திருப்புகழ் 880 குறித்த நெஞ்சாசை  (திருக்குரங்காடுதுறை)
Thiruppugazh 880 kuRiththanenjAsai  (thirukkurangkadudhuRai)
Thiruppugazh - 880 kuRiththanenjAsai - thirukkurangkadudhuRaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தனந் தான தனதன
     தனத்தனந் தான தனதன
          தனத்தனந் தான தனதன ...... தனதான

......... பாடல் .........

குறித்தநெஞ் சாசை விரகிகள்
     நவிற்றுசங் கீத மிடறிகள்
          குதித்தரங் கேறு நடனிகள் ...... எவரோடுங்

குறைப்படுங் காதல் குனகிகள்
     அரைப்பணங் கூறு விலையினர்
          கொலைக்கொடும் பார்வை நயனிகள் ...... நகரேகை

பொறித்தசிங் கார முலையினர்
     வடுப்படுங் கோவை யிதழிகள்
          பொருட்டினந் தேடு கபடிகள் ...... தவர்சோரப்

புரித்திடும் பாவ சொருபிகள்
     உருக்குசம் போக சரசிகள்
          புணர்ச்சிகொண் டாடு மருளது ...... தவிர்வேனோ

நெறித்திருண் டாறு பதமலர்
     மணத்தபைங் கோதை வகைவகை
          நெகிழ்க்குமஞ் சோதி வனசரி ...... மணவாளா

நெருக்குமிந்த் ராதி யமரர்கள்
     வளப்பெருஞ் சேனை யுடையவர்
          நினைக்குமென் போலு மடியவர் ...... பெருவாழ்வே

செறித்தமந் தாரை மகிழ்புனை
     மிகுத்ததண் சோலை வகைவகை
          தியக்கியம் பேறு நதியது ...... பலவாறுந்

திரைக்கரங் கோலி நவமணி
     கொழித்திடுஞ் சாரல் வயலணி
          திருக்குரங் காடு துறையுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் நவிற்று சங்கீத மிடறிகள்
குதித்து அரங்கு ஏறு நடனிகள் எவரோடும் குறைப் படும்
காதல் குனகிகள்
... பொருளைக் குறித்த விருப்பம் மனதில் கொண்ட
காமிகள். பாடும் இசை அமைந்த குரலை உடையவர்கள். குதித்து நாடக
மேடையில் ஏறி நடனம் செய்பவர்கள். யாரோடும் தங்கள் குறைகளை
எடுத்துச் சொல்லி காதலை ஊட்டிக் கொஞ்சிப் பேசுபவர்கள்.

அரைப்பணம் கூறு(ம்) விலையினர் கொலைக் கொடும்
பார்வை நயனிகள் நக ரேகை பொறித்த சிங்கார முலையினர்
வடுப் படும் கோவை இதழிகள்
... அரையில் உள்ள பெண்குறியை
விலை பேசி விற்பவர்கள். கொலைத் தொழிலைக் காட்டும் கண் பார்வையை
உடையவர்கள். நகத்தின் குறிகள் பதியப் பெற்ற அழகிய மார்பகத்தை
உடையவர்கள். காயத் தழும்புள்ள கோவைப் பழம் போன்று சிவந்த வாய்
இதழை உடையவர்கள்.

பொருள் தினம் தேடு(ம்) கபடிகள் தவர் சோரப் புரித்திடும்
பாவ சொருபிகள் உருக்கு சம்போக சரசிகள் புணர்ச்சி
கொண்டாடு மருள் அது தவிர்வேனோ
... பொருளைத்
தினந்தோறும் தேடுகின்ற வஞ்சக மனத்தினர். தவசிகளும் சோர்ந்து
போகும்படி செய்கின்ற பாவ உருவத்தினர். (உடலை) உருக்க வல்ல
புணர்ச்சி லீலை செய்பவர்கள். அத்தகையோர்களின் சேர்க்கையைக்
கொண்டு மகிழும் மயக்கத்தை நான் ஒழிக்க மாட்டேனோ?

நெறித்து இருண்டு ஆறு பத மலர் மணத்த பைங் கோதை
வகை வகை நெகிழ்க்கும் மஞ்சு ஓதி வனசரி மணவாளா
...
சுருண்டும், கரு நிறம் கொண்டும், ஆறு கால்கள் கொண்ட வண்டுகள்
மொய்க்கும் பூக்களின் நறு மணம் கொண்டு விளங்கும் புதிய மாலைகள்
பல வகையாக கட்டு தளரும், கரு மேகம் போன்ற கூந்தலை உடைய
வேடப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே,

நெருக்கும் இந்த்ராதி அமரர்கள் வளப் பெரும் சேனை
உடையவர் நினைக்கும் என் போலும் அடியவர் பெரு
வாழ்வே
... கூட்டமாக உள்ள இந்திரன் முதலிய தேவர்களுக்கும்,
வளப்பம் கொண்ட சேனையை உடைய மன்னர்களுக்கும், நினைத்துத்
துதிக்கும் என்னைப் போன்ற அடியார்களுக்கும் பெரிய செல்வமாக
விளங்குபவனே,

செறித்த மந்தாரை மகிழ் புனை மிகுத்த தண் சோலை வகை
வகை தியக்கி அம்பேறு நதி அது பலவாறும் திரைக் கரம்
கோலி
... நிறைந்துள்ள மந்தாரை மலர், மகிழம்பூ இவைகளைக்
கொண்டு நிரம்பி விளங்கும் குளிர்ந்த சோலைகள் பல வகையானவையும்
கலக்கி, நீர் நிறைந்து வருவதுமான ஆறு, பல துறைகளிலும்
அலைகளாகிய கைகளை வளைத்து,

நவ மணி கொழித்திடும் சாரல் வயல் அணி திருக் குரங்காடு
துறை உறை பெருமாளே.
... புதிய மணி வகைகளைக் கொண்டு
தள்ளுகின்ற பக்கங்களையும் வயல்களையும் அணிந்துள்ள
திருக்குரங்காடுதுறை* என்ற தலத்தில் வீற்றிருக்கும பெருமாளே.


* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில்
உள்ளது. தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.
திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1145  pg 2.1146  pg 2.1147  pg 2.1148 
 WIKI_urai Song number: 884 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 880 - kuRiththa nenjAsai (thirukkurangkAduthuRai)

kuRiththanen jAsai virakikaL
     navitRusang keetha midaRikaL
          kuthiththarang kERu nadanikaL ...... evarOdung

kuRaippadung kAthal kunakikaL
     araippaNang kURu vilaiyinar
          kolaikkodum pArvai nayanikaL ...... nakarEkai

poRiththasing kAra mulaiyinar
     vaduppadung kOvai yithazhikaL
          poruttinan thEdu kapadikaL ...... thavarsOrap

puriththidum pAva sorupikaL
     urukkusam pOka sarasikaL
          puNarcchikoN dAdu maruLathu ...... thavirvEnO

neRiththiruN dARu pathamalar
     maNaththapaing kOthai vakaivakai
          nekizhkkuman jOthi vanasari ...... maNavALA

nerukkuminth rAthi yamararkaL
     vaLapperunj chEnai yudaiyavar
          ninaikkumen pOlu madiyavar ...... peruvAzhvE

seRiththaman thArai makizhpunai
     mikuththathaN cOlai vakaivakai
          thiyakkiyam pERu nathiyathu ...... palavARun

thiraikkarang kOli navamaNi
     kozhiththidunj cAral vayalaNi
          thirukkurang kAdu thuRaiyuRai ...... perumALE.

......... Meaning .........

kuRiththa nenju Asai virakikaL navitRu sangeetha midaRikaL kuthiththu arangu ERu nadanikaL evarOdum kuRaip padum kAthal kunakikaL: These are women lusting in their mind with the only desire for wealth. They are gifted with a fine voice to sing. They are capable of jumping on the stage to perform dances. They will complain to anyone about their grievances and flirt with them with their provocative speech to raise their passion.

araippaNam kURu(m) vilaiyinar kolaik kodum pArvai nayanikaL naka rEkai poRiththa singAra mulaiyinar vadup padum kOvai ithazhikaL: They bargain a price for their genital in the pelvic region and sell it. Their eyes betray their ulterior motive to commit murder. They possess beautiful bosom, bearing nail-marks. Their bruised lips are red like the kovvai fruit.

poruL thinam thEdu(m) kapadikaL thavar sOrap puriththidum pAva sorupikaL urukku sampOka sarasikaL puNarcchi koNdAdu maruL athu thavirvEnO: These treacherous women go in search of money every day. They are equipped with such a sinful body that could weaken even the ascetic sages. Their coital acts are capable of melting the bodies. When will I get rid of the blissful delusion of union with such women?

neRiththu iruNdu ARu patha malar maNaththa paing kOthai vakai vakai nekizhkkum manju Othi vanasari maNavALA: Her dark cloud-like hair is adorned by new and slackening garlands strung with fragrant flowers around which coiled-up and dark beetles, with six legs, swarm; She is the damsel of the hunters, and You are that VaLLi's consort, Oh Lord!

nerukkum inthrAthi amararkaL vaLap perum cEnai udaiyavar ninaikkum en pOlum adiyavar peru vAzhvE: You are the great Treasure to the multitude of the celestials headed by Indra, to the many kings who have vast armies and to devotees like me who always contemplate on You in worship, Oh Lord!

seRiththa manthArai makizh punai mikuththa thaN sOlai vakai vakai thiyakki ampERu nathi athu palavARum thiraik karam kOli: The river, filled with water gushing through many cool groves where manthArai and makizham flowers abound, encompasses the groves stirring them with its embracing waves

nava maNi kozhiththidum cAral vayal aNi thiruk kurangkAdu thuRai uRai perumALE.: and pours down nine different types of precious gems on its banks and into the paddyfields adorning this town ThirukkurangkAduthuRai* which is Your abode, Oh Great One!


* North KurangkAduthuRai is at a distance of 4 miles from AyyampEttai, near KumbakONam.
South KurangkAduthuRai, is now simply known as AaduthuRai, which is 2 miles to the east of ThiruvidaimarudhUr, near KumbakONam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 880 kuRiththa nenjAsai - thirukkurangkadudhuRai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]