திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 952 ஈர மோடு சிரித்து (கீரனூர்) Thiruppugazh 952 eeramOdusiriththu (keeranUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன ...... தனதான ......... பாடல் ......... ஈர மோடுசி ரித்துவ ருத்தவும் நாத கீதந டிப்பிலு ருக்கவும் ஏவ ராயினு மெத்திய ழைக்கவு ...... மதராஜன் ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும் வீதி மீதுத லைக்கடை நிற்கவும் ஏறு மாறும னத்தினி னைக்கவும் ...... விலைகூறி ஆர பாரத னத்தைய சைக்கவு மாலை யோதிகு லைத்துமு டிக்கவும் ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும் ...... அதிமோக ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவு மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும் ஆன தோதக வித்தைகள் கற்பவ ...... ருறவாமோ பார மேருப ருப்பத மத்தென நேரி தாகஎ டுத்துட னட்டுமை பாக ராரப டப்பணி சுற்றிடு ...... கயிறாகப் பாதி வாலிபி டித்திட மற்றொரு பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு கீர வாரிதி யைக்கடை வித்ததி காரி யாயமு தத்தைய ளித்தக்ரு பாளு வாகிய பச்சுரு வச்சுதன் ...... மருகோனே கேடி லாவள கைப்பதி யிற்பல மாட கூடம லர்ப்பொழில் சுற்றிய கீர னுருறை சத்தித ரித்தருள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஈரமோடு சிரித்து வருத்தவும் நாத கீத நடிப்பில் உருக்கவும் ... கருணை நிறைந்த முகத்துடன் சிரித்து வரவழைப்பதற்கும், ஒலி நிறைந்த இசையாலும், நடனத்தாலும் மனத்தை உருக்குதற்கும், ஏவராயினும் எத்தி அழைக்கவும் மத ராஜன் ஏவின் மோது கண் இட்டு மருட்டவும் ... யாராயிருந்த போதிலும் வஞ்சித்து அழைப்பதற்கும், காமனுடைய அம்பு போல தாக்குகின்ற கண்களைக் கொண்டு (வந்தவரை) மயக்குதற்கும், வீதி மீது தலைக் கடை நிற்கவும் ஏறு மாறு மனத்தினில் நினைக்கவும் விலை கூறி ஆர பார தனத்தை அசைக்கவும் ... தெருப் பக்கத்தில் தலை வாசல் படியில் நிற்பதற்கும், தாறுமாறான எண்ணங்களை மனதில் நினைப்பதற்கும், விலை பேசி முடித்து, முத்து மாலை அணிந்ததும் கனத்ததுமான மார்பை அசைப்பதற்கும், மாலை ஓதி குலைத்து முடிக்கவும் ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் ... பூ மாலை அணிந்துள்ள கூந்தலை அவிழ்த்து முடிப்பதற்கும், ஆடை நெகிழும்படி வேண்டுமென்றே அவிழ்த்து இடுப்பில் சுற்றுதற்கும், அதி மோக ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும் மேல் விழா வெகு துக்கம் விளைக்கவும் ஆன தோதக வித்தைகள் கற்பவர் உறவாமோ ... அதிக மோகம் கொண்ட ஆசை உள்ளவர்கள் போல தங்கள் மனத்தில் உள்ள விருப்பத்தை எடுத்துச் சொல்லுவதற்கும், மேலே விழுந்து மிக்க துக்கத்தை உண்டு பண்ணுதற்கும் வேண்டியதான வஞ்சனை வித்தைகளைக் கற்றுள்ளவர்களாகிய விலைமாதர்களின் சம்பந்தம் நல்லதாகுமா? பார மேரு பருப்பத(ம்) மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு உமை பாகர் ஆரப் படம் பணி சுற்றிடு கயிறாக ... கனத்த மேரு மலையை மத்தாகத் தேர்ந்து எடுத்து, உடனே அதை (பாற்கடலில்) நாட்டி, உமையைப் பாகத்தில் உடைய சிவபெருமானது மாலையாக விளங்குவதும், படங்களைக் கொண்டதுமான (வாசுகி என்ற) பாம்பை (அந்த மத்துக்குச்) சுற்ற வேண்டிய கயிறாகப் பூட்டி, பாதி வாலி பிடித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட லக்ஷுமி பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு ... ஒரு பாதியை வாலி பிடிக்க, மற்றொரு பாதியைத் தேவர்கள் பிடித்திட, லக்ஷ்மி, பாரிஜாதம் முதலான பல சித்திகளும், அரும் பொருட்களும் (பாற்கடலில் இருந்து) வெளிவரும்படி, கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை அளித்த க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன் மருகோனே ... பாற்கடலைக் கடைவித்த தலைவனாய், அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தருளிய கிருபா மூர்த்தியாகிய, பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகனே, கேடிலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய கீரனூர் உறை சத்தி தரித்து அருள் பெருமாளே. ... அழிவு இல்லாத குபேரன் நகராகிய அளகாபுரி போல, பல மாடக் கூடங்களும் மலர்ச் சோலைகளும் நிறைந்த கீரனூரில்* வீற்றிருந்து, வேல் ஏந்தி அனைவருக்கும் திருவருள் புரியும் பெருமாளே. |
* கீரனூர் பழநிக்கு வடக்கே 10 மைலில் தாராபுரம் செல்லும் வழியில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1333 pg 2.1334 pg 2.1335 pg 2.1336 WIKI_urai Song number: 956 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 952 - eera mOdu siriththu (keeranUr) eera mOdusi riththuva ruththavum nAtha keethana dippilu rukkavum Eva rAyinu meththiya zhaikkavu ...... matharAjan Evin mOthuka Nittuma ruttavum veethi meethutha laikkadai niRkavum ERu mARuma naththini naikkavum ...... vilaikURi Ara pAratha naththaiya saikkavu mAlai yOthiku laiththumu dikkavum Adai sOraa vizhththarai sutRavum ...... athimOka Asai pOlmana ishtamu raikkavu mElvi zhAveku thukkamvi Laikkavum Ana thOthaka viththaikaL kaRpava ...... ruRavAmO pAra mErupa ruppatha maththena nEri thAkae duththuda nattumai pAka rArapa dappaNi sutRidu ...... kayiRAkap pAthi vAlipi diththida matRoru pAthi thEvarpi diththida lakshumi pAri sAthamu thaRpala siththikaL ...... varumARu keera vArithi yaikkadai viththathi kAri yAyamu thaththaiya Liththakru pALu vAkiya pacchuru vacchuthan ...... marukOnE kEdi lAvaLa kaippathi yiRpala mAda kUdama larppozhil sutRiya keera nuruRai saththitha riththaruL ...... perumALE. ......... Meaning ......... eeramOdu siriththu varuththavum nAtha keetha nadippil urukkavum: With a benign smile on their kind face, they beckon people to come to them; with melodious music and dances, they could melt the hearts; EvarAyinum eththi azhaikkavum matha rAjan Evin mOthu kaN ittu maruttavum: whoever their suitors may be, they are able to invite them treacherously; with their rolling eyes, like the arrows wielded by Manmathan (God of Love), they are capable of attacking (their suitors) and enchanting them; veethi meethu thalaik kadai niRkavum ERu mARu manaththinil ninaikkavum vilai kURi Ara pAra thanaththai asaikkavum: in front of the gate of their home, they stand on the street, with perverted and ulterior motives in their mind; they conclude the negotiation of the price and provocatively shake their big bosom wearing a string of pearls; mAlai Othi kulaiththu mudikkavum Adai sOra avizhaththu arai sutRavum: they loosen their hair bedecked with garlands of flowers and re-tie the hair into a tuft; they deliberately slacken their attire and wrap it around their waist; athi mOka Asai pOl mana ishtam uraikkavum mEl vizhA veku thukkam viLaikkavum Ana thOthaka viththaikaL kaRpavar uRavAmO: feigning excessive passion, they speak out the desire in their mind and fall all over (their suitors); they have learnt many tricks of deception causing a lot of misery; how can a liaison with such whores do any good? pAra mEru paruppatha(m) maththu ena nErithAka eduththu udan nattu umai pAkar Arap padam paNi sutRidu kayiRAka: The heavy Mount MEru was chosen as the churning rod; it was immediately installed (in the milky ocean); the hooded serpent VAsuki, which is worn as garland by Lord SivA on whose left side is Goddess UmAdEvi concorporate, was tied around the churner as the rope; pAthi vAli pidiththida matRoru pAthi thEvar pidiththida lakshumi pArisAtha muthal pala siththikaL varumARu: one end of the rope was held by VAli and the other end was held by the celestials; several miraculous things emanated (from the milky ocean) that included Lakshmi, PArijAtham and others; keera vArithiyai kadaiviththu athikAriyAy amuthaththai aLiththa krupALu Akiya pacchu uru acchuthan marukOnE: He presided over the whole operation of churning the milky ocean; He was the compassionate Lord who distributed the nectar to the celestials; He has a green complexion; and You are the nephew of that Lord VishNu! kEdilA aLakai pathiyil pala mAda kUda malar pozhil sutRiya keeranUr uRai saththi thariththu aruL perumALE.: Like the indestructible town ALakApuri, the capital of KubErA (the Celestial Treasurer), this town KeeranUr* is also rich with many terraces, assembly halls and flowery groves; You are seated in this place, holding a spear in Your hand and blessing all graciously, Oh Great One! |
* KeeranUr is located 10 miles north of Pazhani on the route to ThArApuram. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |