திருப்புகழ் 951 கலைஞர் எணும் கற்பு  (கொடும்பாளூர்)
Thiruppugazh 951 kalaignareNumkaRpu  (kodumbALUr)
Thiruppugazh - 951 kalaignareNumkaRpu - kodumbALUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனனந் தத்தத் தனதனனந் தத்தத்
     தனதனனந் தத்தத் ...... தனதான

......... பாடல் .........

கலைஞரெணுங் கற்புக் கலியுகபந் தத்துக்
     கடனபயம் பட்டுக் ...... கசடாகுங்

கருமசடங் கச்சட் சமயிகள்பங் கிட்டுக்
     கலகலெனுங் கொட்புற் ...... றுடன்மோதும்

அலகில்பெருந் தர்க்கப் பலகலையின் பற்றற்
     றரவியிடந் தப்பிக் ...... குறியாத

அறிவையறிந் தப்பற் றதனினொடுஞ் சற்றுற்
     றருள்வசனங் கிட்டப் ...... பெறலாமோ

கொலைஞரெனுங் கொச்சைக் குறவரிளம் பச்சைக்
     கொடிமருவுஞ் செச்சைப் ...... புயமார்பா

கொடியநெடுங் கொக்குக் குறுகவுணன் பட்டுக்
     குரைகடல்செம் பச்சக் ...... கரவாளச்

சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத்
     திசைகளினுந் தத்தச் ...... செகமேழுந்

திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித்
     திறல கொடும் பைக்குட் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கலைஞர் எ(ண்)ணும் கற்பு கலி யுக பந்தத்துக் கடன் அபயம்
பட்டு
... கலை வல்லோர் மதிக்கும் கல்வியிலும், கலியுக சம்பந்தமான
தளைகளில் ஏற்படும் கடமைகளிலும் அடைக்கலம் புகுந்தது போல,

கசடு ஆகும் கரும சடங்கம் சட் சமயிகள் பங்கிட்டுக் கலகல
எனும் கொட்பு உற்று உடன் மோதும்
... பயனற்ற செயல்களாகிய
சடங்குகளைக் கூறும் ஆறு சமயத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள்
பங்கிட்டுக் கொண்டு, கலகல என்ற பெருத்த ஓசையுடன், வெறிபிடித்தது
போல ஒருவரோடு ஒருவர் தாக்கும்

அலகு இல் பெரும் தர்க்கப் பல கலையின் பற்று அற்று
அரவியிடம் தப்பி
... அளவில்லாத பெரிய வாதத்துக்கு இடம் தரும் பல
கலை நூல்களிலும் ஆசையை விட்டொழித்து, (அந்த வாதங்கள் எழுப்பும்)
ஒலியிலிருந்து தப்பிப் பிழைத்து,

குறியாத அறிவை அறிந்து அப்பற்று அதனினொடும் சற்று
உற்று
... சுட்டிக் காட்ட முடியாத அறிவு இன்னது என்பதை அறிந்து,
அந்த ஞானப் பற்றுடன் சிறிது காலம் நிலைத்திருந்து,

அருள் வசனம் கிட்டப் பெறலாமோ ... திருவருள் உபதேசம்
எனக்குக் கிடைப்பது கூடுமோ?

கொலைஞர் எனும் கொச்சைக் குறவர் இளம் பச்சைக் கொடி
மருவும் செச்சைப் புய மார்பா
... கொலைஞர்கள் என்று கருதப்பட்ட,
பாமரர்களான, குறவர்களிடம் வளர்ந்த இளமை வாய்ந்த பச்சைக் கொடி
போன்ற (வள்ளி நாயகி) தழுவும் வெட்சி மாலை அணிந்த புயத்தையும்,
மார்பையும் கொண்டவனே,

கொடிய நெடும் கொக்குக் குறுகு அவுணன் பட்டுக் குரை
கடல் செம்ப
... கொடுமை வாய்ந்த நெடிய மாமரமாகி நெருங்கிவந்து
போரிட்ட அசுரன் சூரன் அழிபட்டு, ஒலிக்கும் கடல் பொங்கி எழ,

சக்கரவாளச் சிலை பக எண் திக்குத் திகிரிகளும் பத்துத்
திசைகளினும் தத்த
... சக்கரவாளம் எனப்படும் மலை பிளவுபட,
எட்டுத் திசைகளிலும் உள்ள மலைகளும் பத்துத் திசைகளிலும்* சிதற,

செகம் ஏழும் திருகு சிகண்டிப் பொற் குதிரை விடும் செட்டித்
திறல
... ஏழு உலகங்களிலும், முறுக்கி விடப்பட்ட மயிலாகிய அழகிய
குதிரையைச் செலுத்தி விட்ட செட்டி எனப் பெயர் கொண்ட வல்லவனே,

கொடும்பைக்குள் பெருமாளே. ... கொடும்பாளூர்** என்னும்
தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* எட்டுத் திசைகளோடு ஊர்த்துவம் - ஆகாயம், அதோகதி - பாதாளம்
இவையும் சேர்ந்தன.


** கொடும்பாளூர் திருச்சிக்கு அடுத்த விராலிமலையிலிருந்து 3 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1331  pg 2.1332  pg 2.1333  pg 2.1334 
 WIKI_urai Song number: 955 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 951 - kalaignar eNum kaRpu (kodumpALUr)

kalainjareNum kaRpuk kaliyukapan thaththuk
     kadanapayam pattuk ...... kasadAkum

karumasadan gacchat samayikaLpan gittuk
     kalakalenum kotput ...... RudanmOthum

alakilperun tharkkap palakalaiyin patRat
     Raraviyidan thappik ...... kuRiyAtha

aRivaiyaRin thappat Rathaninodunj chatRut
     RaruLvasanang kittap ...... peRalAmO

kolainjarenum kocchaik kuRavariLam pacchaik
     kodimaruvunj cecchaip ...... puyamArpA

kodiyan-edung kokkuk kuRukavuNan pattuk
     kuraikadalsem pacchak ...... karavALac

cilaipakaeN dikkuth thikirikaLum paththuth
     thisaikaLinun thaththac ...... cekamEzhum

thirukusikaN dippoR kuthiraividunj chettith
     thiRala kodum paikkut ...... perumALE.

......... Meaning .........

kalainjar e(N)Num kaRpu kali yuka panthaththuk kadan apayam pattu: As if totally surrendered to the education revered by scholars and to the worldly duties arising from several bondages,

kasadu Akum karuma sadangam chat samayikaL pangittuk kalakala enum kotpu utRu udan mOthum: people belonging to the six religions, which only speak about useless rituals, argue among themselves at high decibel level and attack one another vehemently;

alaku il perum tharkkap pala kalaiyin patRu atRu araviyidam thappi: I wish to give up my interest in those several text books which give rise to this endless, long debate and escape from the cacophony;

kuRiyAtha aRivai aRinthu appatRu athaninodum satRu utRu: I would like to acquire that Knowledge which cannot be pin-pointed and then remain enlightened at least for some time;

aruL vasanam kittap peRalAmO: will I have the privilege of obtaining that gracious preaching?

kolainjar enum kocchaik kuRavar iLam pacchaik kodi maruvum cecchaip puya mArpA: She is the green creeper-like damsel, VaLLi, who was reared by the KuRavAs, deemed as murderers and belonging to low lineage; She hugged Your shoulders and chest adorned with garlands of vetchi flowers, Oh Lord!

kodiya nedum kokkuk kuRuku avuNan pattuk kurai kadal sempa: As the confronting demon SUran, in the disguise of a wild big mango tree, was killed, the seas rose roaring;

sakkaravALac cilai paka eNdikkuth thikirikaLum paththuth thisaikaLinum thaththa: Mount ChakravALam was pierced into two and the mountains in all the eight directions were scattered all over the ten directions*;

sekam Ezhum thiruku sikaNdip poR kuthirai vidum chettith thiRala: and You mounted the horse-like beautiful peacock raring to go and flew around the seven worlds, Oh valorous Lord with the name of Chetti!

kodumpaikkuL perumALE.: You have an abode in KodumpALUr**, Oh Great One!


* Eight Cardinal Directions plus the zenith and the nadir.


** KodumpALUr is near ThiruchirAppaLLi, about 3 miles from VirAlimalai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 951 kalaignar eNum kaRpu - kodumbALUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]