திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 950 மைச் சரோருகம் (பேரூர்) Thiruppugazh 950 maichcharOrugam (pErUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்த தானன தத்த தானன தானா தானா தானா தானா ...... தனதான ......... பாடல் ......... மைச்ச ரோருக நச்சு வாள்விழி மானா ரோடே நானார் நீயா ...... ரெனுமாறு வைத்த போதக சித்த யோகியர் வாணாள் கோணாள் வீணாள் காணா ...... ரதுபோலே நிச்ச மாகவு மிச்சை யானவை நேரே தீரா யூரே பேரே ...... பிறவேயென் நிட்க ராதிகண் முற்பு காதினி நீயே தாயாய் நாயேன் மாயா ...... தருள்வாயே மிச்ச ரோருக வச்ர பாணியன் வேதா வாழ்வே நாதா தீதா ...... வயலூரா வெற்பை யூடுரு வப்ப டாவரு வேலா சீலா பாலா காலா ...... யுதமாளி பச்சை மாமயில் மெச்ச வேறிய பாகா சூரா வாகா போகா ...... தெனும்வீரா பட்டி யாள்பவர் கொட்டி யாடினர் பாரூ ராசூழ் பேரூ ராள்வார் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மைச் சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே ... மை பூசியுள்ளதும், தாமரை, விஷம், வாள் இவற்றைப் போன்றதுமான கண்களை உடைய பெண்களுடன் நான் யார் நீ யார் எனுமாறு வைத்த போதக சித்த யோகியர் ... நான் யார், நீ யார் என்னும் வகையில் (மாதர்கள் மயக்கால் சிறிதேனும் தாக்கப்படாதவராய்) தங்கள் மன நிலையை வைத்துள்ள ஞானத்துடன் கூடிய சித்தர்களும், யோகிகளும், வாழ் நாள் கோள் நாள் வீண் நாள் காணார் ... தமது வாழ் நாளாலும், கிரகங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போகும்படியான நாளாகக் காணமாட்டார். அது போலே நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா ... அது போலவே, உறுதியாக (மண், பொன், பெண் என்னும்) மூவாசைகள் ஒரு வழியாக முடிவு பெறுவதில்லை. ஊரே பேரே பிறவே ... (ஆதலால்) எனது சொந்த ஊர் போல் இனியவனே, என் பேர் போல் இனியவனே, எனக்கு இனிய பிற பொருட்களும் ஆனவனே, என் நிட்கராதிகள் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே ... என்னை நிச்சயமாகப் பீடிக்கும் மூன்றான எவையும் (முன்பு சொன்ன மூவாசைகள், மும்மலங்கள் - ஆணவம், கன்மம், மாயை, முக்குற்றங்கள் - பொய், களவு, கொலை, முக்குணங்கள் - சத்வம், ரஜஸ், தமஸ், முதலியவை) முற்பட்டு என்னைத் தாக்காமல், இனிமேல் நீயே தாய் போல் இருந்து அடியேன் இறந்து போகாமல் அருள் புரிவாயாக மிச்சரோருக வச்ர பாணியன் வேதா வாழ்வே நாத அதீதா வயலூரா ... தாமரை போன்ற கண்கள் உடல் எல்லாம் கொண்டுள்ளவனும், வஜ்ராயுதத்தை ஏந்திய கையனுமாகிய இந்திரன், பிரமன் இவர்கள் போற்றும் செல்வமே, நாத ஒலிக்கு அப்பாற்பட்டவனே, வயலூரானே, வெற்பை ஊடுருவப் படா வரு வேலா சீலா பாலா கால் ஆயுதம் ஆளி ... கிரெளஞ்ச மலையை ஊடுருவித் தொளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவனே, நற்குணம் நிறைந்தவனே, பாலனே, காலை ஆயுதமாகக் கொண்ட சேவலைக் கொடியாக ஆள்பவனே, பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா ... பச்சை நிறம் கொண்டதும், அழகுள்ளதுமான மயில் மீது தேவர் முதலானோர் மெச்சும்படி ஏறிய பாகனே, சூரா ஆகா போகாது எனும் வீரா ... அடா சூரனே, ஆஹா, அப்புறம் போகாதே (நில்) என்று சொன்ன வீரனே, பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர்* பாரூர் ஆ சூழ் பேரூர் ஆள்வார் பெருமாளே. ... (பிரமனாகிய) முனிவனுக்கு அருள் செய்தவரும், கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவரும், பூமியில் சிறந்த ஊராகத் திகழும் தலமும், (தேவலோகத்துப் பசு) காமதேனுவாக வந்த திருமால் வலம் செய்ததுமான பேரூரை** ஆண்டருள்பவருமாகிய சிவபெருமானுக்கு குருவாக வந்த பெருமாளே. |
* பிரமன் படைப்புத் தொழில் வராது வருந்திச் சிவபெருமானிடம் முறையிட, நீ பட்டி முனியாய் பேரூரில் வந்து பக்தி செய்வாயாகில் எமது நடனத்தைக் காணலாம் என்றார். திருமால் காமதேனுவாகவும், பிரமன் பட்டி முனிவராகவும் பேரூரில் வழிபட்டு, நடராஜப் பெருமானின் கொடு கொட்டி என்ற ஆடலைக் கண்டனர். |
** பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1327 pg 2.1328 pg 2.1329 pg 2.1330 pg 2.1331 WIKI_urai Song number: 954 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 950 - maich charOrugam (pErUr) maiccha rOruka nacchu vALvizhi mAnA rOdE nAnAr neeyA ...... renumARu vaiththa pOthaka siththa yOkiyar vANAL kONAL veeNAL kANA ...... rathupOlE niccha mAkavu micchai yAnavai nErE theerA yUrE pErE ...... piRavEyen nitka rAthikaN muRpu kAthini neeyE thAyAy nAyEn mAyA ...... tharuLvAyE miccha rOruka vachra pANiyan vEthA vAzhvE nAthA theethA ...... vayalUrA veRpai yUduru vappa dAvaru vElA seelA bAlA kAlA ...... yuthamALi pacchai mAmayil meccha vERiya pAkA cUrA vAkA pOkA ...... thenumveerA patti yALpavar kotti yAdinar pArU rAsUzh pErU rALvAr ...... perumALE. ......... Meaning ......... maic charOrukam nacchu vAL vizhi mAnArOdE: With women whose black-painted eyes that look like lotus, poison and sword, nAn yAr nee yAr enumARu vaiththa pOthaka siththa yOkiyar: they maintain a mental state of equanimity declaring to them "you and I go our separate ways"; they are the SidhdhAs and YOgis who have an enlightened mind; vAzh nAL kOL nAL veeN nAL kANAr: they will see to it that not even a single day of their life goes waste either due to their way of life or by the effect of the planets; athu pOlE nicchamAkavum icchaiyAnavai nErE theerA: it is not possible to achieve a similar finality in firmly extinguishing the three lusts (namely, lust for earth, gold and woman); UrE pErE piRavE: considering this situation, Oh my Lord, You are dear to me like my home-town, dear to me like my own name and You also represent to me all my other favourite things; en nitkarAthikaL mun pukAthu ini neeyE thAyAy nAyEn mAyAthu aruLvAyE: protect me from the sure and head-on attack of all the triumvirates (namely the aforesaid three lusts, three slags - arrogance, karma and delusion, three vices - lying, stealing and killing, and three characteristics - sathwa - tranquility, rajas - aggressiveness and thamas - sluggishness); You must kindly guard me from now onwards like my mother and save me from dying! miccharOruka vasra pANiyan vEthA vAzhvE nAtha atheethA vayalUrA: IndrA, who has lotus-like eyes all over his body and who holds Vajra in his hand as a weapon, and BrahmA cherish You as their Treasure! You are beyond the range of any melodious sound wave! You belong to the town of VayalUr! veRpai Uduruvap padA varu vElA seelA pAlA kAl Ayutham ALi: You hold as a weapon, the spear, that pierced through Mount Krouncha! You are full of virtues, Oh Child! You rule the staff of Rooster that uses its legs as its weapon! pacchai mA mayil meccha ERiya pAkA: You elegantly mounted the green and beautiful peacock as the awestruck celestials watched! cUrA AkA pOkAthu enum veerA: You are the valiant one who addressed the demon "Hey SUrA, hark, do not go the other way, stop on the track!" patti ALpavar kotti Adinar pArUr A sUzh pErUr ALvAr perumALE.: He blessed BrahmA who came in the disguise of a sage, named Patti*; He danced a unique dance called kodu kotti; He rules the famous town on this earth, namely, PErUr**, which Lord VishNu circumambulated coming in the disguise of KAmadhEnu (Divine Cow); He is Lord SivA and You are His Master, Oh Great One! |
* Once BrahmA had difficulty in His work of Creation and sought the help of Lord SivA; He was commanded to come as a sage, named Patti, to the town of PErUr and remain in the worship of SivA who would grant the vision of His dance. Accordingly, BrahmA came as Patti and Lord VishNu came as the Divine Cow, KAmadhEnu, to worship the Lord in PErUr. Lord NadarAjA granted them the vision of His unique dance, called kodu kotti. |
** PErUr is located 3 miles from the Railway Station of Coimbatore. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |