திருப்புகழ் 892 பஞ்ச புலனும் பழைய  (நெடுங்களம்)
Thiruppugazh 892 panjapulanumpazhaiya  (nedungkaLam)
Thiruppugazh - 892 panjapulanumpazhaiya - nedungkaLamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
     தந்ததன தந்ததன ...... தந்ததான

......... பாடல் .........

பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
     பஞ்செனஎ ரிந்துபொடி ...... யங்கமாகிப்

பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி
     பஞ்சவர்வி யன்பதியு ...... டன்குலாவக்

குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ
     கொஞ்சியசி லம்புகழல் ...... விந்துநாதங்

கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை
     கொன்றருள்நி றைந்தகழ ...... லின்றுதாராய்

எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல
     இன்பரச கொங்கைகர ...... முங்கொளாமல்

எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள
     இந்துநுத லும்புரள ...... கங்குல்மேகம்

அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள
     அம்பொனுரு மங்கைமண ...... முண்டபாலா

அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்
     அண்டரய னும்பரவு ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

பஞ்ச புலனும் பழைய (இ)ரண்டு வினையும் பிணிகள் ... (சுவை,
ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஐம்புலன்களும், பழைமையாக
வரும் நல் வினை, தீ வினைகளும், நோய்களும்

பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி பண்டு அற ... பஞ்சு
எரிவது போல எரிந்து, பொடி வடிவம் ஆகி முதலிலேயே அற்றுப் போக,

உடன் பழைய தொண்டர்களுடன் பழகி ... தாமதம் இன்றி பழைய
அடியார்களுடன் பழகி,

பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ ... சுவாதிஷ்டானத்தில்
பிரமனும், மணி பூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் ருத்திரரும்,
விசுத்தியில் மகேசுரரும், ஆக்ஞையில் சதாசிவமும்* விளங்க,

குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலவ ...
(ஆறாவது ஆதாரமாகிய மூலாதாரத்தில்) யானை முக விநாயகரும்
சீருடன் அமர்ந்திட, (ஆக, ஆறு ஆதாரங்களிலும்) அவரவர்க்கு உரிய
உறைவிடங்களில் வந்து விளங்க,

கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம் கொஞ்ச ... (அப்போது)
கொஞ்சுவது போன்ற இனிய சிலம்பின் ஓசை, கழலின் ஓசை, விந்து
சம்பந்தமான நாத ஒலி இவை எல்லாம் இனிமையாக ஒலிக்க,

மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று
அருள் நிறைந்த கழல் இன்று தாராய்
... மயிலின் முதுகின் மேல்
நீ வந்து காட்சி கொடுத்து, என் மனக் கவலையை ஒழித்து, உனது
திருவடியை இன்று தருவாயாக.

எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல ... இடையும்
மெலிவுற்றுச் சுழல, அம்பு போன்ற கண்களும் சுழல,

இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல் எந்த ... இன்பச் சுவை
நிறைந்த மார்பகங்களைக் கரத்தில் கொள்ள முடியாத வகையில்
விம்மி நிற்க,

உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள ... ஆடை குலைய,
அதிவேகத்துடன் அமுத ரசம் பெருக,

இந்து நுதலும் புரள கங்குல் மேகம் அஞ்சும் அளகம் புரள
மென் குழைகளும் புரள
... பிறை போன்ற நெற்றியும் சுருங்க,
இருளும் மேகமும் பயப்படும்படி அவ்வளவு கறுத்த கூந்தல் புரண்டு
அலைய, பொற் குண்டலங்களும் ஊசலாட,

அம் பொன் உரு மங்கை மணம் உண்ட பாலா ... அழகிய பொன்
உருவம் விளங்கும் மங்கை தேவயானையை திருமணம் செய்து
கொண்ட குமரனே,

அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர்
அயனும் பரவு(ம்) தம்பிரானே.
... அன்பர்கள் விளங்கும்
திருநெடுங்களம்** என்னும் வளப்பம் பொருந்திய தலத்தில்,
தேவர்களும், பிரமனும் போற்றும் தம்பிரானே.


* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்மணிபூரகம்அநாகதம்விசுத்திஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்மேல்வயிறுஇருதயம்கண்டம்புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினிநீர்காற்றுஆகாயம்மனம்


வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)ம(கரம்)சி(கரம்)வ(கரம்)ய(கரம்)


தலம்

திருவாரூர்


திருவானைக்காதிரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்திருக்காளத்திகாசி
(வாரணாசி)

திருக்கயிலை
கடவுள்

விநாயகர்


பிரமன்திருமால்ருத்திரன்மகேசுரன்சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்
** நெடுங்களம் திருச்சிக்கு அடுத்த திருவெறும்பியூர் ரயில் நிலையத்துக்கு
கிழக்கே 7 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1175  pg 2.1176  pg 2.1177  pg 2.1178 
 WIKI_urai Song number: 896 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 892 - panja pulanum pazhaiya (nedungkaLam)

panchapula numpazhaiya raNduvinai yumpiNikaL
     panchenae rinthupodi ...... yangamAkip

paNdaRavu danpazhaiya thoNdarkaLu danpazhaki
     panchavarvi yanpathiyu ...... dankulAvak

kuncharamu kankuNamo danthavanam vanthulava
     konchiyasi lampukazhal ...... vinthunAtham

konchamayi linpuRamel vantharuLi yenkavalai
     konRaruLni Rainthakazha ...... linRuthArAy

enchiyidai yunchuzhala ampuvizhi yunchuzhala
     inparasa kongaikara ...... mumkoLAmal

enthavudai sinthapela minchiyamu thampuraLa
     inthunutha lumpuraLa ...... kangulmEkam

anchumaLa kampuraLa menkuzhaika LumpuraLa
     amponuru mangaimaNa ...... muNdabAlA

anparkula vunthirune dungaLava Lampathiyil
     aNdaraya numparavu ...... thambirAnE.

......... Meaning .........

pancha pulanum pazhaiya (i)raNdu vinaiyum piNikaL: The five senses (namely taste, light, touch, sound and smell), the deeds of the past, namely good and bad ones, and diseases

panchu ena erinthu podi angamAki paNdu aRa: are all scorched away like the burning cotton and smashed to smithereen right at the beginning;

udan pazhaiya thoNdarkaLudan pazhaki: without any delay, relationship is established with Your old devotees;

panchavar viyan pathi udan kulAva: with BrahmA, presiding at the centre of swAdhishtAnam, VishNu at maNipUragam, Rudran at anAhatham, mahEswaran at visudhdhi and SadAsivan at AgnjA*,

kunchara mukan kuNamodu antha vanam vanthu ulava: (at the sixth centre, mUlAdhAram) the elephant-faced VinAyagar is seated with relish; (thus in all the six KuNdalini Centres) the appropriate deities are seated;

konchiya silampu kazhal vinthu nAtham koncha: with the lilting and nice jingle of the anklets, the sound of kazhal (another type of anklet) and the musical resonance of the union of SivA and Sakthi,

mayil inpuRa mel vanthu aruLi en kavalai konRu aruL niRaintha kazhal inRu thArAy: You kindly appear before me, mounted on the peacock, destroying my anguish and blessing me with Your hallowed feet!

enchi idaiyum suzhala ampu vizhiyum suzhala: Her slender waist began to rotate; her arrow-like eyes rolled about;

inpa rasa kongai karamum koLAmal entha: her sweet bosom enlarged firmly beyond the grip of the hand;

udai sintha pelam minchiya amutham puraLa: her clothes became dishevelled; her sweet saliva oozed rapidly;

inthu nuthalum puraLa kangul mEkam anchum aLakam puraLa men kuzhaikaLum puraLa: her crescent-like forehead became wrinkled; her dark hair that intimidates darkness and the black cloud, became unkempt and fell off loosely; her golden ear-studs began to swing;

am pon uru mangai maNam uNda bAlA: when You united in matrimony with the beautiful belle, DEvayAnai, of golden complexion, Oh Young Lord!

anpar kulavum thiru nedungaLa vaLam pathiyil aNdar ayanum paravu(m) thambirAnE.: In this fertile place called ThirunedungaLam** where Your devotees assemble, You are seated, being worshipped by the celestials and BrahmA, Oh Great One!


* The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnammaNipUragamanAgathamvisudhdhiAgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-buttonUpper bellyHeartThroatBetween the
eyebrows

Over
the skullElement

Earth


FireWaterAirSkyMind


Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


namasivaya


Temple

ThiruvArUr


ThiruvAnaikkAThiru
aNNAmalai


ChidhambaramThirukkALaththiVaranAsi
(kAsi)

Mt. KailAshDeity

VinAyagar


BrahmAVishnuRUdhranMahEswaranSathAsivan


Siva-Sakthi
Union** ThirunedungaLam is 7 miles east of ThiruveRumpiyUr railway station, adjacent to Tiruchi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 892 panja pulanum pazhaiya - nedungkaLam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]