திருப்புகழ் 893 கூரிய கடைக்கணால்  (குறட்டி)
Thiruppugazh 893 kUriyakadaikkaNAl  (kuRatti)
Thiruppugazh - 893 kUriyakadaikkaNAl - kuRattiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தனத்த தான, தானன தனத்த தான
     தானன தனத்த தான ...... தனதான

......... பாடல் .........

கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான
     கோடத னில்மெத்த வீறு ...... முலையாலுங்

கோபவ தரத்தி னாலு மேவிடு விதத்து ளால
     கோலவு தரத்தி னாலு ...... மொழியாலும்

சீரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய்
     சீருறு நுசுப்பி னாலும் ...... விலைமாதர்

சேறுத னினித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயை
     சேர்தரு முளத்த னாகி ...... யுழல்வேனோ

தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்ட னான
     ராவணன் மிகுத்த தானை ...... பொடியாகச்

சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி
     தாதுறை புயத்து மாயன் ...... மருகோனே

வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண
     மாபலி முதற்கொ ணாதன் ...... முருகோனே

வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ரீகை
     வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கூரிய கடைக்க(ண்)ணாலும் மேரு நிகர் ஒப்பதான கோடு
அதனில் மெத்த வீறு முலையாலும்
... கூர்மை கொண்ட
கடைக்கண்ணாலும், மேரு மலை போல மிகவும் மேம்பட்டு எழுகின்ற
மார்பகத்தாலும்,

கோப அதரத்தினாலு(ம்) மேவிடு விதத்துள் ஆல கோல
உதரத்தினாலும் மொழியாலும்
... (இந்த்ரகோபம் என்ற) தம்பலப்
பூச்சி போன்ற சிவந்த வாயிதழ்களாலும், பொருந்தியுள்ள தன்மையில்
ஆல் இலை போன்ற அழகிய வயிற்றாலும், பேச்சினாலும்,

சீரிய வளைக் கையாலும் மேகலை நெகிழ்ச்சியே செய் சீர் உறு
நுசுப்பினாலும் விலைமாதர் சேறு தனில் நித்த(ம்) மூழ்கி
...
சிறந்த வளையல்களை அணிந்த கைகளாலும், மேகலை என்னும்
இடையணியை நெகிழ்ந்து விழும்படிச் செய்கின்ற அழகு அமைந்த
மெல்லிய இடையினாலும், பொது மகளிர் என்கின்ற சேற்றிலே நான்
நாள் தோறும் முழுகி,

நாள் அவம் இறைத்து மாயை சேர் தரும் உளத்தனாகி
உழல்வேனோ
... வாழ் நாளை வீணிலே செலவழித்து, மாயை
பொருந்திய அறிவு கொண்டவனாகித் திரிவேனோ?

தாரணி தனக்குள் வீறியே சமர துட்டனான ராவணன்
மிகுத்த தானை பொடியாக
... பூமிதனில் மிகுந்த அகந்தை
உடையவனாகி போர் செய்யும் துஷ்டனான ராவணனுடைய பெரிய
சேனை பொடிபட்டு அழியுமாறு

சாடும் உவணப் பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை
புயத்து மாயன் மருகோனே
... தாக்கிய, கருடக் கொடியைக்
கொண்ட, பெரிய கரு மேகத்தை ஒத்த உடலையும், தாது மலர்
மாலையை அணிந்துள்ள புயங்களையும் கொண்ட திருமாலின் மருகனே,

வாரணம் உரித்து மாதர் மேகலை வளைக்கை நாண(ம்) மா
பலி முதல் கொள் நாதன் முருகோனே
... (கஜமுகாசுரன் என்ற)
யானையைக் கொன்று அதன் தோலை உரித்து (போர்த்தி), (தாருகா
வனத்து ரிஷி) பத்தினிகளின் இடையணி, கைவளைகள், நாணம் இவை
மூன்றையும் அழகிய பிச்சையால் முன்னாளில் கொண்ட*
சிவபெருமானின் மகன் முருகனே,

வார் உறு தனத்தினார்கள் சேரும் மதிள் உப்பரீகை வாகு
உள குறட்டி மேவு(ம்) பெருமாளே.
... கச்சு அணிந்த மார்பகங்களை
உடைய மாதர்கள் சேர்ந்து வாழும் மதிலையும் மேல் மாடங்களையும்
கொண்ட அழகு வாய்ந்த குறட்டி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும்
பெருமாளே.


* தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானிடத்தில் அன்பு இல்லாதவர்களாகப்
பல வேள்விகளைப் புரிந்து வந்தனர். இவர்கள் செருக்கை அடக்க, திருமால்
மோகினியாகவும், சிவபெருமான் பிச்சை எடுத்தும் அவ்வனத்துக்குச் செல்ல,
முனிவர்கள் மோகினியின் அழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தனர். இசை
பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு ரிஷி பத்தினிகள் அவர்
மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர்
- சிவ புராணம்.


** குறட்டி புதுக்கோட்டைக்கு கிழக்கே 5 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1177  pg 2.1178  pg 2.1179  pg 2.1180 
 WIKI_urai Song number: 897 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 893 - kUriya kadaikkaN (kuRatti)

kUriya kadaikka NAlu mEruni karoppa thAna
     kOdatha nilmeththa veeRu ...... mulaiyAlung

kOpava tharaththi nAlu mEvidu vithaththu LAla
     kOlavu tharaththi nAlu ...... mozhiyAlum

seeriya vaLaikkai yAlu mEkalai nekizhcchi yEsey
     seeruRu nusuppi nAlum ...... vilaimAthar

sERutha niniththa mUzhki nALava miRaiththu mAyai
     sErtharu muLaththa nAki ...... yuzhalvEnO

thAraNi thanakkuL veeRi yEsama rathutta nAna
     rAvaNan mikuththa thAnai ...... podiyAkac

chAdumu vaNappa thAkai needumu kiloththa mEni
     thAthuRai puyaththu mAyan ...... marukOnE

vAraNa muaiththu mAthar mEkalai vaLaikkai nANa
     mApali muthaRko NAthan ...... murukOnE

vAruRu thanaththi nArkaL sEruma thiLuppa reekai
     vAkuLa kuRatti mEvu ...... perumALE.

......... Meaning .........

kUriya kadaikka(N)NAlum mEru nikar oppathAna kOdu athanil meththa veeRu mulaiyAlum: With the sharp corners of their eyes, their prominently bulging bosom looking like Mount Meru,

kOpa atharaththinAlu(m) mEvidu vithaththuL Ala kOla utharaththinAlum mozhiyAlum: their reddish lips looking like the insect indrakOpam, their nicely fitting beautiful belly looking like the banyan leaf, their speech,

seeriya vaLaik kaiyAlum mEkalai nekizhcchiyE sey seer uRu nusuppinAlum vilai mAthar sERu thanil niththa(m) mUzhki: their arms wearing fine bangles and their beautiful and slender waist that loosens the waist-band (mEkalai), I am made to drown every day in the slush called whores;

nAL avam iRaiththu mAyai sEr tharum uLaththanAki uzhalvEnO: I am squandering my living days in vain; am I to roam about like this in a state of illusion?

thAraNi thanakkuL veeRiyE samara thuttanAna rAvaNan mikuththa thAnai podiyAka sAdum uvaNap pathAkai needu mukil oththa mEni thAthu uRai puyaththu mAyan marukOnE: He was the most arrogant person on the earth; that evil RAvaNan came to war with his vast army which was devastated into pieces by RAmA who held the staff of Eagle (Garudan); He is Lord VishNu of the complexion of dark cloud, wearing a garland of thAthu flowers on His shoulders; You are His nephew, Oh Lord!

vAraNam uriththu mAthar mEkalai vaLaikkai nANa(m) mA pali muthal koL nAthan murukOnE: He killed the elephant-demon (GajamukAsuran) and peeled off his hide (to wear it as a shawl); He walked amidst the women (consorts of the sages of ThArukAvanam) and made them give Him as alms their waist-band, bangles and modesty*; You are the son of that Lord SivA!

vAr uRu thanaththinArkaL sErum mathiL uppareekai vAku uLa kuRatti mEvu(m) perumALE.: The women in this beautiful town, wearing tight-fitting blouses, gather together in the grand terraces within the fortress walls of KuRatti** which is Your abode, Oh Great One!


* The sages of ThArukAvanam were hostile towards Lord SivA and performed several penances against Him. To get rid of their arrogance, SivA came in the disguise of a beggar and Lord VishNu as an enchantress. When SivA went begging into that forest, the sages were enthralled by the enchantress whom they followed. Losing their mind over the handsome beggar who went about singing songs, the consorts of the sages gave up their modesty, bangles and waist-bands - Siva PurANam.


** KuRatti is located 5 miles east of PudhukkOttai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 893 kUriya kadaikkaNAl - kuRatti

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]