திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 876 மகர குண்டல மீதே (திருவலஞ்சுழி) Thiruppugazh 876 magarakuNdalameedhE (thiruvalanjuzhi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தந்தன தானா தானன தனன தந்தன தானா தானன தனன தந்தன தானா தானன ...... தனதான ......... பாடல் ......... மகர குண்டல மீதே மோதுவ வருண பங்கய மோபூ வோடையில் மருவு செங்கழு நீரோ நீவிடு ...... வடிவேலோ மதன்வி டுங்கணை யோவா ளோசில கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை மறலி யென்பவ னோமா னோமது ...... நுகர்கீத முகர வண்டின மோவான் மேலெழு நிலவ ருந்துபு ளோமா தேவருண் முதிய வெங்கடு வோதே மாவடு ...... வகிரோபார் முடிவெ னுங்கட லோயா தோவென வுலவு கண்கொடு நேரே சூறைகொள் முறைய றிந்தப சாசே போல்பவ ...... ருறவாமோ நிகரில் வஞ்சக மாரீ சாதிகள் தசமு கன்படை கோடா கோடிய நிருத ரும்பட வோரே வேவியெ ...... யடுபோர்செய் நெடிய னங்கனு மானோ டேயெழு பதுவெ ளங்கவி சேனா சேவித நிருப னம்பரர் கோமான் ராகவன் ...... மருகோனே சிகர வும்பர்கள் பாகீ ராதிகள் பிரபை யொன்றுபி ராசா தாதிகள் சிவச டங்கமொ டீசா னாதிகள் ...... சிவமோனர் தெளியு மந்த்ரக லாபா யோகிகள் அயல்வி ளங்குசு வாமீ காமரு திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... (முதல் 11 வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). மகர குண்டல(ம்) மீதே மோதுவ அருண பங்கயமோ பூ ஓடையில் மருவு செங்கழு நீரோ நீ விடு வடி வேலோ ... மகர மீன் போலச் செய்யப்பட்ட குண்டலத்தின் மேல் வந்து தாக்குவனவாய் தாமரைக் குளத்தில் உள்ள சிவந்த தாமரையோ? பொருந்தி உள்ள செங்கழு நீர்ப் பூவோ? நீ செலுத்தும் கூரிய வேலோ? மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை மறலி என்பவனோ மானோ மது நுகர் கீத(ம்) முகர வண்டினமோ ... மன்மதன் செலுத்தும் பாணமோ? வாள் தானோ? சில கயல் மீன்களோ, கெண்டை மீன்களோ, சேல் மீன்களோ? கொலைத் தொழில் புரியும் யமன் எனப்பட்டவனோ? மானோ? தேன் உண்டு இசை ஒலிக்கும் வண்டின் கூட்டமோ? வான் மேல் எழு நிலவு அருந்து பு(ள்)ளோ மா தேவர் உண் முதிய வெம் கடுவோ தேமா வடு வகிரோ பார் முடிவு எனும் கடலோ யாதோ என ... ஆகாயத்தில் எழுந்து நிலவை உண்ணும் சந்திரமுகிப் புள்ளோ? சிவ பெருமான் உண்ட பழைய கொடிய ஆலகால விஷமோ? தித்திக்கும் மாம்பழ வடுவின் பிளவோ? உலகின் முடியும் பொழுது எழும் ஊழிக் கடலோ? எதுவோ என்று சொல்லும்படி உலவு கண் கொடு நேரே சூறை கொள் முறை அறிந்த பசாசே போல்பவர் உறவு ஆமோ ... உலவுகின்ற கண்களைக் கொண்டு நேரே உயிரைக் கொள்ளை அடிக்கும் வழியைத் தெரிந்துள்ள, பிசாசைப் போன்ற விலைமாதர்களின் உறவு நல்லதோ? நிகர் இல் வஞ்சக மாரீச ஆதிகள் தசமுகன் படை கோடா கோடிய நிருதரும் பட ஓர் ஏய் ஏவியே அடு போர் செய் நெடியன் ... வஞ்சகச் செயல்களில் நிகரற்ற மாரீசன் முதலிய அரக்கர்கள், ராவணன், அவனுடைய கோடிக் கணக்கான சேனைகள் யாவரும் அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திக் கொல்லும் போரைச் செய்த நெடியோனாகிய மாயோனும், அங்கு அனுமானோடே எழுபது வெ(ள்)ளம் கவி சேனா சேவித நிருபன் அம்பரர் கோமான் ராகவன் மருகோனே ... அங்கு அனுமனோடு எழுபது வெள்ளம் குரங்குப் படையால் வணங்கப் பெற்ற அரசனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய ராமனுக்கு மருகனே, சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள் சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனர் தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ ... மேலான தேவர்கள், பகீரதன்* முதலிய அடியார்கள், ஒளி பொருந்திய அருள் பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகளில் வல்ல ஈசானன் முதலியோர், சிவ மெளனிகள், தெளிந்துள்ள மந்திர சாத்திரத்தில் பாயும் மனத்தை உடைய யோகிகள், இவர்கள் யாவரும் பக்கத்தில் விளங்கும் சுவாமியே, காமரு திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே. ... அழகிய நகராகிய திருவலஞ்சுழியில்** வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே. |
* பகீரதன் சூரிய வம்சத்து அரசன். கங்கையை உலகிற்கு வரவழைத்தவன். வல்லக்கோட்டையில் முருகனைப் பூஜித்தவன். |
** திருவலஞ்சுழி கும்பகோணத்துக்கு அருகே உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1131 pg 2.1132 pg 2.1133 pg 2.1134 WIKI_urai Song number: 880 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 876 - magara kuNdala meedhE (thiruvalanjuzhi) makara kuNdala meethE mOthuva varuNa pangaya mOpU vOdaiyil maruvu sengazhu neerO neevidu ...... vadivElO mathanvi dungaNai yOvA LOsila kayalkaL keNdaika LOsE lOkolai maRali yenpava nOmA nOmathu ...... nukarkeetha mukara vaNdina mOvAn mElezhu nilava runthupu LOmA thEvaruN muthiya vengadu vOthE mAvadu ...... vakirOpAr mudive nungada lOyA thOvena vulavu kaNkodu nErE cURaikoL muRaiya Rinthapa sAsE pOlpava ...... ruRavAmO nikaril vanjaka mAree sAthikaL thasamu kanpadai kOdA kOdiya nirutha rumpada vOrE vEviye ...... yadupOrsey nediya nanganu mAnO dEyezhu pathuve Langavi sEnA sEvitha nirupa namparar kOmAn rAkavan ...... marukOnE sikara vumparkaL pAkee rAthikaL pirapai yonRupi rAsA thAthikaL sivasa dangamo deesA nAthikaL ...... sivamOnar theLiyu manthraka lApA yOkikaL ayalvi Langusu vAmee kAmaru thiruva lamchuzhi vAzhvE thEvarkaL ...... perumALE. ......... Meaning ......... (The first 11 lines describe the eyes of the whores). makara kuNdala(m) meethE mOthuva aruNa pangayamO pU Odaiyil maruvu sengazhu neerO nee vidu vadi vElO: Are they the red lotus flowers blooming in the pond, that attack the ear-studs, shaped like the makara fish? Or are they a pair of identical red lilies? Or are they the spear wielded by You, Oh Lord? mathan vidum kaNaiyO vALO sila kayalkaL keNdaikaLO sElO kolai maRali enpavanO mAnO mathu nukar keetha(m) mukara vaNdinamO: Or are they the arrows wielded by Manmathan (God of Love)? Or are they the swords? Or do they belong to the species of fish such as kayal, keNdai or sEl? Or are they none other than the murderous Yaman (God of Death) Himself? Or deer? Or are they a bunch of swarming beetles that hum musically after imbibing honey? vAn mEl ezhu nilavu arunthu pu(L)LO mA thEvar uN muthiya vem kaduvO thEmA vadu vakirO pAr mudivu enum kadalO yAthO ena: Or are they the moon-gobbling chandramuki birds that soar up to the sky? Or are they the old and evil poison AlakAlam imbibed by Lord SivA? Or are they the slit in the baby-mangoes that are sweet? Or are they the sea that gushes at the end of the aeon? They could be anything; ulavu kaN kodu nErE cURai koL muRai aRintha pasAsE pOlpavar uRavu AmO: with such rambling eyes, these whores roam about with the knack of openly grabbing the lives of their suitors; how could a liaison with such devilish women be deemed good? nikar il vanjaka mAreesa AthikaL thasamukan padai kOdA kOdiya nirutharum pada Or Ey EviyE adu pOr sey nediyan: Many demons like MAreechan, who have no equals in treachery, RAvaNan and his millions of armies were entirely annihilated when He wielded a unique arrow in the war; He is the tall and mystical Lord; angu anumAnOdE ezhupathu ve(L)Lam kavi sEnA sEvitha nirupan amparar kOmAn rAkavan marukOnE: He is the King worshipped by HanumAn and his army of seventy million monkeys; He is the Leader of the celestials; and You are the nephew of that Lord RAmA! sikara umparkaL pAkeerAthikaL pirapai onRu pirAsAthAthikaL siva sadangamodu eesAnAthikaL siva mOnar theLiyum manthra kalA pAy yOkikaL ayal viLangu suvAmee: Eminent celestials, along with devotees like Bageerathan*, illustrious and realised souls, persons like EesAnan who are well-versed in all Saivite rituals, the silent sages in the path of Lord SivA and the YOgees who have a resolute mind that dives into the manthrAs of crystal-clear scriptures, have all assembled besides You, Oh Lord! kAmaru thiru valamchuzhi vAzhvE thEvarkaL perumALE.: You are seated in this beautiful town, Thiruvalamchuzhi**! You are the Lord of the celestials, Oh Great One! |
* Bageerathan is a king who hailed from the Sun Dynasty. He is the one who brought the River Gangai down to the earth. He worshipped Lord Murugan in VallakkOttai. |
** Thiruvalamchuzhi is near KumbakONam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |