திருப்புகழ் 934 பரிவுறு நாரற்று  (சேலம்)
Thiruppugazh 934 parivuRunAratRu  (sElam)
Thiruppugazh - 934 parivuRunAratRu - sElamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானத் தனதன தானத்
     தனதன தானத் ...... தனதான

......... பாடல் .........

பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
     சிலைபொரு காலுற் ...... றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக்
     குழல்தனி யோசைத் ...... தரலாலே

மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
     தனிமிக வாடித் ...... தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத்
     தருள்முரு காவுற் ...... றணைவாயே

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
     தொடுகும ராமுத் ...... தமிழோனே

கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
     திருவளர் சேலத் ...... தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத்
     தனிமயி லேறித் ...... திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக்
     கிளையவி நோதப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பரிவுறு நார் அற்று அழல்மதி வீச ... இரக்கம் கலந்த அன்பு சிறிதும்
இல்லாமல் நெருப்பை நிலவு வீசுவதாலும்,

சிலைபொரு காலுற்று அதனாலே ... பொதிய மலையினின்று
பொருந்தவரும் தென்றல் காற்று (சூடாக) மேலே படுவதனாலும்,

பனிபடு சோலைக் குயிலது கூவ ... குளிர்ச்சியுள்ள சோலையில்
குயில் ஒன்று சோகமாய்க் கூவுவதாலும்,

குழல்தனி யோசைத் தரலாலே ... புல்லாங்குழல் ஒப்பற்ற (சோக)
ஓசையைத் தருவதாலும்,

மருவியல் மாதுக்கு இருகயல் சோர ... உன்னைப் பிரிந்து
தனிமையில் இருக்கும் இந்தப் பெண் தன் இரண்டு கயல் மீன் போன்ற
கண்கள் சோர்வடைய,

தனிமிக வாடித் தளராதே ... தனியே கிடந்து மிகவும் வாட்டமுற்று
தளர்ச்சியுறாமல்,

மனமுற வாழத் திருமணி மார்பத்து ... அவளின் நொந்த மனம்
ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ, உன் அழகிய ரத்ன மணிமாலை
அணிந்த மார்பிடத்தே,

அருள்முருகா உற்று அணைவாயே ... அருளே உருவான
முருகனே, நீ வந்து அவளை இறுக்க அணைவாயாக.

கிரிதனில் வேல்விட்டு இருதொளை யாகத் தொடுகுமரா ...
கிரெளஞ்ச மலைமீது வேலைச் செலுத்தி, அது பெருந் தொளைபட்டு
அழியும்படிச் செய்த குமரனே,

முத்தமிழோனே ... இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகள்
உள்ள தமிழுக்குப் பெருமானே,

கிளரொளி நாதர்க்கு ஒருமகனாகி ... பெரும் ஜோதி ஸ்வரூபனான
சிவபிரானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி,

திருவளர் சேலத்து அமர்வோனே ... லக்ஷ்மிகரம் பொருந்திய சேலம்
என்ற பதியில் வீற்றிருப்பவனே,

பொருகிரி சூரக் கிளையது மாள ... போருக்கு எழுந்த ஏழு
கிரிகளும், சூரனும், அவன் சுற்றத்தாரும் இறக்க,

தனிமயி லேறித் திரிவோனே ... ஒப்பற்ற மயில் வாகனத்தில் ஏறி
உலகை வலம் வந்தவனே,

புகர்முக வேழக் கணபதி யாருக்கு ... புள்ளியை உடைய
யானையின் முகத்தவரான கணபதிப் பெருமானுக்கு

இளைய விநோதப் பெருமாளே. ... இளையவனாகிய அற்புதப்
பெருமாளே.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், தென்றல், குயில், புல்லாங்குழல்,
மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு முதலியவை
தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1287  pg 2.1288 
 WIKI_urai Song number: 938 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem) பாடல் ரா - 1    song R1 


 பாடல் ரா - 2    song R2 

Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 934 - parivuRu nAratRu (sAlem)

parivuRu nAraR Razhalmathi veesac
     cilaiporu kAluR ...... RathanAlE

panipadu sOlaik kuyilathu kUvak
     kuzhalthani yOsaith ...... tharalAlE

maruviyal mAthuk kirukayal sOrath
     thanimika vAdith ...... thaLarAthE

manamuRa vAzhath thirumaNi mArpath
     tharuLmuru kAvuR ...... RaNaivAyE

kirithanil vElvit tiruthoLai yAkath
     thodukuma rAmuth ...... thamizhOnE

kiLaroLi nAthark korumaka nAkith
     thiruvaLar sElath ...... thamarvOnE

porukiri chUrak kiLaiyathu mALath
     thanimayi lERith ...... thirivOnE

pukarmuka vEzhak kaNapathi yAruk
     kiLaiyavi nOthap ...... perumALE.

......... Meaning .........

parivuRu nAraR Razhalmathi veesa: As the moon is radiating fire without any compassion or kindness;

cilaiporu kAluR RathanAlE: as the southerly breeze from Mount Pothigai blows hot;

panipadu sOlaik kuyilathu kUva: as the sole cuckoo in the cool grove sings sadly;

kuzhalthani yOsaith tharalAlE: as the flute blows a note of melancholy;

maruviyal mAthuk kirukayal sOrath: the lonely damsel separated from You has her fish-like eyes filled with fatigue.

thanimika vAdith thaLarAthE: Without letting her debilitate further in her loneliness,

manamuRa vAzha: and to help her sinking heart settle in peace,

thirumaNi mArpaththu aruLmurukA vuRRu aNaivAyE: Oh MurugA with a gracious and hallowed chest, kindly come to her and hug her tightly!

kirithanil vElvit tiruthoLai yAkath thodukumarA: Oh Kumara, You wielded the Spear at Mount Krouncha and split it into two!

muth thamizhOnE: You are the Lord of Tamil language, with its three branches, namely, literature, music and drama.

kiLaroLi nAthark korumaka nAki: You are the unique son of Lord SivA, in the form of the great effulgence,

thiruvaLar sElath thamarvOnE: and You reside in this prosperous place, SElam.

porukiri chUrak kiLaiyathu mALath: The hostile mounts of SUran and he himself, with his entire clan, perished in the war,

thanimayi lERith thirivOnE: and mounting Your matchless peacock, You flew around the world!

pukarmuka vEzhak kaNapathi yArukku iLaiya: You are the younger brother of Lord Ganapathi, with the spotted face of an elephant.

vinOthap perumALE.: You are full of wonders, Oh Great One!


This song has been written in the NAyaka-NAyaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The sea, the moon, Love God, the flowery arrows, the scandal-mongering women, the cuckoo bird, the flute and the breeze are some of the sources which aggravate the agony of separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 934 parivuRu nAratRu - sElam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]