same Lord VishNu (as KrishNA) drove the chariot for ArjunA making him the victor in the (MahAbhArathA) war;

pacchai niRam utRa puyal accham aRa vaiththa poruL: He is of the hue of greenish dark cloud; that VishNu was terrified of the demons (SUrapathman, Singamukan and ThArakan); and You are the Lord who removed His fear, Oh MurugA!

paththar manathu utRa sivam aruLvAyE: Kindly grant me the bliss that prevails in the hearts of all Your devotees!

thiththimithi thiththimithi thikkukuku thikkukukutheyththathena theythathathena thenanAnathikkuvena maththaLam idakkaithudi: (To this meter) the drums, idakkai (a percussion instrument made of leather beaten only by the left hand) and udukkai (hand-drums) were beaten;

thaththathaku seccharikai seccharikai yenaAdum: He danced to the meter of "thaththathaku seccharikai seccharikai"

aththanudan oththa nadani thripuvanaththi navasiththi aruL saththi aruL puribAlA: synchronising with that dance of Father SivA, She too dances; She is the primordial Goddess of the three worlds; She is PArvathi who bestows fresh boons on Her devotees; You are Her child, Oh Lord!

aRpa idai thaRpam athu mutRu nilai petRu vaLar al: This town is full of multi-storied mansions where women with slender waists live; it is also surrounded by tall fortress walls;

kanaka pathma puri perumALE.: this is Madhurai, famous for its Golden Lotus Tank; and it is Your abode, Oh Great One!


* The kinds of celestials are:

Athiththar 12, Ruththirar 11, Vasus 8, Maruththavar 2 - totalling 33.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 967 muththu navarathnamaNi - madhurai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]